ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2024-கும்பம்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

அனைவருக்கும் ASTROSIVA வின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!!

இந்த 2024 ஆம் வருடம் பிறக்கும் நேரமான 31.12.2023 நள்ளிரவு 12 மணிக்கு (மார்கழி மாதம் 15-ம் தேதி )மேஷத்தில் குரு, சிம்மத்தில் சந்திரன், கன்னியில் கேது, விருச்சகத்தில் புதன், சுக்கிரன்; தனுசில் சூரியன், செவ்வாய் ;கும்பத்தில் சனி, மீனத்தில் ராகு என்கின்ற கிரக அமைப்புகளில் புத்தாண்டு பிறக்கிறது.

எத்தகைய பிரச்சனை வந்தாலும் சாமர்த்தியமாக சமாளிக்கும் கும்ப ராசி அன்பர்களே!!! உங்கள் ராசிக்கு 7ம் வீட்டில் சந்திரன் இருக்கும்போது இந்த புத்தாண்டு பிறக்கிறது.

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2024

வீட்டில் சந்தோஷ தென்றல் வீச ஆரம்பிக்கும், அது புயலாக மாறிவிடாமல் இருக்க விட்டுக்கொடுத்தல் அவசியம். குறிப்பாக விசேஷங்கள் நடக்கும் சமயத்தில் வெட்டி பந்தாவும், வீண் ஆடம்பரமும் தவிர்ப்பது முக்கியம். உறவுகள் யாரிடமும் வன்மம் காட்ட வேண்டாம். வாழ்க்கை துணையால் உங்கள் வாழ்க்கையில் வசந்தம் வரத் தொடங்கும். பணவரவு சீராக இருக்கும். செலவுகளை சுப செலவாக்கி சேமிப்பது தான் புத்திசாலித்தனம். கொடுக்கல் வாங்கல் எதையும் உடனுக்குடன் குறித்து வைப்பது அவசியம் நிதானம் தவறாமல் இருந்தால் களிப்பு சிதறாமல் இருக்கும்.

பெண்களுக்கு சீரான நன்மைகள் ஏற்படும். வீண் சினமும் வேண்டாத உணர்ச்சி வசப்படலும் தவிர்த்தால் வளமும் நலமும் எதிர்காலத்திலும் தொடரும். உங்கள் மேல உண்மையான அன்பு அக்கறை உள்ள குடும்ப உறுப்பினர்கள் சொல்லும் ஆலோசனைகளை அலட்சியப்படுத்துவது கூடாது. மணப்பேறு நிச்சயம் கைகூடிவரும். மகப்பேறுக்காக காத்திருப்பவர்கள் கனவுகள் நிச்சயம் நனவாகும். எல்லாமே தெரியும் என்கிற எண்ணத்தை தவிர்த்தால் எல்லா விதத்திலும் நன்மையே ஏற்படும்.

உயர்வுகள் வரக்கூடிய உன்னதமான ஆண்டாக இந்த ஆண்டு இருக்கும். அதே சமயம் எதிலும் நிதானமும் கவனமும் முக்கியம். பணியிடத்தில் உங்கள் மனம் போல் ஏற்றமும் மாற்றமும் வரும். அதே சமயம் மறைமுக எதிரிகள் பலம் கூடும் என்பதால் எதிலும் கவனம் முக்கியம். உங்கள் பொறுப்புகளை பிறரை நம்பி ஒப்படைக்க வேண்டாம். உங்களுக்கு கீழான பதவியில் உள்ள யாரையும் உதாசீனப்படுத்த வேண்டாம். பணத்தை கையாளும் பொறுப்பில் உள்ளவர்கள் கவனச் சிதறலை தவிருங்கள். பணியிட ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். பொறுப்பு உணர்ந்து செயல்பட்டால் உங்கள் பெருமை உயரும். சினத்தை தூண்டும் படி யாராவது நடந்து கொண்டாலும் சிரித்தபடியே நகர்ந்து விடுங்கள்.

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2024

வருட ஆரம்ப முதல் 30.04.2024 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் நிற்பதால் கடினமாக உழைத்து, இலக்கை எட்டிப் பிடிப்பீர்கள். சுப செலவுகளும் பயணங்களும் அதிகரிக்கும். ஆனால் எதிர்பார்த்த வகைகளில் பணம் வரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். வெளிநாடு செல்வீர்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகனுக்கு நல்ல வரன் அமையும்.

குருபகவான்01.05.2024 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் அமர்கிறார். எனவே மன உளைச்சல், மறைமுக எதிர்ப்பு, வீண் விமர்சனம் மூட்டு வலி, சிறு சிறு அவமானங்கள் வரக்கூடும். எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். அதே நேரம் சிறுசிறு அனுபவங்கள் உங்களுக்கு நல்லதொரு பாடமாகவே அமையும்.

இந்த வருடம் முழுக்க ராசிக்கு 2-ம் வீட்டில் ராகுவும், 8ம் வீட்டில் கேதுவும் அமர்கிறார்கள். ஆகவே அவசர முடிவுகளை தவிர்க்க பாருங்கள். பேச்சுகளால் வீண் அபவாதங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆகவே வீண் விமர்சனங்களை தவிர்க்க வேண்டும். அளவுடன் பேச வேண்டும். குடும்பத்தில் அவ்வப்போது கூச்சல் குழப்பங்கள் வந்து நீங்கும். பிள்ளைகளை அவர்களின் போக்கிலேயே சென்று திருத்த பாருங்கள். அடுக்கடுக்கான செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறுவீர்கள்.

கேதுவின் நிலை தேவையற்ற சஞ்சலத்தை உருவாக்கும். வீண் கவலைகளும் மனதை வாட்டும். தெய்வ வழிபாடு மனதுக்கு நிம்மதி அளிக்கும்.

வருடம் முழுக்க ஜென்ம சனி தொடர்வதால் பழைய பிரச்சினைகள் தலைதூக்கும். கணவன் மனைவிக்குள் சின்ன சின்ன சண்டைகள் வந்து போகும். பெரிதாக்க வேண்டாம். எதிராளி அடிக்கடி வாய்தா வாங்குவதால் வழக்கில் தீர்ப்பு தள்ளி போகும். பெரிய பதவியில் இருப்பவர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். பணவரவு இருந்தாலும் வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

பலன் தரும் பரிகாரம்

ஒரு முறை திருப்பதி சென்று அந்த வேங்கடவனை தரிசித்து விட்டு வாருங்கள் வருடம் முழுக்க இன்பமாய் இருக்கும்.

மொத்த பலன்: கடின உழைப்பு பின் வெற்றி

Leave a Comment

error: Content is protected !!