Homeஅற்புத ஆலயங்கள்பாதாளத்தில் இருப்பவர்களை உச்சிக்கு வரவழைக்கும் தொடர்ச்சியாக விரதம் இருந்து தரிசிக்க வேண்டிய மூன்று விநாயகர் ஆலயங்கள்!!!

பாதாளத்தில் இருப்பவர்களை உச்சிக்கு வரவழைக்கும் தொடர்ச்சியாக விரதம் இருந்து தரிசிக்க வேண்டிய மூன்று விநாயகர் ஆலயங்கள்!!!

விநாயகர் ஆலயங்கள்

1

கன்னியாகுமரி மாவட்டம்-தக்கலை-கேரளாபுரம் கிராமத்தில் இருக்கும் ஸ்ரீ பாதாள விநாயகருக்கு காலையில் அபிஷேக அலங்காரம், ஆராதனை, அர்ச்சனை செய்து நெய் தீபம் போட வேண்டும். இவர் ஆறு மாதம் கருப்பாகவும், ஆறு மாதம் வெள்ளை நிறத்திற்கு மாறும் அதிசய விநாயகர்..அடுத்தது

 விநாயகர் ஆலயங்கள்

2

சிவகங்கை மாவட்டம்-பிள்ளையார்பட்டி கிராமத்தில் கேட்டதை கொடுக்கும் கற்பக விருட்சமானது கோவர்த்தன மலை குன்றாய் அமைந்திருக்கிறது. அதில் எழுந்து அருள்பாலிக்கும் ஸ்ரீ கற்பக விநாயகரை தரிசிக்க வேண்டும். இங்கு அவருக்கு அருகம்புல் மாலை சாற்றி, அர்ச்சனை செய்து மலை குன்றை 16 முறை வலம் வர வேண்டும்…அங்கிருந்து

3

திருச்சி மலைக்கோட்டை உச்சியில் இருக்கும் விநாயகருக்கு பால் அபிஷேகத்திற்கு பால் வாங்கி கொடுத்து தரிசித்து தன் பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.

முக்கிய குறிப்பு :அந்த நேரத்தை குறித்து வைத்துக் கொண்டு ஜாதகம் போட்டுக் கொள்ளவும். அப்போது நடக்கும் தசா புத்தியே இனிமேல் வழிநடத்தும். ஆகவே உங்கள் ஜாதகத்தில் சுப கிரகத்திற்குரிய நட்சத்திர நாளில் நீங்கள் மட்டுமே சுத்தபத்தமாய் இருந்து வழிபாடு நிறைவேற்ற வேண்டும். உடன் நண்பர்களையோ-குடும்பத்தாரையோ அழைத்துச் சென்றால் அவர்களை கவனிக்கும் பொருட்டு உங்கள் நல்ல நேரம் மாறிவிடும். விடுதியில் எங்கும் தங்காது நேராக வீடு வந்து சேரவும். அன்றிலிருந்து உங்கள் வாழ்வில் வியத்தகு மாற்றம் காணலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!