சுபகிருது வருட பலன்கள்-2022-விருச்சிகம்
செவ்வாய் பகவானை ஆட்சி வீடாக கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே!!!
இந்த வருடம் முழுவதும் குருபகவான் உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார்.
சித்திரை 16ஆம் தேதி முதல் ஆனி மாதம் 28ம் தேதி வரை அதிசாரமாகவும் தை மாதம் 3 ஆம் தேதி முதல் நேர்கதியிலும் சனி பகவான் உங்கள் ராசிக்கு 4-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார்.
ஆனி மாதம் 28ஆம் தேதி முதல் தை மாதம் 3 ஆம் தேதி வரை சனிபகவான் உங்கள் ராசிக்கு 3ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார்.
ராகு கேதுக்கள் முறையே 6, 12 ஆம் இடங்களில் சஞ்சாரம் செய்கிறார்கள்.
- சித்திரை மாதம் முதல் ஆனி மாதம் வரை திருமணமாகாத பெண்களுக்கும், ஆண்களுக்கும் திருமண பாக்கியம் ஏற்படும். உடனடியாக குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.
- நண்பர்கள் உறவினர்கள் மூலமாக சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் தெய்வ அருளால் அவை விரைவில் விலகும்.
- ஆடிமாத முதல் தொழில் வளர்ச்சி நன்றாகவே அமையும்.
- மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெறுவார்கள் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரையும் மனை வாங்கும் யோகம் உண்டு.
- எந்த காரியத்தை ஆரம்பித்தாலும் அதை திறம்பட செய்து சாதித்துக் காட்டுவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும்.
- தொழில்துறையில் நல்ல வளர்ச்சி உண்டு.
- குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். படித்த மாணவர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு உண்டு.
- தங்க வெள்ளி ஆபரணங்களை வாங்கி அணியும் யோகம் உண்டு.
- தை மாதம் முதல் பங்குனி மாதம் வரை தொழில்துறையில் சிறு தொய்வு ஏற்பட்டாலும் தெய்வ அருளினால் நல்ல நிலையில் இருப்பீர்கள்.
- தெய்வ ஸ்தலங்களுக்கு யாத்திரை செய்து நல்ல தரிசனம் கிடைக்கப் பெறுவீர்கள். நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள்.
- தொழில் போட்டியில் வெற்றி கிடைக்கும். அரசாங்க அனுகூலம் உண்டு.
பலன் தரும் பரிகாரம்
சனிக்கிழமை தோறும் திருப்பதி ஏழுமலையானுக்கு பூஜை செய்துவிட்டு உங்கள் வேலையை தொடங்குங்கள் சகல துறைகளிலும் வெற்றி உண்டாகும்.
விருச்சிகம் அனுஷம் எப்படி இருக்கும்