ஜாதகத்தில் உறவு முறைகளை அறிவது எப்படி ?
தந்தைவழி உறவுகளை அறிதல்:
ஜனன ஜாதகத்தில் லக்னத்திற்கு ஏழாவது பாவம் அந்த ஜாதகரின் தாத்தாவின் சகோதரரை குறிக்கும் (தாத்தாவின் இளைய சகோதரரை குறிக்கும்) 5வது பாவத்திற்கு 3வது பாவமாகும்.
ஜனன ஜாதகத்தில் முதல் பாவம் இந்த ஜாதகரின் தந்தையின் தாத்தாவை குறிக்கும். (தந்தை 9வது ராசி அதற்கு 5வது ராசி முதல் பாவம்)
ஜனன ஜாதகத்தில் லக்னத்திற்கு பதினோராவது பாவம் அந்த ஜாதகரின் சித்தப்பாவை குறிக்கும். (9வது ராசிக்கு 3வது ராசியாகும்)
ஜனன ஜாதகத்தில் லக்னத்திற்கு ஐந்தாவது பாவம் அந்த ஜாதகரின் சித்தப்பாவின் மனைவியைக் குறிக்கும்( 11வது ராசிக்கு 7வது ராசியாகும்)
ஜனன ஜாதகத்தில் மூன்றாவது பாவம் அந்த ஜாதகரின் சித்தப்பாவின் குழந்தைகளை குறிக்கும்(11வது ராசிக்கு 3வது ராசியாகும்)
ஜனன ஜாதகத்தில் மூன்றாவது பாவம் அவரது மைத்துனரின் மனைவியைக் குறிக்கும் (9வது ராசிக்கு 7வது ராசியாகும்)
ஜனன ஜாதகத்தில் ஒன்பதாவது பாவம் அவரது மனைவியின் இளைய சகோதரியை குறிக்கும். அதாவது மைத்துனியை குறிக்கும். (7வது ராசிக்கு 3வது ராசியாகும்)
ஜனன ஜாதகத்தில் மூன்றாவது பாவம் அவரது மைத்துனியின் கணவனை குறிக்கும். (9வது ராசிக்கு 7வது ராசியாகும்)
ஜனன ஜாதகத்தில் ஒன்பதாவது பாவம் அவரது இரண்டாவது மனைவியை குறிக்கும். (7வது ராசிக்கு 3வது ராசியாகும்)
ஜனன ஜாதகத்தில் பதினோராவது பாவம் அவரது மூன்றாவது மனைவியை குறிக்கும். (9வது ராசிக்கு 3-வது ராசியாகும்)
மகன் மற்றும் மகள் வழி உறவுகள்:
ஜனன ஜாதகத்தில் ஐந்தாவது பாவம் அவரது மகன் அல்லது மகளை குறிக்கும்.
ஜனன ஜாதகத்தில் பதினொன்றாவது பாவம் அவரது மருமகளை குறிக்கும். அதாவது மகனின் மனைவியை குறிக்கும். (5வது ராசிக்கு 7வது ராசியாகும்)
ஜனன ஜாதகத்தில் பதினோராவது பாவம் அவரது மருமகனை குறிக்கும். அதாவது மகளின் கணவனை குறிக்கும். (5வது ராசிக்கு 7வது ராசியாகும்)
ஜனன ஜாதகத்தில் ஒன்பதாவது பாவம் அவரது பேரன் மற்றும் பேத்தியை குறிக்கும். (5வது ராசிக்கு 5வது ராசியாகும்)
மகன் வழி மற்றும் மகள் வழி வாரிசுகள் இரண்டையும் குறிக்கும்.
ஜனன ஜாதகத்தில் ஏழாவது பாவம் அவரது சம்பந்தியை குறிக்கும் அதாவது மகனின் மாமனார் மற்றும் மகளின் மாமனார் ஆகும் (11வது ராசிக்கு 9-ஆவது ராசியாகும்.)
ஜனன ஜாதகத்தில் இரண்டாவது பாவம் அவரது சம்பந்தி அம்மாளை குறிக்கும். அதாவது மகன் மற்றும் மகளின் மாமியாரை குறிக்கும் (11வது ராசிக்கு 4வது ராசியாகும்)
பெண்ணின் கணவனின் வழி உறவுகள்:
பெண்ணின் ஜனன ஜாதகத்தில் ஐந்தாவது பாவம் கணவனின் மூத்த சகோதரரை குறிக்கும்.
