Homeஜோதிட குறிப்புகள்சுக்ரன் எந்த பாவத்தில் இருந்தால் என்ன பலன்கள்

சுக்ரன் எந்த பாவத்தில் இருந்தால் என்ன பலன்கள்

சுக்ரன்

சுக்ரன்(sukkiran) ,களத்திரகாரகன், காமசுகத்தை தருபவன் சில ஜோதிட நூல்களில் சுக்கிரன் இருக்கும் பாவத்தை லக்னமாக கொண்டு பலன்களை கணிக்கின்றனர்.பெண்கள் ஜாதகத்தில் சுக்கிரனின் அமைப்பை நன்றாக கவனித்து திருமண பொருத்தங்கள் முடிவு செய்வர்.சுக்கிரன் கலைகளுக்கும், சுகிர்த யோகங்களுக்கும் அதிபதி. இந்த கிரகம் பன்னிரு ராசிகளுள் எங்கிருந்தால் என்ன பலன்கள் என்பதை கவனிப்போம் .

லக்னத்தில் சுக்ரன்

ஒருவர் ஜாதகத்தில் லக்னம் எனும் முதல் பாவத்தில் சுக்ரன் அமைந்தால் அதற்குரிய பலன்கள்.இவர் வீடு வாகன வசதிகளை பெறுவார்,காம விளையாட்டுகளில் மிகுந்த ஈடுபாடு உள்ளவராக இருப்பார்,பெண்களை கவரும் கண்களும், உடலமைப்பும் பெற்றிருப்பார்,உல்லாசபுரியின் சல்லாப சுந்தரனாய் விளங்குவார் ,

2-ம் வீட்டில் சுக்ரன்

சுக்ர கிரகம் இரண்டாம் பாவத்தில் இருக்கப்பெற்றவர்வெற்றிகரமான வாழ்வை பெறுவார்.சிறந்த கவிஞராகவும், சிறந்த எழுத்தாளராகவும், சிறந்த ஓவியராகவும் திகழ்வார்,இவர் சுவையாகப் பேசி பிறரை மயக்கம் ஆற்றல் பெற்றவர்,பெரிய குடும்பத்தை காக்கும் பொறுப்பு இவருக்கு உண்டு,பெண்களுக்காக நிறைய செலவு செய்வார் ,கலைகளில் ஆர்வம் மிகுந்தவர்,

3-ம் வீட்டில் சுக்ரன்

சுக்ரன் மூன்றாம் பாவத்தில் இருக்கப்பெற்றவர் ,எப்போதும் எங்கும் கலகலப்பாக பேசக்கூடியவர்,நாவல்கள், நாடகங்கள், கவிதைகள், கலைகள் ஆகியவற்றில் ஈடுபாடு உள்ளவர்,இவர் தம் மனைவியுடன் அடிக்கடி சச்சரவிடுவார்,உறவினர்களிடம் இருந்து உதவிகள் பெறுவார் ,இவர் சகோதரர்கள் வசதியாக இருப்பர்.

சுக்ரன்

4-ம் வீட்டில் சுக்ரன்

சுக்ரன் நான்காம் பாவத்தில் இருக்கப் பெற்றவருக்கு,வாகன யோகம் அமையும்,மனைவியின் சொத்துக்களை ஏராளமாக பெறுவார்,பலவித வருமானங்களை அடைவார்,நிலபுலன்கள், வீடுகள் ,மகிழ்ச்சிகரமான வாழ்க்கை ஆகியன அமையும்ஆடு ,மாடுகள் பெருகும்,

5-ம் வீட்டில் சுக்ரன் 

சுக்ரன் ஐந்தாம் பாவத்தில் அமையப்பெற்றவர்,சக்தி வழிபாடு செய்வார் அதனால் பல்வேறு யோகங்களை பெறுவார்,அரசாங்கத்தினால் செல்வங்களை பெறுவார் ,யோகாசனங்கள் ,உடற்பயிற்சிகள் ஆகியவற்றில் ஈடுபாடு ஏற்படும்,

