காதல் திருமணம்
7-ஆமதிபதி 7-ஆம் வீட்டுடனான 5-ஆமதிபதியின் நெருங்கிய தொடர்பு- இணைவு பார்வை, பரிவர்த்தனை இருப்பின் காதல் திருமணம் உண்டு .
குரு அதிகமாக பாதிப்படைந்து, 7ஆமதிபதி லக்னாதிபதியைவிட பலம்பெற்றும் மற்றும் சனி, செவ்வாய் அல்லது ராகு 9-ஆம் வீட்டிலிருந்தால் காதல் திருமணம் நடக்கும்.
லக்னாதிபதியோ சந்திரனோ, 7-ஆமதி பதியோடு இணைந்து கேந்திரமேறினால் காதல் திருமணம் நடக்கும்.
சந்திரனும் சுக்கிரனும் இணைந்து 7-ல்இருந்தால் காதல் திருமணம் நடக்கும்.
7-ல் சுக்கிரன் இருந்து, செவ்வாயால் பார்க்கப்பட்டால் காதல் திருமணம் நடக்கும்.
செவ்வாய், சுக்கிரன், ராகு இணைந்து7-ல் இருந்தால் காதல் திருமணம் நடக்கும்.
7-ஆமதிபதியோடு சந்திரன் இணைதல் மற்றும் சுக்கிரனை, சனி அல்லது செவ்வாய் பார்த்தல் காதல் திருமணத்தை தரும்.
கலப்புத் திருமணத்திற்கான கிரக இணைவுகள்
- சுக்கிரனும் ராகுவும் இணைந்து 6 அல்லது 11-ல் இருத்தல்;
- சந்திரனும் செவ்வாயும் 6-8-ஆக இருத்தல்;
- சுக்கிரனும் செவ்வாயும் கோணத்தில் அல்லது 12-ல் இருத்தல்;
- துலாம் அல்லது கும்பம் 7-ஆமிடமாகி, அதில் குரு இடம்பெறுதல்;
- 7-ஆமதிபதியுடன் செவ்வாய், ராகு இணைதல்; 5-ஆமிடத்தில் பலமற்ற சந்திரன் இருக்க, 7 மற்றும் 12-ஆமிடங்களில் ஆண் கிரகங்கள் இடம் பெறுதல்;
- 7-ஆமதிபதி சனியுடன் இணைந்து 12-ல் இருத்தல்;
- 7-ஆமதிபதியோடு சந்திரன் இணைதல் மற்றும் சுக்கிரன், சனி அல்லது நிழல் கிரகங்களால் பாக்கப்படுதல்.
நெருக்கமான தம்பதிகளுக்கான கிரக இணைவுகள்
- மேஷம் அல்லது விருச்சிகத்தில், சுக்கிரனோடு ஏழாமதிபதி இணைந்திருத்தல்; அதே இரண்டு ராசிகளில் சுக்கிரனோடு பத்தாமதிபதி இணைந்திருத்தல்;
- 7-ல் குரு இருத்தல்;
- உச்ச சுக்கிரன் 7-ல் இருத்தல்;
- 7-ல் குரு, சந்திரன் இணைந்திருத்தல்;
- சுக்கிரன் 7-ஆமதிபதியாகி, குருவோடு இணைதல் அல்லது குருவால் பாக்கப்படுதல்;
- 7-ஆம் வீடு சிம்மமாகி நற்கோளால் பார்க்கப்படுதல்:
- சுக்கிரன் 7-ஆமதிபதியாகி நற்கோள் இணைவு அல்லது பார்வை பெறுதல்;
- கேந்திரத்தில் 7-ஆமதிபரோடு நற்கோள் இணைவுறுதல்;
- 7-ஆம் வீடு குருவால் பார்க்கப்படுதல்.
வெற்றிகரமான தம்பதிகளுக்கான ராசி மற்றும் லக்ன நிலைகள்
ஒருவரின் 7-ஆமதிபதி, மற்றவரின் லக்னத்திலோ அல்லது ராசியிலோ இருக்க, ஒருவரின் லக்னாதிபதி மற்றவரின் ராசியிலோ அல்லது நவாம்ச ராசியிலோ இருத்தல்;
ஒருவரின் நவாம்ச ராசி மற்றவரின் லக்னமாக அமைதல்; ஒருவரின் ஏழாமிடம் மற்றவரின் லக்னமாக அமைதல்;
சுக்கிரன் மற்றும் 7- ஆமதிபதியின் பலத்தை ஒப்புநோக்குகையில், இவற்றில் பலம்மிக்க ஒன்று மற்றவரின் லக்னத்திலோ ராசியிலோ இடம்பெறுதல்;
ராசியிலிருந்து அல்லது நவாம்ச ராசியிலி ருந்து 7-ஆமிடத்தில் மற்றவரின் 9- ஆமதிபதி அல்லது லக்னாதிபதி இடம்பெறுதல்:
சந்திர அஷ்டவர்க்கத்தில் அல்லது சர் வாஷ்ட வர்க்கத்தில் எந்த ராசியில் மற்றவரின் லக்னமாகவோ அல்லது ராசியாகவோ அமைதல்;
ஆண் ஜாதகத்தின் லக்னாதிபதி பாகையும் சுக்கிரனின் பாகையும் கூட்டி வரும். பாகையில் பெண்ணின் ராசி அமைதல்
அதேபோல், லக்னாதிபதி பாகையும், 7-ஆமதிபதி பாகையும் கூட்ட வரும் பாகையில் பெண்ணின் ராசி அமைதல்:
லக்னாதிபதி மற்றும் 7-ஆமதிபதி நீச ராசியிலோ உச்ச ராசியிலோ அமைதல்:
துவாதசாம்ச கட்டத்தில் சந்திரனின் நிலை மற்றவரின் ராசியாக இருக்க, மேலும் ஆணின் 7-ஆமதிபதியோடு பெண்ணின் 7-ஆமதிபதி சம்பந்தம்பெற இருவருக்குமி டையே வெற்றிகரமான மணவாழ்க்கை அமைகிறது.
எந்த திசையிலிருந்து வாழ்க்கைத் துணை வரும்?
சுக்கிரனிலிருந்து 7ஆம் வீட்டதிபதி இருக்கும் ராசியின் திசை
லக்னத்திலிருந்து 7-ஆம் அதிபதியின் திசை
7-ஆம் வீட்டைப் பார்வை செய்யும் கிரகங்களின் திசை ஆகிய திசைகளிலிருந்து வரன் அமையும்.