7ல் சுக்ரன்
லக்கினத்திற்கு 7 – ல் சுக்கிரன் இருந்தால் இவர் இங்கு இருப்பது கணவன் மனைவிக்கு ஆபத்து அடிக்கடி வரும். இல்லற சுகம் பூர்ணமாகக் கிடைப்பது அரிது. இருந்தாலும் நல்ல அழகன். சொத்து சேர்க்கை ஏற்படலாம். ஆனால் தீயவர் நட்பு , தீய குணம் , கீழ்த்தரமான எண்ணங்கள் நிரம்பி இருக்கும்.
7 – ம் இடம் விருச்சிக ராசியாக இருந்தால் மனைவிக்கு அபாயம் உண்டாகும்.கேது சேர்க்கை இருப்பின் சதா நோய்த் தொல்லை உண்டு.கணவன் மனைவி பிரிந்து வாழ வேண்டிய சூழ்நிலை அடிக்கடி ஏற்பட வாய்ப்புண்டு . அனு சரித்துப் போகவும்.பணக்கார மனைவியாகவும் செல்வமும் செல்வாக்கும் உள்ள குடும்பத்தில் பிறந்தவளாக அமைவாள்.
14-17 வயதிற்குள்ளாகவே , பெண் மோகம் ஏற்பட்டு விடும்.மனைவி இருந்தாலும் பிற பெண்களுடன் உறவு வைத்துக் கொள்ளுதல் , விரைவில் மனைவியை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.பிறர் மனைவியுடன் உறவு கொண்டு , அதனால் பொருள் சேரும் வாய்ப்பும் உண்டு .அதி காலையில் சம்போகம் செய்வதில் விருப்பம் உடையவர்.
காமத் தினால் பொருள் விரையம் , அழகுள்ள மனைவியானாலும் அவளை வெறுப்பார் கொடுமை பேசி நேசம் கொள்வான்.
ஊனம் அடைந்திருந்தாலும் , பெண்களின் மனதைக் கவரும்படியான அழகுள்ளவன்.இவரது தசாபுத்தியில் களத்திர நாசம் அல்லது பிரிவினை , மேகநோய் ஏற்படலாம். இழக்கப்பட்டதை மீண்டும் பலனாகக் கொள்வான்.
ராகு கூடிடில் வம்புக்காரி , வாயாடி , அகங்கார குணம் உள்ள மனைவி அமைவாள்.
கேது கூடிடில் பிறர் மனைவியை விரும்புவான்.
சனியுடன் கூடிடில் அழகற்ற பெண்ணுக்கு கணவனாக அமைவான்.
கன்னி ராசியில் இருப்பின் மனைவிக்கு ஜல கண்டம் உண்டு.
நல்ல உடற்கட்டுள்ள ஆரோக்கிய மனைவியைப் பெறுவான்.பெண்களை திருமணம் செய்து கொள்வதை ஒரு பொழுது போக்காகக் கொள்வார் . தினசரி உடையை மாற்றுவதைப் போல் துர்நடத்தை உள்ள பெண்ணையும் மாற்றிக் கொண்டே இருப்பார்.
சங்கீத ஞானத்தால் பலரை மடக்குவார்.கலைத்துறையில் ஈடுபட்டு படாத பாடுபடுவார். கன்னிப் பெண்களின் மடியில் படுப்பது என்றால் ஏகக் குஷி.
மனைவி வரும் திக்கு-தென் கிழக்கு மூலை
மனைவியின் குணம் : கவர்ச்சி , சிற்றின்ப விரும்பி .
மனைவியின் நிறம் -வெண்மை
மனைவி வரும் தூரம் -சுமார் பத்து மைலுக்குள்
கணவன் அல்லது மனைவியின் தொழில் : நீர் சம்பந்தப் பட்ட ஸ்துக்கள் , வியாபாரி , தங்கம் ,வெள்ளி தொழில்-கலைத்தொழில், உணவு விடுதி,ஆடம்பர பொருள்கள் சம்பந்தப்பட்ட தொழில்.