6-ம் வீட்டில் சுக்ரன்

சுக்ர கிரகம் ஆறாம் பாவத்தில் அமையப்பெற்றவர்மனைவி மீது பாசம் இல்லாதவராய் இருப்பார்,இவருக்கு இளம் வயதில் திருமணம் ஆகா விட்டால் பிறகு திருமணம் நடப்பது கடினம்,தோல் நோய்கள், சிறுநீரக கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.இவர் தம் பெற்றோரிடம் அளவுக்கு மிகுந்த பிரியம் உள்ளவர் ,பெண்களின் வெறுப்புக்கு ஆளாவார்,பொறாமை ,முன்கோபம் ஆகிய குணங்களை தவிர்ப்பது நல்லதுஇந்த ஆறாம் பாவத்தில் எந்த கிரகம் இருந்தாலும் தீய கிரகங்கள் எங்கிருந்தாவது ஆறாம் இடத்தைப் பார்த்தாலும் ஏதாவது நோய், கடன் போன்ற தொல்லை ஏற்படலாம்.ஆறாம் பாவத்தில் துன்பப்படுபவர்கள் பரிகார பூஜைகள் செய்து நலம் பெறலாம். 

7-ம் வீட்டில் சுக்ரன் 

சுக்கிர கிரகம் ஏழாம் பாவத்தில் இருக்கப்பெற்றவர்ஆண்மை திறமை பெற்றவராக இருப்பார் ,அழகானவராக இருப்பார் ,இவருக்கு வசதியும் அழகு மிகுந்த மனைவியும் அமைவார் ,இவர் எந்த தொழில் செய்தாலும் முன்னேற்றம் உண்டாகும்,இவருக்கு ஆனந்தமயமான குடும்பம் அமையும்,புகழும், செல்வாக்கும் ஏற்படும்.இவருக்கு சபல புத்தி உண்டு. 

8-ம் வீட்டில் சுக்ரன்

எட்டாம்பாவத்தில் சுக்கிர கிரகம் அமையப் பெற்றவர்,இன்சுரன்ஸ்ஏஜன்ட் ஆகவோ, துணி வியாபாரம் செய்பவராகவோ இருப்பார் ,வாசனைப் பொருள் ,எரிபொருள்கள் ஆகியவற்றில் மிகுந்த லாபம் கிட்டும்,இவருக்கு மனைவியின் மூலம் சொத்துக்கள் கிட்டும் வாய்ப்பு ஏற்படும்,

9-ம் வீட்டில் சுக்ரன் 

ஒன்பதாம் பாவத்தில் சுக்கிரன் அமையப் பெற்றவருக்கு,வெளிநாடுகளுக்குப் பயணம் செல்லும் யோகம் உண்டு,வெளிநாட்டில் உள்ள பெண்ணை மணம் செய்து கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது,இவருக்கு கலைகளில் ஆர்வமும் ஈடுபாடும் புகழும் ஏற்படும் ,வீடு, நிலம் ,வாகனம் ஆகிய எல்லா வித வசதிகளும் ஏற்படும்,மனைவி ,மக்கள், நண்பர் உறவினர் ஆகியோர் மூலம் பண லாபம் ஏற்பட வாய்ப்பு உண்டு,எவ்வித சிரமமும் இல்லாமல் பணத்தை மிகுந்த அளவில் ஈட்டும் யோகம் உள்ளவர்,இவரிடம் இரக்ககுணம் தர்மசிந்தனை பெருந்தன்மை ஆகிய நற்குணங்கள் இயற்கை ஆகவே அமைந்திருக்கும்.

