துலாம் லக்னத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியங்கள்!

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

துலாம் லக்னம்

ஏழாவதான துலாம் ராசி கால புருஷனின் அடிவயிறு அதாவது வஸ்தியைக் குறிக்கும். இது சிரசால் உதய மாவதால் சிரோதய ராசி எனப்படும். வரயு தத்துவத்தைக் கொண்டது. ஒற்றை ராசி அல்லது புருஷ ராசியாகும். சரராசி.இதில் அடங்கியுள்ள நட்சத்திரங்கள் சித்திரை 3-வது 4-வது பாதங்களும், சுவாதியும், விசாகம் முதல் மூன்று பாதங்களும் ஆகும். இது சுக்கிரன் ஆட்சி வீடும், மூலத்திரிகோண ராசியுமாகும். சனி இங்கு உச்சம் பெறுகிறார். சூரியன் நீசமடைகிறார்.

துலாம் லக்னத்தில் பிறந்தவர்களின் பொதுப்பலன்

இந்த ரா சியில் பிறந்தவர் கற்பனை வளம் மிகுந்தவர். தீர்க்கதரிசனமும் அறிவும் உள்ளவர். எதையும் திறந்த மனதுடன் அணுகும் சமநோக்கு உள்ளவர். நியாயமும் நேர்மையும் உள்ளவர், பரோபகார சிந்தை உள்ளவர். கொள்கையில் தீவிரமான பற்றுள்ளவர். எதிரியை எளிதில் எடைபோடக் கூடியவர். நினைத்ததை உடனே செய்து முடிக்க வேண்டுமென்ற துடிப்புள்ளவர். எத்தவிதத் தடங்கல்களையும் இன்னல்களையும் கண்டு மனம் தளரமாட்டார். கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைவார். அமைதியை விரும்பு பவர். தெய்வ நம்பிக்கையும் மதப் பற்றும் உள்ளவர்.

துலாம்

கிரகங்களின் பலன்கள்

சூரியன்

11-க்குடைய இவர் பாதகாதிபதியாகிறார். லக்னாதிபதி சுக்கிரனுக்கு சத்துரு ஆகையால் பாபி ஆகிறார்: இவர் வலுத்தால் லாபம் கூடும். நல்ல வருமானம் இருக்கும். அதே சமயம் ஆரோக்கியம் கெடும்.

இவர் கெட்டால் லாபமும் குறையும். உடல் நலமும் கெடும். திரிகோணத்தில் அமர்ந்தால் பாதகாதிபத்திய தோஷம் விலகும். லக்னத்தில் நீசமானால் அரசாங்க உத்தியோகம் கிடைக்கும்.

சந்திரன்

10-க்குடையவரானதால் சுபராகிறார். வளர்பிறைச் சந்திரன் கேந்திராதிபத்திய தோஷமடைகிறார். இவர் 10, 4, 5, 9-ல் இருந்தால் தொழிலும் பொருளாதாரமும் ஏற்றம் பெறும். இவர் வலுக்க வேண்டும்.

அரசு அலுவலகம், மீன்வளத்துறை, வேளாண் மைத்துறை, பெட்ரோல் எரிவாய்வு நிறுவனம், கப்பல் மூலம் வாணிபம், உணவு விடுதிகள், பணம் லேவாதேவி ஆகியவை சம்பந்தப்பட்ட துறைகளில் உத்தியோகம் அமையும். நுகர்வோர் பொருள். அரிசி,வெண்ணை பெட்ரோல், மருந்து, முத்து, காய்கறி, க்ஷக்கமரம் ஆகியவற்றின் வியாபாரம் விருத்திபெறும்.

செவ்வாய்

2, 7 ஆகிய இரண்டு வீட்டிற்கும் அதிபதியாகிறார். இரண்டு இடங்களும் மாரகஸ்தானங்களாவதால் பாபியாகிறார். இவர் 6, 8 அல்லது 12-ல் இருந்தால் குடும்ப சுகம் கெடாது. ஆனால் உடல் நலம் பாதிக்கப்படும்.

