லக்னத்தின் சிறப்புகள் பற்றிய தகவல்கள்!

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Updated on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

லக்னம்

லக்னத்தின் சிறப்பு

சூரியன் வானமண்டலத்தைச் சுற்றிக்கொண்டே வருகிறார். அவர் குறிப்பிட்ட வட்டமான பாதையில் சுற்றுகிறார். இந்தப் பாதையை ரவீ மார்க்கம் என்று சொல்லுகிறோம். இந்த ரவி மார்க்கத்துக்கு இருபுறமும் 9 டிகிரி அகலமுள்ள வட்டமான இடைவெளி சாகி மண்டலம் 12 சமபாகங்களா கப்பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவும் ராசி என்று அழைக்கப்படுகின்றது. இவையே மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிகளாகும். இந்த 12 ராசிகளையும் சூரியன் 12 மாதங்களில் கடக்கிறார். அதாவது ஒரு ராசியைக் கடக்க எடுத்துக்கொள்ளும் நேரம் ஒரு மாதம்.

பூமி தன் அச்சுத் தண்டில் சுழல்கிறது. ஒரு சுற்றைப் பூர்த்தி செய்ய எடுத்துக் கொள்ளும் நேரம் ஒரு நாள். அதாவது 60 நாழிகை அல்லது 24 மணி நேரம்.அப்படி சுற்றும்பொழுது 12 ராசிகளுக்கும் எதிராக ஒரு ராசிக்கு சுமார் 2 மணி நேரம் அளவில் சுற்றி வருகிறது. ஒரு குழந்தை ஜனனம் ஆகும் பொழுது குழந்தை பிறந்த இடம் எந்த ராசிக்கு எதிராக எத்தனையாவது பாகையில் இருக்கிறதோ அதுவே லக்னமாகும். இது குழந்தை ஜனனமாகும் பொழுது சூரியன் எந்த ராசியில் எத்தனையாவது பரகையில் இருக்கிறாரோ அதிலிருந்து கணக்கிட்டு அறியப்படுகிறது. இதுவே ஜனன லக்கினமாகும். ராசிச் சக்கரத் புதில் ஜனன காலத்தில் உதயமான ராசியில் லக்னத்தை யொட்டி, அந்தச் சமயம் கிரகங்கள் இருக்கும் இடங்கள் அந்தந்த ராசியில் குறிப்பிடப்படுகின்றன. இந்த ராசிச் சக்கரமே ஜாதகமாகும். ஜாதகத்தைக் கொண்டுதான் பலன்கனை அறிய முடியும். இந்தப் பலன்கள் எல்லா லக்னங்களுக்கும் ஒரே மரதிரி இருக்காது.

லக்னம்
  • ஒவ்வொரு லக்னத்திற்கும் தனிப்பட்ட பலன்கள் உண்டு.
  • ஒவ்வொரு ராசியிலும் 21 நக்ஷத்திரம் அடங்கும். ஜனன நக்ஷத்திரங்களுக்கு ஏற்ப, பலன்கள் மாறுபடும்.
  • லக்னத்தை முதலாவதாகிக் கொண்டு 12 ராசிகளும் 12 பாவங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாவமும் குறிப்பிட்ட விஷயங்களைக் குறிக்கும்.

1. லக்னம்:- தேகம், நிறம், தேகஅமைப்பு, ஆயுள், புகழ், ஜீவனம், குணம், சுகம், அழகு ஆகியவை.

2. தனபாவம்:-அதிர்ஷ்டம், தனவிருத்தி, குடும் பம்,கல்வி,வரக்கு,ஆபரணம், முகம், அறிவு, உணவு, வலதுகண் ஆகியவை.

3. சகோதரபாவம்:- கைகள், இளைய சகோதரம் ஆளடிமை, வேலைக்காரர்கள், காது, சிறு பிரயாணங்கள் தைரியம், வெற்றி,எழுத்தாற்றல், ஆயுள் ஆகியவை.