சுக்ரன்

10-ம் வீட்டில் சுக்ரன் 

பத்தாம் இடத்தில் சுக்கிரன் அமையப் பெற்றவர்,பெண்களிடத்தில் மிகப் பிரியம் உள்ளவராய் இருப்பார்,அதனால் பல்வேறு லாபங்களை அடைவார்,இவர் சிறந்த வாக்குவன்மை படைத்தவர் ,அதனால் எவருடன் பேசினாலும் அவரை தன்வசம் இழுத்துக் கொள்ளும் ஆற்றல் இவற்றுக்கு உண்டு,பத்தாம் பாவத்தில் சுக்கிரன் இருக்க பெற்றவரை பெண்டிர் மிகுதியாய் நேசிப்பர் ,தாய் ,சகோதரி ,அத்தை ,சிறிய தாயார் ,பாட்டி இவர்களில் எவர் சொத்தாவது இவருக்குக் கிட்ட வாய்ப்பு உண்டு,பிறர் பெண்களுக்கு இவர் எதையும் கொடுக்க தயங்க மாட்டார் ,இவருக்கு அழகும் அன்பும் பண்பாடும் உள்ள மனைவி வாய்ப்பாள்,கல்வித்துறையில் தடங்கல்கள் ஏற்பட்டு பட்டப்படிப்பு பெற வாய்ப்பு கிட்டாது போகலாம் எனினும் இவர் அறிவாற்றலில், ஞானத்தில் சிறந்து விளங்குவார் ,வீடு ,வாகனம், ஆடு ,மாடு ,கோழி ஆகிய வசதியுடன் வாழும் யோகம் இவருக்கு உண்டு ,

11-ம் வீட்டில் சுக்ரன் 

பதினோராம் வீட்டில் சுக்கிரன் அமையப் பெற்றவருக்குமிகுந்த வசதிகள் கிட்டும்,சொத்துக்களை அடையும் யோகமும் உண்டு,கலைத்துறை ஈடுபாடு காரணமாக தீய நண்பர்கள் தொடர்பு ஏற்பட்டு செல்வாக்கை காப்பாற்றிக்கொள்ள கடன் படுவார்,கொடியவர் தொடர்பு ஏற்படும்,பெண்களிடம் பாசமும் இரக்க குணமும் கொண்ட இவர் தம் மனைவியிடம் அன்பும் மரியாதையும் உள்ளவர்,

12-ம் வீட்டில் சுக்ரன்

 பன்னிரெண்டாம் பாவத்தில் சுக்கிரன் அமையப் பெற்றவருக்குதீர்க்காயுள் ,செல்வம், செல்வாக்கு ஆகியன ஏற்படும்,அறநிலையங்கள், பொதுநலச் சங்கங்கள் ஆகியவற்றின் தலைமை பதவி இவரைத் தேடி வரும்,தனிமையை மிகவும் விரும்பும் இவர் தன் இறுதி காலத்தில் மனைவியை பிரிந்து வாழும் தன்மை உள்ளவராய் இருப்பார்,

 தீய பலன்களை தரும் சுக்கிரனின் அமைப்புள்ளவர்கள் கிரக பரிகார பூஜைகள் செய்து நலம் பெறலாம்.

RELATED ARTICLES

2 COMMENTS

  1. ஐயா வணக்கம்…
    பல நல்ல ஜோதிட ஆன்மீக கருத்துக்களை எழுதுகிறீர்கள்.
    ஆனால் இதை சேமித்து வைத்துக் கொள்ள வசதி முன்பு இருந்தது. ஆனால் இப்போது இல்லாமல் இருக்கிறு.
    இது மிகவும் வருத்தமாக இருக்கிறது.

    • வணக்கம் தங்களது கருத்துக்களை நான் பார்த்தேன் நான் முதலில் அதை அனைவரும் சேமித்து வைக்கும்படி வைத்திருந்தேன். ஆனால் நிறைய நபர்கள் அதை அப்படியே காப்பி செய்து அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். ஆகையால் என்னுடைய உழைப்பை பலபேர் எடுப்பதால் நான் அந்த ஆப்ஷனை நீக்கி விட்டேன் நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!