இவர் தனஸ்தானாதிபதி என்ற முறையில் பொருளாதாரம் வலுக்க உதவுவார். இவர் 7ல் ஆட்சியானால் மனைவியின் ஆயுள்பலம் விருத்தி பெறும்.

புதன்

9,12 ஆகிய இடங்களுக்கு அதிபதியாகும் புதன் சுக்கிரனுக்கு நண்பர். 9ஆம் ஆதிபத்தியத்தால் சுபராகிறார். சுப யோகம், அரசு மூலம் ஆதாயம் ஆகியவைகளை வலுத்த புதன் அளிப்பார்.

இவர் 2, 4, 7, 8, 9, 10, 12ஆம் இடங்களில் இருப்பது நலம்.

குரு

3, 6 ஆகிய இடங்களுக்கு உடைய குரு பாபி என்பது பெரும்பான்மையான கருத்து. ஆனால் 3ஆம் இடம் மூலத்திரிகோணஸ்தானமானதால் சுபர் என்பது சில நூல்களின் கருத்து, இவர் 3-ல் ஆட்சியானல் யோக பலன்களை அளிக்கிறார். இவர் வலுப்பது நன்மை.

இவர் கெட்டால் கடன் தொல்லை, சகோ தரர்களால் தொல்லை சத்துருபாதை ஆகியவைகள் ஏற்படும்.

சுக்கிரன்

லக்கினத்திற்கும் 8ம் இடத்திற்கும் அதிபதியானதால் பூரண சுபராகிறார். 8ஆம் ஆதிபத்தியம் பாதிக்காது. இவர் வலுத்தால் ஆயுள், புகழ், கவுரவும், பொருளாதாரம் ஆகியவை ஏற்றம் பெறும். இவர் கெட்டால் நோய் நொடிகள் தொந்திரவு கொடுக்கும் ஆயுள் பலம் குறையும். இவர் சனியுடன் சேர்ந்து 10-ல் இருப்பது சிறந்த ராஜயோகம் ஆகும்.

சனி

4,5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானதால் முழு சுபராகிறார்.4ல் ஆட்சி பெற்றால் அதிர்ஷ்டமும், யோகமும் விருத்தி பெறும். 5-ல் ஆட்சியானால் தீடீர் தனப்ராப்தி, தீர்க்காயுள், வளமான வாழ்க்கை முன்னேற்றம் ஆகியவற்றை அளிப்பார்.
10, 11ஆம் இடங்களும் நல்லதே.

சுபர் அசுபர் விளக்கம்

சுபர்கள் :

சந்திரன், புதன், சுக்கிரன், சனி ஆகிய நால்வரும் சுபர்கள்

யோகாதிபதி :

சந்திரன் புதன், சுக்கிரன், சனி ஆகிய நால்வரும் யோகாதிபதிகள். 3ம் ஆதிபத்தியத்தால் குருவை யோகாதிபதி எனப்படுகிறது.

சூரியன். செவ்வாய் இருவரும் பாபிகள்.

துலாம்

மாரகாதிபதி:

சரலக்னத்திற்கு 2, 7-க்குடையவர் மாரகாதிபதியாவார்கள். ஆனால் இரண்டு வீட்டிற்கும் அதிபதி செவ்வாயே. இரண்டு மாரகஸ்தானாதிபத்தியங்களும் ஒருவருக்கே வந்தால் அவர் கொல்ல மாட்டார் என்ற கருத்துப்படி செவ்வாய் கொல்லமாட்டார் என்று சந்திர காவிய நூலாசிரியர் கூறுகிறார்.

குரு சூரியன் இருவரே கொல்வார்கள் என்கிறார். இதைத் தாண்டமாலை நூலாசிரியரும் ஒப்புக் கொள்கிறார்.

ஜாதக அலங்கார நூலாசிரியர் செவ்வாய் கொல்வான் என்று சொல்லுகிறார். இது இவரது தனிப்பட்ட கருத்து.

பாவார்த்தரத்னாகரா ஆசிரியர் லக்னாதிபதி சுக்ரன் லக்னத்தில் இருந்தால் மாரகம் செய்வார் என்று கூறுகிறார்.

