சுபகிருது தமிழ் வருட பலன்கள்-மிதுனம்
கல்விக்கு அதிபதியான புதனை ஆட்சி வீடாக கொண்ட மிதுன ராசி அன்பர்களே!!!
- இவ்வருடம் முழுவதும் குருபகவான் உங்கள் ராசிக்கு 10-ஆம் இடம் சஞ்சாரம் செய்கிறார்.
- ராகுவும் கேதுவும் முறையே 11 மற்றும் 5ம் இடங்களில் சஞ்சாரம் செய்கிறார்கள்.
- சனி பகவான் சித்திரை 16ஆம் தேதி முதல் ஆனி 28ம் தேதி வரை அதிசாரத்திலும், தை மாதம் 3 ஆம் தேதி முதல் வருடம் முடியும் வரை நேர்கதியிலும் சனி பகவான் அஷ்டமசனியில் இருந்து விலகி 9மிடம் சஞ்சாரம் செய்கிறார்.
- ஆனி 28ம் தேதி முதல் தை மாதம் 3ம் தேதி வரை அஷ்டம சனி நடக்கிறது.
- வருட ஆரம்பம் முதல் ஆனி மாதம் வரை தொழில் துறையில் இடமாற்றம் ஏற்படும்.
- தந்தையின் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை தேவை. மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
- தொழில் வளர்ச்சிக்காக மிகுந்த அக்கறை செலுத்துவீர்கள் ஆனால் எதிர்பார்த்த பலன் தராது.
- மாணவர்கள் கடுமையாக உழைத்து நல்ல மதிப்பெண் பெறுவார்கள்.
- ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தொழில் வளர்ச்சியில் மிகுந்த முயற்சிகள் செய்து குறைந்த லாபத்தைப் பெறுவீர்கள்.
- உத்தியோகஸ்தர்களுக்கு தேவையற்ற இடமாற்றம் ஏற்படும். மேலதிகாரிகளின் கடும் சொற்களுக்கு ஆளாக நேரிடும்.
- மாணவர்கள் எதிர்பார்த்த நல்ல மதிப்பெண்களைப் பெற முடியாது.
- தை மாதம் முதல் வருடம் முடியும் வரை உள்ள காலத்தில் தொழில் துறையில் உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும்.
- உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு காரணமாக இடமாற்றம் கிடைக்கப் பெறுவார்கள்.
- வாடகை வீட்டில் இருப்பவர் வாடகை வீடு இடம் மாற வேண்டி இருக்கும்.தந்தையின் ஆரோக்கியத்தில் சிறு குறைபாடுகள் ஏற்பட்டு பிறகு சரியாகும்.
- வேலை கிடைக்காதவர்களுக்கு தற்காலிகமாக வேலைவாய்ப்புகள் அமையும்.
- கடன் வாங்கி வீடு மனை வாங்க கூடிய வாய்ப்பும் உண்டு.
பரிகாரம்:
- வியாழக்கிழமை திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை தரிசித்து வரவும்.
- சனிக்கிழமை திருநள்ளாறு சென்று சனி பகவானை வணங்கி வரவும்..
இதையும் கொஞ்சம் படிக்கலாமே -ராகு-கேது பெயர்ச்சி-2022-2023-மிதுனம்-பலன்கள்-பரிகாரங்கள்