Homeகுரு பெயர்ச்சி பலன்கள்குரு பெயர்ச்சி பலன்கள்-மகரம்

குரு பெயர்ச்சி பலன்கள்-மகரம்

குரு பெயர்ச்சி பலன்கள்-மகரம் 

சனி பகவானின் அருள் பெற்ற மகர ராசி அன்பர்களே !!!

உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான கும்பத்தில் இருந்த குரு பகவான் 13.4.2022 அன்று முதல் மூன்றாம் வீடான மீன ராசியில் பிரவேசிக்க இருக்கிறார்.

ஜாதகத்தில் மூன்றாம் இடம் , சகோதர ஸ்தானம் , தைரிய ஸ்தானம் , கீர்த்தி ஸ்தானம் அறிவு ஸ்தானம் , வீரிய ஸ்தானம் என்பதாகும்.

இந்த இடத்தைக் கொண்டு , இளைய சகோதரர் , தொழில் , சுகபோகம் , உடல்வலிமை , வெற்றி , பயணம் , ஒருவருக்குக் கிடைக்கும் பெருமை , ஜாதகரின் தைரியம் போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம்.

கோட்சாரத்திற்கு மூன்றாம் வீட்டிற்கு வரும் குரு பகவான் , முதலில் முன்பிருந்த நிலையில் சரிவை உண்டாக்குவார். நேற்று வரை நல்ல விதமாக நடந்து வந்த யாவும் மந்தகதியை அடையும். வேலையிலும் சங்கடம் உண்டாகும்.ஒரு சிலருக்கு வேலையும் , பறிபோகும் , வருமானத்தில் தடையுண்டாகும். மனத்தில் குழப்பம் உண்டாகும். சுற்றி இருந்தவர்கள் ஒவ்வொருவராக விலக ஆரம்பிப்பார்கள் , இல்லையென்றால் அவர்களை இழக்க வேண்டி வரும் , அதனால் தைரியம் இழக்கும் நிலை உருவாகும். தேவையில்லாத வீண் பழிகள் உண்டாகும். எந்த ஒரு வேலையையும் முடிக்க முடியாமல் திணற வேண்டி வரும்.

மூன்றாம் இடத்தில் அமர்ந்து அந்த இடத்திற்குரிய பலனை துர்பலனாக வழங்கும் நிலையில் உள்ள குரு பகவான் , அங்கிருந்து , ஐந்து , ஏழு , ஒன்பதாம் பார்வையாக உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டையும் , ஒன்பதாம் வீட்டையும் , பதினொன்றாம் வீட்டையும் பார்வையிட இருக்கிறார் என்பதால் அந்த இடமெல்லாம் சிறப்படைய இருக்கிறது.

குரு பெயர்ச்சி பலன்கள்-மகரம்
குருவின் 5ம் பார்வை பலன் 

குரு பகவான் ஐந்தாம் பார்வையாக உங்கள் ராசிக்கு ஏழாம் இடமாகிய களத்திர ஸ்தானத்தை பார்க்கிறார். இதனால் , குடும்பத்தில் திருமண நிகழ்ச்சிகள் நடைபெறும்.பிரிந்திருந்த தம்பதியர்கள் ஒன்று சேர்வார்கள். திருமணம் நடக்காமல் தள்ளிக் கொண்டே வந்தவர்களுக்கு திருமணம் நடக்கும். தொழில் விருத்தியடையும் , ஆண்கள் , பெண்களாலும். பெண்கள் ஆண்களாலும் பலவிதங்களில் சுகம் அனுபவிக்கும் நிலையுண்டாகும். வெளிவட்டார பழக்க வழக்கங்களில் சிறப்பு ஏற்படும்.

குருவின் 7ம் பார்வை பலன் 

தனது ஏழாம் பார்வையாக உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடமாகிய பிதுர் ஸ்தானத்தைப் பார்க்கிறார். இதை பாக்கிய ஸ்தானம் , தர்மஸ்தானம் என்றும் சொல்வோம். இதனால் உடம்பில் இருந்த சிற்சில தொல்லைகள் அகலும் , தொழில் விருத்தியடையும் , பழைய பிரச்னைகள் , ஒரு முடிவிற்கு வரும் , தெய்வ வழிபாடு அதிகரிக்கும். ஆலயங்களுக்கு சென்று வரும் பாக்கியம் உண்டாகும். தந்தை வழியில் இருந்த பிரச்னைகள் அகலும். பணம் தாராளமாக நடமாடும்.குழந்தை பாக்கியம் உண்டாகும். வீடு மாற்றம் செய்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிறைந்திருக்கும். மனதில் தெம்பும் தன்னம்பிக்கையும் உண்டாகும்.

குரு பெயர்ச்சி பலன்கள்-மகரம்
குருவின் 9ம் பார்வை பலன் 

ஒன்பதாம் பார்வையாக உங்கள் ராசிக்கு பதினொன்றாம் இடமாகிய லாபஸ்தானத்தை பார்க்கிறார். இதனால் , நினைக்கும் காரியம் நிறைவேறும் , தொழில் விருத்தியாகும்.
வேலையின்றி இருந்தவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும். வீடு மற்றும் ஸ்திர சொத்துக்கள் வாங்கும் நிலை உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். மூத்த சகோதர சகோதரிகள் உதவி புரிவார்கள்.ஒரு சிலருக்கு மனைவி இருக்க மற்றுமொரு பெண்ணின் தொடர்பு உண்டாகும். கடல் கடந்து சென்று வரக்கூடிய வாய்ப்பும் ஒரு சிலருக்கு உண்டாகும். பொன்பொருள் சேர்க்கையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வு பதவி உயர்வு உண்டாகும்.

பலன் தரும் பரிகாரம் 

சென்னைக்கு அருகில் உள்ள பாடி என்னும் திருவலிதாயத்திற்கு ஒருமுறை சென்று குரு பகவானுக்கு அர்ச்சனை செய்து வணங்கி வாருங்கள் .

தட்சிணாமூர்த்தியை வீட்டின் பூஜையறையில் வைத்து நாள்தோறும் அவரை வழிபட்டு வாருங்கள் . நன்மைகள் உண்டாகும் .

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!