குரு,சூரியன் ஆகியவர்கள் லக்னத்திற்கு 6,8,12-ல் அல்லது சந்திரனுக்கு 3, 6, 8, 12-ல் அல்லது 2,7-ம் இடத்தில் இருந்தால் தங்களது தசா புத்திகளில் மாரகம் செய்வார் என்பது தெய்வ சிகாமணி ஜோதிடரின் கருத்து.

இன்னும் சில நூல்களில் செவ்வாயின் குணம் கொண்ட கேதுவும் கொல்லக்கூடியவர் என்று சொல்லட்பட்டுள்ளது.

ஆக.

1. குருவும், சூரியனும் முதல் தர மாரகாதிபதிகள்.

2. செவ்வாய், கேது ஆகியவர்களும் கொல்லக் கூடியவர்கள்.

முக்கிய நிகழ்ச்சிகள் நிகழும் காலம்

மாதுர் தோஷம் (தாய்க்கு கண்டம்)

1.சந்திர தசை-ராகு, சனி, சுக்கிர புத்திகள்.

2.செவ்வாய் தசை-ராகு, குரு, புதன், சுக்கிர புக்திகள்.

3.ராகு தசை-ராகு, சனி, சுக்கிர புக்திகள்.

4.குரு தசை – சனி, சுக்கிரன், சந்திர புக்திகள்.

5.கேது தசை-சந்திரன், ராகு, சனி புக்திகள்,

6. சுக்கிர தசை – சந்திரன், ராகு, சனி புக்திகள்.

மேற்படி தசாபுக்திகளில் தாயாருக்கு கஷ்டநஷ்டங்களோ, கண்டாதி பினிகளோ, பிரிவினையோ அல்லது மரணமோ ஏற்படக்கூடும்.

பிதுர் தோஷம்(தந்தைக்கு கண்டம்)

1.சூரியதசை-சனி,ராகு புக்திகள்,

2.ராகு தசை-குரு. சனி, சுக்ரன், சந்திரன் புக்திகள்.

3.குரு தசை – குரு,சனி, சூரிய புக்திகள்

4.சனி தசை-சனி,குரியன், ராகு புக்திகள்.

5.கேது தசை-சுக்கிரன், ராகு, சனி புக்திகள்.

6.புதன் தசை – சூரியன் ,ராகு ,சனி புத்திகள்.

மேற்படி தசா புத்திகளில் தகப்பனார் உடன் விரோதம் பிரிவினை அல்லது தகப்பனாருக்கு கஷ்ட நஷ்டம் கண்டாதி பிணிகள், மரணம் போன்ற அசுப பலன்கள் நடக்கும்.

துலாம்

திருமணம் நடைபெறும் காலம்.

1. ராகு தசை – குரு, புதன் , சுக்கிரன், சந்திரன் புத்திகள்.

2.சனி தசை – சனி ,புதன் ,சுக்கிரன் ,குரு புத்திகள்.

3.புதன் தசை – சுக்கிரன், சந்திரன் ,ராகு ,குரு ,சனி புத்திகள்

4.சுக்கிரதசை-சுக்கிரன் ,சந்திரன்,செவ்வாய்,சனி,புதன் புத்திகள்.

5.சந்திர தசை – குரு, புதன் ,சுக்கிரன் புத்திகள்.

6.செவ்வாய் திசை – குரு, புதன், சுக்கிர புத்திகள்.

மேற்கண்ட தசா புத்திகளில் திருமணம் நடைபெறும்.

திருமணம் தோஷம் ( மனைவிக்கு கண்டம்)

1. ராகு தசை- செவ்வாய், சனி, ராகு, குரு, சுக்கிரன் புத்திகள்.

2. சனி திசை – செவ்வாய், சனி, ராகு, குரு, சுக்கிரன் புத்திகள்.

3. புதன் தசை – செவ்வாய், சனி, ராகு, குரு, சுக்கிரன் புத்திகள்.

4. சுக்கிர திசை – செவ்வாய், சனி, ராகு,குரு சுக்கிர புத்திகள்.

5. சந்திரன் தசை- செவ்வாய், சனி, ராகு, குரு, சுக்கிரன் புத்திகள்.

