சந்திர தசா
சந்திர தசா 10 வருடங்கள் நடைபெறும் சந்திரதோசாவில் வரும் ஒவ்வொரு புத்திக்கும் பிரத்தியேக பரிகாரத்தை தொகுத்து கொடுத்துள்ளேன்.படித்து பயன் பெறுங்கள்.
சந்திர தசா
சந்திர திசை பத்துவருடங்கள் ஓடும் திங்கட்கிழமை தோறும் அம்பாள் வழிபாடும், பாலாபிஷேகமும் அரிசிதானமும் நன்று. லலிதா சஹஸ்ர நாம பிரயாணம் மிகச்சிறப்பு.
சந்திர தசா -சந்திர புத்தி (10 மாதம்)
திங்கட்கிழமை காலை 6 மணி முதல் 7 மணிக்குள் வயதான பெண்ணுக்கு பச்சரிசி தானம் நல்லது.
சந்திர தசா -செவ்வாய் புத்தி(7 மாதம்)
திங்கட்கிழமை காலை 9மணி முதல் 10 மணிக்குள் தோட்ட வேலை செய்பவருக்கு ஒரு ஈயப் பாத்திரம் வாங்கிக் கொடுக்கவும்.
சந்திர திசை-ராகு புத்தி (1வருடம் 6 மாதம்)
திங்கட்கிழமை காலை 7:30 மணி முதல் 9 மணிக்குள் ஆட்டுக்கு தீவனம் கொடுக்கவும். அல்லது மனநிலை சரியில்லாதவர்களுக்கு உணவு கொடுங்கள்.
சந்திர தசா-குரு புத்தி(1வருடம் 4 மாதம்)
திங்கட்கிழமை காலை 8 மணி முதல் 9 மணிக்குள் அருகிலுள்ள அந்தணர் குடும்பத்திற்கு ஒரு தேங்காய் வாங்கிக் கொடுக்கவும்.
சந்திர தசா-சனி புத்தி(1வருடம் 7 மாதம்)
திங்கட்கிழமை காலை 7 மணி முதல் 8 மணிக்குள் வேலை செய்யும் பெண்ணுக்கு சாதம் கொடுக்கவும்.
சந்திர தசா-புதன் புத்தி(1வருடம் 5 மாதம்)
திங்கட்கிழமை பகல் 12மணி முதல் 1:00மணிக்குள் ஏதேனும் ஐந்தறிவு ஜீவன்களுக்கு முடிந்த தீவனம் கொடுங்கள்.
சந்திர தசா-கேது புத்தி(7மாதம்)
திங்கட்கிழமை எந்த நேரமானாலும் வயதான எளியவர்க்கு பசியறிந்து உணவு அளிக்கவும்.
சந்திர தசா-சுக்கிர(1வருடம் 8 மாதம்)
திங்கட்கிழமை காலை 11 மணி முதல் 12 மணிக்குள் யாருக்காவது சாம்பிராணி அல்லது ஒரு பாக்கெட் சாம்பிராணி வாங்கி கொடுங்கள்.
சந்திர தசா -சூரியபுத்தி(6மாதம்)
திங்கட்கிழமை காலை 10 மணி முதல் 11 மணிக்குள் யாருக்காவது முருங்கைக்காய் அல்லது கொஞ்சம் நெய் வாங்கி கொடுங்கள் அல்லது தீபமேற்ற நல்லெண்ணெய் வாங்கி கொடுக்கலாம்.