விசுவாவசு வருட தமிழ் புத்தாண்டு பலன்கள் 2025
மேஷம் (கிருத்திகை 2,3,4ம் பாதம்,ரோகிணி ,மிருகசீரிடம்1,2ம் பாதம் )
களத்திரகாரனாகிய சுக்கிரனை ஆட்சி வீடாகக் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு ஜென்ம குருவாக இருந்த குரு பகவான், மே 14ஆம் தேதி முதல் உங்கள் ராசிக்கு 2மிடம் செல்கிறார். மேலும் அக்டோபர் 18ஆம் தேதி அன்று அதிசாரமாக உங்கள் ராசிக்கு 3மிடம்செல்கிறார். பிறகு வக்ரகதியில் டிசம்பர் 5ஆம் தேதி மீண்டும் 2மிடம் வருகிறார்.
ராகு கேதுக்கள் முறையே உங்கள் ராசிக்கு 11 ,5ம் இடங்களில் இருந்து, மே 18ஆம் தேதி முதல் 10,4ம் இடம் சஞ்சாரம் செய்கிறார்கள்.
சனிபகவான் உங்கள் ராசிக்கு 11மிடம் சஞ்சாரம் செய்கிறார்.

இதன் மூலம் இவரிடம் திருமணம் ஆகாதவர்களுக்கு கண்டிப்பாக திருமணம் நடக்கும். வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வெகு காலம் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு மருத்துவ உதவியின் மூலம் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.தொழில் துறையில் எதிர்பார்த்த நல்ல லாபம் கிடைக்கும். வெளிநாட்டு வேலை விரும்புவோர்களுக்கு இவ்வருடம் கண்டிப்பாக வெளிநாட்டு வேலை கிடைக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெறுவர். நல்ல கல்லூரியில் இடம் கிடைக்க பெறுவார்கள்.

படித்த மாணவர்களுக்கு உடனடியாக வேலை கிடைக்கும். பூர்வ புண்ணிய சொத்துக்களில் இருந்த பிரச்சனை தீரும். சகல விஷயங்களிலும் புது முயற்சியில் வெற்றி கிடைக்கும். கடினமான வேலைகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு உண்டு. விரும்பிய இடத்தில் இடமாற்றம் கிடைக்கும்.
பரிகாரம்
ஞாயிற்றுக்கிழமை தோறும் விநாயகருக்கும், ராகு காலத்தில் துர்க்கைக்கும் நல்லெண்ணெய் விளக்கு வைத்து வழிபட்டு வரவும்.
மொத்தத்தில் இந்த வருடம் 80 சதவீதம் நற்பலன்கள் கிடைக்கும் வருடமாக அமையும்.