Homeசனி பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள் -பரிகாரங்கள் -தனுசு

சனி பெயர்ச்சி பலன்கள் -பரிகாரங்கள் -தனுசு

சனி பெயர்ச்சி பலன்கள் -பரிகாரங்கள் -தனுசு

மனசாட்சிக்கு மதிப்பளித்து வாழும் தனுசு ராசி அன்பர்களே!!!

 சனி பகவான் 27. 12. 2020 முதல் 19. 12. 2023 வரை உங்கள் ராசியை விட்டு விலகி பாதச் சனியாக அமர்ந்து பலன் தரப்போகிறார்.
  •  அலைபாய்ந்த மனசு இனி அமைதியாகும் 
  • எதிர்மறை எண்ணங்கள் மறையும் 
  • பயம் விலகும் ,
  • உடல்நிலை சீராகும் இருந்தாலும் எளிய உடற்பயிற்சிகள் உணவுக் கட்டுப்பாடுகளும் உங்களுக்கு தேவை 
  • பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரம்மை நீங்கும் 
  • சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை உணருவீர்கள்
  •  வாழ்க்கைத்துணைவர் கவலைகள் நீங்கி உற்சாகம் அடைவர் 
  •  கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்சினைகளும் மனஸ்தாபம் வந்து நீங்கும் 
  • விட்டுக் கொடுத்துப் போவது நல்லது 
  • வெளிப்படையாக பேசுவதாக நினைத்து யாரையும் எடுத்தெறிந்து பேசாதீர்கள் 
  • அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது
  •  வழக்குகளில் அலட்சியம் வேண்டாம்

சனி பகவானின் பார்வை 

சனி பகவான் உங்களின் 4-ம் வீட்டைப் பார்ப்பதால் 
  • வேலைச்சுமை ,காரியங்களில் போராட்டம் இருக்கும் 
  • திடீர் பயணங்கள் அதிகரிக்கும் 

சனி பகவானின் பார்வை உங்களின் எட்டாம் வீட்டை பார்ப்பதால் 

  • உடல் நலத்தில் கவனம் தேவை 
  • பழைய கடன் மனதை வாட்டும் 

சனி பகவான் உங்களின் லாப வீட்டைப் பார்ப்பதால் 

  • திடீர் பண வரவு உண்டு 
  • ஷேர்  மூலம் பணம் வரும் 
  • வீடு மனை வாகனம் வாங்கும் யோகம் உண்டு 

இல்லத்தரசிகளே!!! 

  • கணவரின் வருமானம் உயரும் 
  • கணவரின் அன்பு அதிகரிக்கும் 
  • அலுவலகம் செல்லும் பெண்களுக்கு வேலைச்சுமை குறையும் சம்பளம் உயரும் 

வியாபாரிகள்,  

  • போட்டியாளர்களை திணறச் செய்வார்கள் 
  • புதிய அணுகுமுறையை வெளிப்படுத்துவார்கள் 
  • புதிய முதலீடு செய்வார்கள் 
  • விளம்பரங்களின் மூலம் உங்கள் தொழிலை விரிவுபடுத்துவீர்கள்
  •  கொடுக்கல்-வாங்கலில் நிம்மதி ஏற்படும் 
  • பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள் 
  • கடையை நவீனமாக்குவீர்கள் 
  • தள்ளிப்போன பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்
  •  உணவுவிடுதி இரும்பு ஆதாயம் உண்டு 
  • பங்குதாரர்கள் பணிந்து வருவார்கள் 

உத்தியோகஸ்தர்களுக்கு, 

  • அதிக சம்பளத்துடன் புது வேலை கிடைக்கும் 
  • உங்களை ஆதரிக்கும் புதிய அதிகாரி வந்து சேருவார் 
  • நீதிமன்ற தீர்ப்பு சாதகமாகும் 
  • இழந்த சலுகைகள் பதவிகளை மீண்டும் பெறுவீர்கள் 
  • கணினித் துறையினருக்கு வெளிமாநிலம் வெளிநாடுகளில் ஒப்பந்த முறையில் பணிபுரிய வாய்ப்பு வரும் 

பரிகாரம் 

திருவாரூர் மாவட்டம் திருக்கொள்ளிக்காடு தலத்தில் அருளும் 
பொங்கு சனீஸ்வரர் ஒருமுறை வழிபட்டு வாருங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் துன்பங்கள் நீங்கி வெற்றி கிடைக்கும்
சனி பெயர்ச்சி பலன்கள்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!