விசாகம் நட்சத்திரம்
விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பலர் சுயநலம் கொண்டவர்கள்.
பேராசை மிக்கவர்கள்.
சிலர் கலகத்தை உண்டாக்குவார்கள்.
மனதில் நினைத்ததை பேசுவார்கள்.
பிறருக்கு அடங்கி நடக்க மாட்டார்கள்.
கொள்கைப் பிடிப்பு உள்ளவர்கள்.
தேடல் குணம் இருக்கும்.
விஞ்ஞானிகளாக இருப்பார்கள்.
உறுதியான மனதுடன் எதையும் செய்வார்கள்.
எதையும் அலசி ஆராய்வார்கள்.
கலைஞர்களாக இருப்பார்கள்.
வாத,விவாதம் செய்வார்கள்.
போராடும் குணம் கொண்டவர்கள்.
நல்ல பணவசதி இருக்கும்.
சில நேரங்களில் இவர்களில் சிலர் செய்யும் செயல்கள் கோமாளித்தனமாக தோன்றும்.
இந்த நட்சத்திரத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு ‘T’ என்ற ஆங்கில எழுத்தில் பெயர் ஆரம்பிக்க வேண்டும்.
யோனி-யானை
கணம்-ராட்சஸ கணம்
நாடி-அனந்த நாடி
அதிபதி-இந்திரன், அக்னி;
கிரகம்-குரு
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நோயால் பாதிக்கப்பட்டால் அது குணமாவதற்கு 3நாளிலிருந்து 13 நாட்கள் ஆகும்.
நோய் குணமாக இந்திரன், அக்னி ஆகியோருக்கான மந்திரத்தை கூற வேண்டும்.
பசு,தங்கம் தானம் அளிக்க வேண்டும்.
நாகலிங்க மரத்தை வழிபட வேண்டும்.
பிறக்கும் பொழுதே ஜாதகத்தில் குரு லக்னத்தில் இருந்தால் நீண்ட ஆயுள் உண்டு. உடல்நிலை நன்றாக இருக்கும்.
குரு சந்திரனுடன் சேர்ந்து கடகம் அல்லது மற்ற வீடுகளில் இருந்தால் அது கஜகேசரி யோகம் உண்டாகும். அதனால் பணம் வசதியுள்ள குடும்பத்தில் பிறப்பார்கள். உடல்நலம் நன்றாக இருக்கும்.
குரு,சனியுடன் 8-ல் இருந்தால் வயிறு சம்பந்தப்பட்ட நோய் வரும்.
குரு செவ்வாயுடன் 6-ல் இருந்தால் காலில் அடிபட வாய்ப்பிருக்கிறது.
குரு, செவ்வாய் சூரியனுடன் 5-ல் இருந்தால் புகழுடன் வாழ்வார்.
குரு 10-ல் இருந்து 2-ல் உள்ள சுக்கிரனை பார்த்தால் வாக்கு சித்தி கொண்டவர்களாக இருப்பார்கள்.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செல்ல வேண்டிய ஆலயம் :
கோயில்: பண்பொழி திருமலை குமாரசுவாமி கோயில்
தல வரலாறு:
பூவன்பட்டர் என்ற அர்ச்சகரின் கனவில் முருகன் தோன்றி, புதையுண்டு கிடக்கும் சிலையை திருமலையில் பிரதிஷ்டை செய்ய உத்தரவிட்டார். அதன்படி, பந்தளமன்னர் கோயில் கட்டினார். மண்டபம் எழுப்புவதற்கான கற்களை, சிவகாமி பரதேசி என்ற முருக பக்தை, மலையடிவாரத்திலிருந்து வாழைமட்டை மூலம் இழுத்துச் சென்ற பெருமையுடையது.
சிறப்பு:
விசாகம் என்றால் “மேலான ஜோதி’. இந்த நட்சத்திரத்தின் ஒளிக்கிரணங்கள் இம்மலையில் படுவதால் விசாக நட்சத்திரத்தினர் வழிபட்டால் வாழ்வில் நல்ல திருப்பம் உண்டாகும்.
இருப்பிடம்:
மதுரையிலிருந்து செங்கோட்டை 155 கி.மீ., அங்கிருந்து 7கி.மீ., தூரத்தில் கோயில்.
திறக்கும்நேரம்: காலை6- மதியம் 1, மாலை 5, இரவு 8.30.