செவ்வாய்-புதன்-குரு பரிவர்த்தனை
திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator
🤝Join our Whatsapp Channel💚
265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report
உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள
FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR
- செவ்வாய் இல்லமான மேஷம் , விருச்சிகம் இல்லத்தில் புதன் இருக்க புதன் இல்லமான கன்னி , மிதுனத்தில் செவ்வாய் உள்ள கிரக நிலை பரிவர்த்தனமான நிலையில் புத்தி சாதுர்யமும் , அத்தோடு தைரியமும் மனே பலத்துடன் வேகமாக செயல்படும் திறனையும் , தான் செய்யும் தொழில் வகையில் ஏற்படும்.
- சின்ன சின்ன பிரச்சனைகளுக்கும் கூட மற்றவர்களை கோபப்பட்டு தன்னுடைய அடக்கியாளும் திறனை காட்டுபவர் ஆகவும் இருப்பவர்.
- இவர்கள் புதனின் கட்டுப்பாட்டில் இணைந்து செயல்படும் போது எதை செய்வதாலும் அதில் ஒரு நுட்பம் இருக்கும்.
- இவர்களை பிறர் சுட்டி காட்டி சொல்லும் போது அது அவருக்கு இரக்கத்தோடு ஊறிய செயல் என்றுதான் சொல்லும் நிலையை பெற்றவர்கள் ஆவர்.
- இவர்களுக்கு இரும்பு , நெருப்பு , மின்சாரம் , ரியல் எஸ்டேட் சம்பந்தமான வியாபாரத் தொடர்புகள் சிறப்பை தரும்.
- இவர்களில் பலர் அரசு வகையில் காவல் துறை , புலன் ஆய்வுதுறை நீதித்துறை போன்றவைகளில் சிறந்து விளங்கு கின்றனர். அரசியல் தொடர்பும் இவர்களுக்கு ஏற்படுகின்றது.
- செவ்வாயும் புதன் தொடர்பு பெற்ற நிலையில் உள்ள இவர்களுக்கு நரம்பு தோல் மார்பு சம்பந்தப்பட்ட வகையில் ரத்தத்தோடு தொடர்பு கொண்ட தொல்லைகள் ஏற்படுகின்றது.
- இவ்வமைப்பு பெற்றவர்களுக்கு உடன் பிறப்பு வகையில் ஒற்றுமை குறைவு ஏற்படுகிறது. தாய் வழி பாதிக்கிறது.
- இப்பரிவர்த்தனமானது மிதுன லக்கினத்தவர்களுக்கு 1 , 11 , 4,11,2 , 11 , 4 மற்ற லக்கினங்களுக்கு ஏற்படும் பரிவர்த்தனையானது.சிறப்பான பலன்களை தருவதில்லை.அத்தோடு செவ்வாய் புதனின் பகை தன்மை இப்பரிவர்த்தனையில் மாறி செயல்படுகிறது.
- செவ்வாய் இல்லங்களில் குருவும் , குருவின் இல்லங்களில் செவ்வாயும் இருக்கும் , கிரக நிலை பரிவர்த்தனையானது. புத்திர தோஷத்தை தருகிறது , கர்ப்ப சேதங்களை தருகிறது.
- இப்பரிவர்த்தனை பெண்கள் ஜாதகத்தில் ஏற்படும் பட்சத்தில் பெரும் தோஷத்தைதர காரணமாகிறது.
- இவர்களோடு சனி , ராகு , கேது , சூரி சேர்ந்து விட்டால் குழந்தைகள் பிறப்பு அவர்களின் அரவணைப்பு நன்மைகள் இவை எல்லாம் எதிர்பார்த்து ஏமாறும் நிலையே காணும்.
- இந்த பரிவர்த்தனை அரசு வகை நிர்வாகங்களுக்கு , உயர்ந்த பதவிகளுக்கு தைரிய விரியத்துடன் செயல்படும் காரியங்களுக்கு , வாய் சாதுர்யம் பல மொழிகளை கற்று தேர்ச்சி அடையும் திறன் போன்றவைகளுக்கு இப்பரிவர்த்தனை சிறப்பு வர்த்தனையாய் செயல்படும்.
- இவர்களுக்கு பொருளாதார வசதிகள் என்பது வெகு சீக்கிரத்தில் வருவதல்ல , கடின உழைப்பு , மேல் மட்ட ஆட்களின் ஆதரவு , தெய்வ அனுக்கிரகம் ஆகியவை மூலமே கிடைக்கிறது.
- இவர்கள் பணம் புழக்கம் உள்ள தொழில்களில் அதிகமாக உள்ளனர் . இவர்களுக்கு எந்திர தொழில் வகைகளும் , இரசாயனம் , கெமிக்கல் , மெடிக்கல் , பெறியியல் , கல் , மண் சம்பந்தப்பட்ட தொழில் தொடர்புகள் தண்டிக்கும் ஆக்கினை தொழில்கள் சிறப்பு.
- மேசம் , கடகம் , சிம்மம் , விருச்சிகம் , தனுசு போன்ற லக்னங்களுக்கு சிறப்பான பலன்களை தருகிறது. இந்த லக்னங்களில் பிறந்தவர்களுக்கு புத்திர பாவம் கெடுவதில்லை. மற்ற லக்னங்களுக்கு இப்பரிவர்த்தனையானது சிறப்பான பலன்களை தருவதில்லை.
- மேஷ லக்னத்திற்கு 1 , 9 கடகத் திற்கு 9 , 10 சிம்மத்திற்கு 5 , 9 விருச்சிகத்திற்கு 1 , 5 , 2 , 1 தனுசிற்கு 4 , 5 , 1 , 5 போன்ற பரிவர்த்தனங்கள் சிறப்பான பலன்களை தருவதில் தவறுவதில்லை.
- இப்பரிவர்த்தனை பெற்ற கிரகங்கள் ஐராவதாம்சம் , பர்வதாம்சம் , குபேராம்சம் பெற்றிருந்தால் இவர்களுக்கு உயர்ந்த ராஜ்ய பதவிகள் நாடி வரும்.