பெண்ணின் ஜனன ஜாதகத்தில் பதினோராவது பாவம் அந்தப் பெண்ணின் கணவனின் மூத்த சகோதரன் மனைவியை குறிக்கும்.
பெண்ணின் ஜனன ஜாதகத்தில் ஒன்பதாவது பாவம் அந்தப் பெண்ணின் கணவனின் இளைய சகோதரரை குறிக்கும்.
பெண்ணின் ஜனன ஜாதகத்தில் மூன்றாவது பாவம் அந்தப் பெண்ணின் கணவனின் இளைய சகோதரனின் மனைவியை குறிக்கும்
பெண்ணின் ஜனன ஜாதகத்தில் ஒன்பதாவது பாவம் அவரது இளைய சகோதரனின் மனைவியை குறிக்கும்
பெண்ணின் ஜனன ஜாதகத்தில் ஒன்பதாவது பாவம் அவரது இளைய சகோதரியின் கணவனை குறிக்கும்
பெண்ணின் ஜனன ஜாதகத்தில் ஏழாவது பாவம் அவரது இளைய சகோதரரின் குழந்தைகளை குறிக்கும்.
கணவன் அல்லது மனைவி வழி உறவுகள்
ஜனன ஜாதகத்தில் ஏழாவது பாவம் அவரது மனைவி அல்லது கணவனை குறிக்கும்
ஜனன ஜாதகத்தில் பத்தாவது பாவம் அவரது மாமியாரை குறிக்கும்
ஜனன ஜாதகத்தில் மூன்றாவது பாவம் அவரது மாமனாரை குறிக்கும்
ஜனன ஜாதகத்தில் ஐந்தாவது பாவம் அவரது மாமனாரின் இளைய சகோதரரை குறிக்கும் அதாவது சின்ன மாமனார்
ஜனன ஜாதகத்தில் ஒன்பதாவது பாவம் அவரது மாமனாரின் சகோதரனைக் குறிக்கும்
ஜனன ஜாதகத்தில் ஒன்பதாவது பாவம் அவரது மனைவியின் இளைய சகோதரரை குறிக்கும் அதாவது மைத்துனரை குறிக்கும்.
தாய் வழி உறவுகள்:
ஜனன ஜாதகத்தில் இரண்டாவது பாவம் அவரது தாய்வழி தந்தையின் இளைய சகோதரரை குறிக்கும்
ஜெனன ஜாதகத்தில் ஆறாவது பாவம் அவரது தாய்மாமனை குறிக்கும்
ஜனன ஜாதகத்தில் 12வது பாவம் அவரது தாய்மாமனின் மனைவியை குறிக்கும்
ஜெனன ஜாதகத்தில் பத்தாவது பாவம் அவரது தாய்மாமனின் குழந்தைகளை குறிக்கும்
ஜனன ஜாதகத்தில் ஆறாவது பாவம் அவரது தாயின் சகோதரியை குறிக்கும் அதாவது சித்தி அல்லது சின்னம்மாவை குறிக்கும்
ஜனன ஜாதகத்தில் 12வது பாவம் அவரது தாயின் தங்கையின் கணவனை குறிக்கும் அதாவது சின்னம்மாவின் கணவர் சித்தப்பாவை குறிக்கும்
ஜனன ஜாதகத்தில் ஆறாவது பாவம் அவரது தந்தையின் மற்றொரு மனைவியை குறிக்கும் அதாவது மாற்றான் தாயைக் குறிக்கும்.
ஜனன ஜாதகத்தில் பத்தாவது பாதம் அவரது தந்தையின் மற்றொரு மனைவியின் குழந்தையை குறிக்கும். அதாவது மாற்றான் தாயின் குழந்தைகளை குறிக்கும்.
சகோதர வழி உறவுகள்:
ஜனன ஜாதகத்தில் பதினொன்றாவது பாவம் அவரது மூத்த சகோதரர் அல்லது மூத்த சகோதரியை குறிக்கும்.
ஜனன ஜாதகத்தில் ஐந்தாவது பாவம் அவரது மூத்த சகோதரரின் மனைவியை அதாவது அண்ணியை குறிக்கும்.
ஜனன ஜாதகத்தில் மூன்றாவது பாவம் அவரது மூத்த சகோதரரின் குழந்தைகளை குறிக்கும் (ஆண் மற்றும் பெண் இருவரையும்).
ஜனன ஜாதகத்தில் மூன்றாவது பாவம் அவரது இளைய சகோதரரை குறிக்கும்.