4. சுகஸ்தானம்:- வித்தை, வாகனம், வீடு, சுகம், மாதா, வியாபாரம், பால்வளம், இடமாற்றம், பராக்கிரமம், விரதம், உபவாசம் ஆகியன.

5. புத்திரபாவம் புத்திரர், புத்திரி, தகப்பன் வழிப்பாட்டன், கர்ப்ப உற்பத்தி, மந்திர உபதேசம், புத்தி, தெளிவு, பத்திரிகைத் தொழில், கற்பனை சக்தி புத்தக ஆசிரியர் ஆகியவை.

6.ரோகஸ்தானம்:-அம்மான்,நோய்,பகைவர்கள் தாயாதிகள், பண நஷ்டம், பயம், அவப்பெயர், காரியத் தடங்கல், கடன் ஆகியவை.

லக்னம்

7.களத்திர ஸ்தானம்: விவாகம், மனைவி, சிற்றின்பம், சன்மானம், வியாபாரம், வியாபார கூட்டாளி, மனைவியின் குணங்கள் அந்தஸ்து ஆகியவை..

8. ஆயுள் ஸ்தானம்:- ஆயுள் மரணம் நேரும்விதம், கடன் தொல்லை, தடங்கல், மனவியாகூலம்,வழக்காடல், கோர்ட் விவகாரம் ஆகியவை.

9. பிதுர் ஸ்தானம் :- தகப்பனார், தகப்பன் வழிச்சொத்து,உயர்தர்மம், தர்ம கைங்கர்யம், ஞானப்பெருக்கம், தீர்த்தயாத்திரை. நீண்டதூரப் பயணம், வெளி நாட்டுப் பயணம், திருப்பணிகள் செய்தல், மதப்பற்று ஆகியவை.

10. ஜீவனஸ்தாளம்:–ஜீவனம், அமையும் தொழில்அல்லது உத்தியோகம், பதவி, நாடு, நகரம் அமைத்தல் புகழ், தன்மானம், மரியாதை, அதிகாரம் ஆகியவை.

11. லாப ஸ்தானம்:-மூத்த சகோதரம், பணியாட்கள், இளைய மனைவி, உயர்தர வாகனங்கள், சாஸ்திர அறிவு, சன்மானம் பெறல், செய்தொழிலால் ஏற்படும் லாபம், தாயின் ஆயுள், தந்தையின் இளைய சகோதரர்கள், மகன் அல்லது மகளின் திருமணம் ஆகியவை.

12. விரயஸ்தானம்: சுபச் செலவுகள், அசுப செலவுகள், சயன சுகம், மோட்சம், புத்திரர்களின் ஆயுள் ஆகியவை.

இந்த ராசிகள் ஒவ்வொன்றிற்கும் ஒரு கிரகம் அதிபதியாகிறார். ஒவ்வொரு கிரகமும் தன் வீடு, லக்னத்தில் இருந்து எத்தனையாவது. பாவமோ அந்த பாவத்திற்குச் சொல்லப்பட்டுள்ள பலன்களுக்குக் காரகராகிறார். ஆகையால் லக்கினத்திற்கு ஏற்ப, கிரகங்களின் ஆதிபத்தியம் மாறும்

லக்னம் பிறப்பைக் குறிக்கிறது. பிறப்பு ஜீவனின் ஆரம்பம். மரணம் ஜீவனின் முடிவு. பிறப்பிற்கும் மரணத்திற்கும் இடையிலுள்ள வாழ்நாளைக் கிரகங்கள் தங்கள் ஆதிபத்தியத்திற்கு ஏற்ப கட்டுப்படுத்தி நடத்திச் செல்கின்றன. கிரகத்தின் ஆதிபத்தியத்தை லக்னம் நிர்ணயிக்கிறது ஆக ஒரு ஜாதகத்தின் ஆணிவேர் லக்னம் லக்னத்தை பொறுத்து உள்ளது ஒரு ஜாதகத்தின் மதிப்பு.

Leave a Comment

error: Content is protected !!