Homeகுரு பெயர்ச்சி பலன்கள்குரு பெயர்ச்சி பலன்கள்-விருச்சிகம்

குரு பெயர்ச்சி பலன்கள்-விருச்சிகம்

குரு பெயர்ச்சி பலன்கள்-விருச்சிகம் 

செவ்வாய் பகவானின் அருள் பெற்ற விருச்சிக ராசி அன்பர்களே!!!

இதுவரையில் உங்கள் ராசிக்கு 4-ல் இருந்து வந்த குருபகவான் 13.04.2022 முதல் ஐந்தாம் இடமான மீன ராசியில் பிரவேசிக்க இருக்கிறார்.

ஜாதகத்தில் ஐந்தாம் இடம் என்பது பூர்வ புண்ணியஸ்தானம், புத்திரஸ்தானம், கற்பு ஸ்தானம் என்பதால் இந்த இடத்தை வைத்துதான் முன்ஜென்மத்தில் செய்த நற்பலன்கள், விளையக் கூடிய நன்மைகள், பலாபலன்கள்,புத்திரர்கள் பிறத்தல், அவர்களின் தன்மை, புத்திக்கூர்மை, சிந்தனை, ஆற்றல், தாய்மாமன், சக்தி, வித்தை, இறைவழிபாடு ஆகியவற்றை தெரிந்து கொள்கிறோம்.

ஐந்தாம் இடத்திற்கு வரும் குரு பகவான் இத்தகைய நாளும் ஏதோ ஒரு சோகத்தில் இருந்த உங்கள் மனநிலையை மாற்றி தெளிவை உண்டாக்குவார். சுறுசுறுப்பை வழங்குவார். தடைபட்டிருந்த காரியங்கள் ஒவ்வொன்றையும் உங்களுக்கு சாதகமாக்கி நீங்கள் வெற்றியடைய கூடிய நிலையை உருவாக்குவார். உத்தியோகத்தில் இருந்து வந்த சிரமங்களை அகற்றி அதில் முன்னேற்றத்தையும் கௌரவத்தையும் வருமான உயர்வையும் உண்டாக்குவார். மேலதிகாரியின் உதவி இக்காலத்தில் பரிபூரணமாக கிட்டும். தொழில் புரிவோருக்கு இக்காலம் மிக சிறப்பாக இருக்கும். லாபம் பலவழிகளிலும் வரும். தொழிலில் புதிய முதலீடு செய்வீர்கள். கேட்ட இடத்தில் கேட்ட உதவி கிடைத்து அதனால் முன்னேற்றம் காண்பீர்கள். திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமணம் கூடிவரும். வசதியும் அந்தஸ்தும் அதிகரிக்கும். இருப்பிடம் உங்கள் ரசனைக்கேற்ற விதத்தில் மாறும். இருப்பிடத்தில் நவீன கருவிகளின் சேர்க்கை உண்டாகும். வரும் வாழ்க்கை துணையால் நன்மை உண்டாகும். புனித ஸ்தலங்களுக்கு சென்று வரும் பாக்கியம் கிடைக்கும். சிலர் இருக்கும் வீட்டை புதுப்பிப்பீர்கள். சிலர் புதிய வீடு வாங்குவீர்கள். அதற்கான உதவிகளும் இக்காலத்தில் கிடைக்கும்.

குரு பெயர்ச்சி பலன்கள்
குருவின் 9ம் பார்வை பலன் 

குருவின் 9-ம் பார்வை உங்கள் ராசியில் பதிகிறது இனி உங்கள் வாழ்க்கை நிலை உயரப் போகிறது. நீங்கள் பிறந்த பலனை அடையப் போகிறீர்கள். உங்கள் புகழையும் பெருமையையும் உலகம் அறியப்போகிறது. எதையோ இழந்தது போல் வருத்தப்பட்டுக் கொண்டிருந்த உங்கள் வாழ்வில் புது வசந்தம் வீசப்போகிறது. உங்கள் தோற்றத்தில் மெருகு கூடும். செயலில் வேகம் அதிகரிக்கும். ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழக்கூடிய நிலை உண்டாகும். உங்கள் உடலை வாடிக்கொண்டு இருந்த நோய்கள் அகலும். உங்கள் உடலின் ஐம்பொறிகளும் மகிழ்ச்சி அடையும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பர். வியாபாரத்தில் லாபம் கூடும். உத்தியோகஸ்தர்கள் பாராட்டபடுவார்கள்.

குருவின் 7ம் பார்வை பலன் 

குருவின் 7-ஆம் பார்வை உங்கள் ராசிக்கு 11ம் வீடான லாப ஸ்தானத்தில் பதிகிறது. குரு பார்ப்பதால் பணமும், பொன்னும், பொருளும் உங்கள் வீட்டில் நிறைய போகிறது. எதிர்பார்ப்பு இல்லாமல் செய்த செயல்களிலும் லாபம் காணப்போகிறீர்கள். நினைத்த காரியங்கள் நினைத்தபடி நடந்தேறும். அரசாங்க உதவியும் ஆதரவும் உண்டாகும். நண்பர்களும் உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். புதிய சொத்துக்கள் வாங்கும் சூழ்நிலை உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு வருமான உயர்வு உண்டாகும். துணையை இழந்தவர்களுக்கு புதிய துணை அமையும். மனைவியைத் தவிர ஒரு பெண்ணால் அனுகூலமும் சந்தோஷமும் காணும் வாய்ப்பும் சிலருக்கு உண்டாகும். கருத்து வேறுபாடால் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர். நீண்ட நாள் எண்ணங்கள் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

குருவின் 5ம் பார்வை பலன் 

ஐந்தாம் பார்வை உங்கள் ராசிக்கு 9-ஆம் வீடான பித்ரு ஸ்தானம், பாக்கிய ஸ்தானம், கர்ம ஸ்தானம் என்றெல்லாம் அழைக்கப்படும் இடத்தில் பதிவதால் தந்தையின் நிலையில் மாறுதலை ஏற்படுத்த போகிறார். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உண்டாக்குவார். பழைய பிரச்சனைகள் எல்லாம் ஒரு முடிவுக்கு வரும். வழக்குகளில் வெற்றி உண்டாகும். திருமண தடை ஏற்பட்டு வந்தவர்களுக்கு திருமண பேச்சு கூடிவரும். வாழ்க்கை துணையால் அந்தஸ்து உயரும். உண்டாகும் சொந்தமாக வீடு நிலம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். கல்வி கற்போருக்கு கல்வியில் சிறப்பு உண்டாகும். கடல்கடந்த பயணம் செய்வீர்கள். பொதுவில் தொட்டதெல்லாம் வெற்றி என நிலை உண்டாகும்.

குரு பெயர்ச்சி பலன்கள்
பலன் தரும் பரிகாரம் 

இவை யாவும் குருவின் பார்வையால் கிடைக்கும் பொதுப் பலன்களே ஆகும்.

வியாழக்கிழமை தோறும் தட்சிணா மூர்த்தியை வழிபாடு செய்வதுடன் ஒருமுறை ராமேஸ்வரம் சென்று இரவு தங்கி அக்னி தீர்த்தத்தில் நீராடுவது 22 தீர்த்தங்களிலும் நீராடி சுவாமிக்கும் அம்பாளுக்கும் அர்ச்சனை செய்துவிட்டு வாருங்கள் பித்ரு தோஷம் உள்ளவர்கள் பரிகாரம் செய்து கொண்டு வாருங்கள் தடைகளும் நன்மைகள் அதிகரிக்கும்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!