நவகிரக மந்திரம் – உங்கள் வாழ்க்கையை மாற்றும் சக்திவாய்ந்த பரிகாரம்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Updated on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

நவகிரக மந்திரம்

நவகிரக மந்திரம்

சூரிய பகவான் மந்திரம்

எங்கும் இருளகற்றி எழுபரித் தேரேறித்
துங்கமுடன் சுற்றிவரும் சோதிமனிச்- சூரியனே 
துன்ப இருளகற்றி தூய நலம் திகழ 
இன்பம் தருவாய் எனக்கு .

சந்திர பகவான் மந்திரம்

தரணியில் வாழ்வோர்க்கு  தண்ணிலவை தந்தருளி 
நீரணிந்தோன் நெற்றியிலே நின்றிலங்கும் – வெண்ணிலவே என்றன் துயர் நீக்கி இன்பம் பலவாக்கி 
நன்றே புரிவாய் நயந்து ..

செவ்வாய் பகவான் மந்திரம்  

தீரம்மிகக் கொண்ட செவ்வாய் பகவானே 
ஈரம் கசிய இணையடியை யான்- துதிப்பேன் 
துன்பம் துடைத்தெனை தூய நெறி படுத்தி 
இன்பம் தருவாய் இனி .

நவகிரக மந்திரம்

 புதன் பகவான் மந்திரம்

வித்தைக் களஞ்சியமே வெற்றிமிகு நாயகமே
புத்திக்கு வித்தே புதனே உனைத்- துதிப்பேன் 
சித்தம் மகிழ்ந்து சிறியேன் நலமடைய 
நித்தம் அருள்வாய் நினைந்து..

குரு பகவான் மந்திரம்

தேவரெல்லாம் போற்ற திகழ்கின்ற நற் குருவே 
நாவாரபாடி நயந்துருகி – போற்றுகின்ற
சேயாம் எனக்கு திருவருளை செய்கின்ற 
தூய குருவே துணை..

சுக்கிர பகவான் மந்திரம்

மன்னுகலை நாயகனே மாண்புதரும் சுக்கிரனே
சென்னி வணங்கி தினமும் – துதி செய்வேன் 
பொன்னும் களையும் புகழும் பொருந்திடவே 
உன் அருளை செய்வாய் உவந்து..

சனி பகவான் மந்திரம்

ஒன்பான் கிராகத்துள் ஒன்றாய் மிளிர்கின்ற 
அன்பாய் நலம் புரியும் அண்ணல் – சனீஸ்வரனே
என்பால் அடைந்தாலும் ஏழைக்கு இரங்கி இனி 
நன்மையே செய்வாய் நயந்து 

இராகு பகவான் மந்திரம்

இன்பமே செய்யும் ராகு பகவானே 
அன்பாக உன்றன் அடிபணிவேன் என்- குடும்பம் 
செல்வ வளமுடனே சீரோங்கி வாழ்வதற்கு 
நல்லருளை செய்வாய் நயந்து

கேது பகவான் மந்திரம்

சீரமேவும் கேதரசே செல்வ செழிப்புடனே 
பார்ப்புகழும் வாழ்வும் பலவளமும் – பெற்றினிது
எங்கள் குடி தழைக்க என்றென்றும் உன்றனது
துங்கமிகு பாதம் துணை

Leave a Comment

error: Content is protected !!