6. செவ்வாய் திசை- செவ்வாய், சனி ,ராகு ,குரு, சுக்கிரன் புத்திகள்.

மேற்கண்ட தசா புத்திகளில் மனைவியுடன் விரோதம் பிரிவினை அல்லது மனைவிக்கு கண்டாதி பிணிகள் அல்லது மரணம் நேரக் கூடும் மேற்படிதோஷ காலங்களிலேயே திருமணமும் நடக்கலாம் தோஷமும் ஏற்படலாம்.

புத்திர பாக்கியம் ( குழந்தை பிறக்கும் காலம் )

1. புதன் தசை- சந்திரன், செவ்வாய், குரு புத்திகள்.

2. சுக்கிர திசை – சுக்கிரன், ராகு, குரு புத்திகள்.

மேற்கண்ட தசா புத்திகளில் புத்திர பாக்கியம் கிட்டும். குரு தசையில் உண்டானால் தோஷம் ஏற்படும். குரு வலுத்தால் தோஷமேற்படாது.

புத்திர தோஷம் ( பிள்ளைகளுக்கு கண்டம்)

1. குரு தசை – குரு, சுக்கிர புத்திகள்.

2. ராகு தசை – ராகு, கேது, புதன், சுக்கிர புத்திகள்.

3. சூரிய தசை – ராகு, கேது, புதன், சுக்கிர புத்திகள்.

மேற்படி தசா புத்தி காலங்களில் புத்திரனுடன் விரோதமோ பிரிவினையோ அல்லது புத்திரனுக்கு கஷ்ட நஷ்டங்களோ கண்டாதி பிணிகளோ மரணமோ ஏற்படலாம்.

சகோதர தோஷம்

1.சூரிய தசை – செவ்வாய், ராகு, குரு புத்திகள்.

2. குரு தசை – சனி, கேது, சுக்கிரன், செவ்வாய்,ராகு புத்திகள்.

3. ராகு தசை – சனி, புதன், சுக்கிரன், செவ்வாய், புத்திகள்.

4. கேது தசை – கேது ,செவ்வாய்,ராகு, குரு புத்திகள்.

மேற்படி தசா புத்திகளில் சகோதரனுடன் விரோதமோ பிரிவினையோ அல்லது சகோதரனுக்கு கஷ்ட நஷ்டங்கள் கண்டாதி பிணிகள்,மரணமோ ஏற்படலாம்.

துலாம்

மாரகம் (மரணம்)

1. சூரிய தசை – செவ்வாய், ராகு, குரு, புதன், கேது புத்திகள்.

2. குரு தசை – செவ்வாய், ராகு,குரு, புதன், கேது புத்திகள்.

3. செவ்வாய் திசை – செவ்வாய், ராகு, குரு, புதன், கேது புத்திகள்.

4. சனி திசை – செவ்வாய், ராகு, குரு, புதன், கேது புத்திகள்.

5. கேது திசை – செவ்வாய், ராகு, குரு, புதன், கேது புத்திகள்.

மேற்படி தசா புத்திகளில் கஷ்ட நஷ்டங்கள், வழக்குகள், அவமானம், பிணி, பீடைகளோ மரணமோ ஏற்படலாம்.

செவ்வாய், சந்திரன் கேந்திரத்தில் உச்சம் பெற்றவர். மகரம், ரிஷபத்தில் உள்ளவர்கள் கொல்ல மாட்டார்கள்.

யோக காலங்கள்

1. புதன் தசை – சுக்கிரன், சந்திரன், சனி புத்திகள்.

2. சந்திர தசை- செவ்வாய், ராகு, சனி, புதன் புத்திகள்.

3. குருதசை – சனி, சுக்கிரன், சந்திரன், செவ்வாய் புத்திகள்.

4. சனி திசை- புதன், சந்திரன், சுக்கிரன் புத்திகள்.

5. சுக்கிர தசை – 1/2 பாகம்.

6. செவ்வாய் தசை- 1/3 பாகம்.

7. ராகு தசை பிரபல யோகத்தை அளிக்கும் ஆனால் ராகு கெடக்கூடாது.

