இமயமலை வைஷ்ணவி தேவி அம்மன்
வரலாறு
வைஷ்ணவி தேவி அம்மன் ஆலயம் வட நாட்டில் இமய மலையில் இருக்கிறது. இவ்வாலயம் சக்தி பீடமாக விளங்குகிறது. இவள் மகாலட்சுமியின் அம்சமாக விளங்குகிறாள்.
சிறப்பு
வைஷ்ணவ தேவி வைஷ்ணவர்களின் இஷ்ட தெய்வமாக விளங்குகிறாள். மாங்கல்யம் நிலைக்கவும் அருள்பாலிக்கிறாள். வைஷ்ணவ தேவியின் இன்னொரு பெயர் செல்வநாயகி ஆகும். செல்வநாயகி என்ற பெயரே இப்பொழுது செல்லாயி, செல்லாத்தம்மன் என்று கிராமப்புறங்களில் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள். மகாலட்சுமி புராணத்தில் தாயார் கிராமந்தோறும் நான் செல்லியம்மன் ஆக வீற்றிருந்து என்னை வழிபடும் மக்களுக்கு அருள் மழை பொழிவேன் எனகூறுகின்றாள்.
இன்று நம்முடைய பல குடும்பங்களில் தங்களுடைய குழந்தைக்கு மகாலட்சுமியின் நினைவாக வைஷ்ணவி என்று பெயரிட்டு மகிழ்கின்றனர்.
பரிகாரம்
வெள்ளிக்கிழமை தோறும் வைஷ்ணவி அம்மனை மனம் உருகி பிரார்த்தனை செய்து தேவியின் திருவுருவப் படத்திற்கு பலவித மலர்களால் அலங்காரம்,ஆராத்தி பூஜை செய்து வழிபட்டு வர நமக்கு வைஷ்ணவிதேவி நல்லருளை தந்தருள்வார்
ஜாதகம் தொடர்பான தங்களின் கேள்விகளை கீழ்காணும் Telegarm குழுவில் இணைந்து தெரிவிக்கலாம் …
வழித்தடம்
வடநாட்டில் உள்ள ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கட்ரா என்னும் மாவட்டத்தில் இத்தலம் உள்ளது.
Google Map: