விருச்சிக லக்னம் அல்லது விருச்சிக ராசி
இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கைத் துணை வீடு ரிஷபம் ஆகும்.இதில் சூரியன் , சந்திரன் , செவ்வாய் சார கார்த்திகை , ரோகிணி , மிருகசீரிட நட்சத்திரங்கள் உள்ளன.இவர்கள் மிக சாந்த குணம் உடையவராக அழகுடன் இனிய வார்த்தை உடையவராக இருப்பர்.இங்கு சந்திரன் உச்சமாவதால் தாய்மை உணர்வோடு இருப்பர்.
விருச்சிக லக்ன 7 – ஆம் அதிபதி உச்சமானால் நிறைய பூர்வீகச் சொத்து உடையவராகவும் ஆடம்பரமாகச் செலவு செய்யக் கூடியவராகவும் விவசாய நிலம் நிறைய உடையவராகவும் இருப்பர்.இதுவே 7 – ஆம் அதிபதி நீசமானால் செல்வச் செழிப்பே இல்லாத வராக இருக்கக்கூடும்.
விருச்சிக லக்ன மாமியார் , மிக கோபக்காரராகவும் . கம்பீரமானவராகவும் , எல்லாரும் பயப்படும்படியும் இருப்பார்.இவர்களின் மாமனார் கோழையாகவும் , யாரையாவது சார்ந்து வாழக்கூடியவராகவும் சோம்பேறியாகவும் இருப்பார்.இவர்களின் மாமனார் வீட்டுக்கருகில் வயல் அல்லது தோட்டம் , பூங்கா இருக்கக்கூடும்.மாமனார் வீடு , தெற்கு அல்லது தென் கிழக்கில் இருக்கலாம்.
இ , உ , எ , ஒ , வ , வி , வு , வே , வோ , உ , ரு , ஷ (E,U,A,O,V,R,S)ஆகிய எழுத்துகளில் வாழ்க்கைத் துணையின் பெயர் ஆரம்பிக்கக் கூடும்.