துலாம்

யோக கிரக அமைப்புகள்

1. புதனும் சந்திரனும் கூடினால் யோகம் இவர்கள் மிதுனத்தில் கூடினால் பிரபல ராஜயோகம்.

2. சூரியன், சந்திரன், செவ்வாய், சனி, புதன் ஆகிய ஐவரும் கூடினால் யோகம்.

3. சூரியன், புதன், சுக்கிரன் மூவரும் துலாத்தில் கூடினால் யோகம்.

4. ரிஷபத்தில் குரு, மிதுனத்தில் சனி, சிம்மத்தில் செவ்வாயுடன் புதனும் கூட யோகம்.

5. சனி உச்சம்,சந்திரன் ஆட்சியானால் யோகம்.

6. 3, 6 ,11-ல் ராகு இருந்தால் யோகம்.

7. நாளில் செவ்வாய் உச்சம் பெற்றால், அல்லது சனியோடு சேர்ந்தால் யோகம்.

8. லக்னத்தில் சுக்கிரன், 6-ல் சந்திரன், குரு கடகத்தில் உச்சம் பெற்றால் யோகம்.

9. சனியும் சுக்கிரனும் 10ல் இருக்க யோகம்.

10. சூரியன் சனி புதன் மூவரும் செவ்வாயுடனோ, சந்திரனுடனோ சேர்ந்தால் யோகம்.

11. சுக்கிரன், சனி, புதன் மூவரும் லக்னத்தில் இருக்க,சந்திரனும் செவ்வாயும் ஏழில் இருந்தால் புதன் தசை ராஜ யோகம்.

12. லக்னத்தில் சந்திரனும் ஆறு அல்லது எட்டில் உருவம் இருந்தால் சனி திசை யோகம் என்று பாவார்த்த ரத்தினகாராவில் சொல்லப்பட்டுள்ளது.

13. சனி உச்சம், சந்திரன் ஆட்சி, 5ல் புதனும் சுக்கிரனும் இருக்க யோகம்.

14. சுக்கிரனுக்கு 2,3,4ல் சுப கிரகங்கள் இருக்க யோகம்.

15. சந்திரனும் புதனும் கூடி லக்னத்திலோ, 4லிலோ இருந்தால் யோகம்.

16. லக்னம் முதல் நான்கு கேந்திரங்களிலும் கிரகங்கள் இருக்க யோகம்.

17. சனியும், புதனும் கூடி லக்னம், 4 அல்லது 10ல் இருக்க யோகம்.

18. 7.ல் செவ்வாய் ஆட்சி, புதன், சுக்கிரனுடன் சேர்ந்து 9-ல் ஆட்சியானால் யோகம்.

19. செவ்வாய், சுக்கிரன், புதன் மூவரும் லக்னத்தில் இருக்க யோகம்.

20. 2, 9-பதுக்குடையவர்கள் பரிவர்த்தனையானால் யோகம்.

21. லக்னத்தில் சனியும் சுக்கிரனும் இருக்க மகரத்தில் செவ்வாய் உச்சமானால் யோகம்.

22. சூரியன், செவ்வாய், புதன் மூவரும் கூடி 7 அல்லது 9 அல்லது 11-ல் இருக்க யோகம்.

23. சூரியன், செவ்வாய், குரு, சனி நால்வரும் உச்சம் பெற்றால் சிறந்த ராஜயோகம் கோடீஸ்வரன்.

துலாம்

1.புதன், சுக்கிரன் ,செவ்வாய் சேர்க்கை லக்னத்தில்.

2.1,9பதுகுடையவர்கள் சேர்க்கை லக்னத்தில். தீர்க்க ஆயுள், தெய்வ பயம்,

3.இரண்டில் சனி, குரு பார்வை வாக்கு வன்மை.வக்கீல்.

4.எட்டில் குரு உலகப்புகழ்.

5.சுக்கிரன் செவ்வாய் கூட்டு ராஜவிர்த்த யோகம், தேசத் தலைவர், கஜகேசரி யோகம், பஞ்சான யோகம்,

6.பத்தாமிடம் முதல் இரண்டாம் இடம் வரை கிரகமாலிகா யோகம்.

Leave a Comment

error: Content is protected !!