சுபகிருது வருட பலன்கள்-2022-தனுசு
குரு பகவானின் ஆசி பெற்ற தனுசு ராசி அன்பர்களே !!!
இவ்வருடம் முழுவதும் குருபகவான் உங்கள் ராசிக்கு 4ம் இடம் சஞ்சாரம் செய்கிறார்.
சனி பகவான் சித்திரை 16ம் தேதி முதல் ஆனி 28ம் தேதி வரை அதிசாரமாகவும், தை 3ம் தேதி முதல் நேர்கதியிலும் சஞ்சாரம் செய்கிறார்கள். ஆனி 28ம் தேதி முதல் தை 3ம் தேதி வரை சனிபகவான் உங்கள் ராசிக்கு 2-ஆம் இடம் சஞ்சாரம் செய்கிறார்.
தை 3ம் தேதியன்று உங்கள் ராசிக்கு ஏழரைச்சனி முழுவதுமாக நிறைவு பெறுகிறது.
ராகு கேதுக்கள் முறையே 5 11 ம் இடங்களில் சஞ்சாரம் செய்கிறார்கள்.
- சித்திரை மாதம் முதல் ஆனி மாதம் வரை தொழில் துறையில் இருந்த தேக்க நிலைகள் விலகும்.
- ஆரோக்கியத்தில் இருந்த குறைபாடுகள் நீங்கும்.
- நண்பர்கள் உறவினர்கள் உதவி செய்வார்கள்.
- குடும்பத்தில் அமைதியான சூழ் நிலை நிலவும்.
- திடீர் பணவரவு உண்டு.
- வீடு மனை வாங்குவதற்கான திட்டங்கள் போடுவீர்கள்.
- குழந்தைகளின் ஆரோக்கியம் சீராக இருக்கும்.
- பெரியவர்களிடம் இருந்து கருத்து வேற்றுமைகள் விலகும்.
- மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.
- ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும்.
- தெய்வ காரியங்களில் ஈடுபட்டு அதில் நன்மைகளைப் பெறுவீர்கள்.
- தொழில் வளர்ச்சி உண்டு.
- பதவி உயர்வு காரணமாக இடமாற்றம் கிடைக்கப் பெறுவார்கள்.
- மருத்துவ செலவுகள் குறையும்.
- தை மாதம் முதல் பங்குனி மாதம் வரை தெய்வ ஸ்தலங்களுக்கு யாத்திரை செய்து நல்ல தரிசனம் கிடைக்கப் பெறுவீர்கள்.
- நண்பர்கள் உறவினர்களிடம் இருந்து வந்த பகை விலகும்.
- புதிதாக வீடு மனை வாங்குவீர்கள். தங்கம் வெள்ளி நகைகளை வாங்கி அணிவீர்கள்.புது வாகனம் வாங்கும் யோகமும் உண்டு.
பலன் தரும் பரிகாரம்
வியாழக்கிழமை தோறும் குரு பகவானுக்கு நெய் விளக்கு வைத்து வர சகல நன்மைகளும் ஏற்படும்