வசியமுகி அம்மன்
வசியமுகி அம்மன் வரலாறு
அம்மன் வழிபாடு என்பது திராவிட கலாச்சாரத்தின் தொன்று தொட்டு வரும் ஒன்றாகும். தெய்வ வழிபாடு என்பது ஆரம்ப காலகட்டத்தில் இயற்கையை வழிபடுவதும், நம் முன்னோர்களுக்கும் மற்றும் மகான்களுக்கும் சமாதி அமைத்து வழிபடுவதும், பின்பு கல்லை நிறுத்தியும் வழிபாடு செய்து வந்தோம்.
அதன் பிறகே உருவ வழிபாடு தோன்றியது பின்பு பல்வேறு புராணங்களில் ஆதாரங்களின்படி சிற்பிகளால் உருவங்கள் செதுக்கப்பட்டு நாம் அவற்றை முறையாக வழிபட தொடங்கினோம்
சிறப்பு:
பல்வேறு ரூபங்களில் வீற்றிருக்கும் அம்மனில் வசியமுகி அம்மனை நாம் வழிபடுவது நமக்கு நல்ல உடல் தேஜஸ்ஸையும் ,உடல் ஆற்றலையும் கொடுக்கும்.
குறிப்பாக பொதுஜன ஆதரவு வேண்டுவோர் மற்றும் கலைத் துறையினர் இந்த வசியமுகி அம்மனுக்கு சந்தனக் காப்பிட்டு மலர்களால் அலங்காரம் செய்து வெள்ளிக்கிழமைதோறும் தீபமேற்றி வழிபட நமக்கு ஜன வசியம், தன வசியம் என்றென்றும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
குறிப்பாக சென்னைக்கு அருகில் உள்ள ரத்தினமங்கலம் என்னும் இடத்தில் 108 அம்மன் இல் ஒரு அவதாரமாய் குடிகொண்டுள்ளார்
வழித்தடம்:
சென்னை புறநகர் வண்டலூர் கேளம்பாக்கம் சாலை வழித்தடத்தில் ரத்தினமங்கலம் கிராமத்தில் இத்தலம் அமைந்துள்ளது.