லக்கினத்திற்கு 3ல் சூரியன் நின்ற பலன்
திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator
🤝Join our Whatsapp Channel💚
265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report
உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள
FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR
லக்கினத்திற்கு 3ல் சூரியன் நின்ற பலன்
- உடன் பிறந்த சகோதர சகோதரிகள் நிறைய இருப்பார்கள்.
- 4,5,8,12 வயதுகளில் பீடை உள்ளவன்.
- எந்த விஷயத்தை எடுத்துகொண்டாலும்,எத்தனை முறை தோல்விகண்டாலும் இறுதியில் பெறு முயற்சி எடுத்துக் காரியங்களில் வெற்றியைப் பெறுவான்.
- விருச்சிக லக்கினத்தில் பிறந்தவர்கள் புதிய கண்டு பிடிப்புகள் – கண்டுபிடிப்பர்.
- பெரிய அரசியல்வாதி ஆகலாம்.
- உடன் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் ஏற்படலாம்.
- சூரிய தசா புக்திகளில் இவர்கள் தன் திறமையைக் காட்ட சந்தர்ப்பம் இருக்காது.
- இவர்களுக்கு எந்தவித தோஷமும் இல்லை. வேலை செய்வதும் இல்லை.
- பாவிகளுடன் சேர்ந்தால் இருதாய் உள்ளவன்.
- உறவினர்களிடம் அன்பும் மரியாதையும் உள்ளவர்.
- அதிகம் பொருள் சம்பாதிக்கும் வாய்ப்புகள் அடிக்கடி ஏற்படும்.
- இரத்தின ஆபரணங்களை அணிவார்.அணிந்தால் நன்மை.
- நல்லவனுக்கு நல்லவன் ; கெட்டவனுக்கு கெட்டவன்.
- பாபர் மத்தியில் சுபருடன் கூடி இருந்தால் வாத ரோக பீடையும் , காமமும் – ரோகமும் ஜீவஹத்தி செய்தலும் உண்டாம்.
- ஆட்சி பெற்றால் பிறந்த 5 – வது வயதில் நாற்கால் பிராணிகளால் பயம் – கண்டம் அடைவான்.
- 20 வயதிற்குமேல் மேலான சுகம் அடைவான்.
வேறு கிரந்தம் சொல்வது
- 17 வயதிலிருந்து 22 வயது வரையில் விரோதிகளால் பயம் உண்டாகும்.
- 47 லிருந்து 49 வயதிற்குள் பெருவியாதியால் கஷ்டம் உண்டாகும்.
- 56 வயதில் மத்திய ஆயுளில் மரண மேற்படும்.
- புதனுடன் கூடினால் கல்விக்கு ஆபத்து.
- பிதுரார்ஜிதத்தினால் ஜீவனம் உண்டாம்.
- இங்கு சூரியன் – புதன் சேர்க்கை இருந்து இந்த இடத்திற்கு உரியவர் பாவருடன் கூடி இருந்தால் பேச்சு பலவிதமாக இருக்கும்.
- பிறர் சொத்து,பிறர் பெண்களையும் அடைவான்.
- மேற்படி கிரகம் பாப அம்சத்தில் இருந்தால் ஜாதகனுடைய பாட்டனுக்கு இப்பலன் பொருந்தும்.
- கெட்டவர்கள் இவர்களுக்கு உதவிகள் செய்வார்கள்.
- சகோதரர்கள் செல்வந்தர்களாக இருப்பார்கள்.
- பாபர்களுடன் சேர்ந்தால் நஷ்டம் – துஷ்ட சகவாசம் உண்டு. சகாயம் கிட்டும் , தனவரவு , எதிரிகள் பலமிழத்தல் , கர்ப்பம் ஏற்படுதல் , தொழில் பலம் , லட்சுமி கடாட்சம் ஏற்படும்.
- விருச்சிக லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு மிக விசேஷம்.
- இதில் பிறந்து சூரியனை குரு பார்த்தால் நூதன தொழில் கண்டுபிடிப்பான்.
- நிறைய பொருள் சேர்க்கும் வாய்ப்பு 20 வயதுக்கு மேல் மேலான சுகம் உண்டு.
- 9 – ல் எந்த கிரகம் இருப்பினும் இச்சூரியன் சுப பலனை தரார்.
- சூரியன் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திரத்தில் லக்கினம் சந்திரன் , தசா புக்தி அந்தரநாதன் இருப்பின் சொல்லப்பட்ட சுப பலன்கள் மாறி எதிரிடையான பலன்கள் நடக்கும் . தீய பலன்கள் செயல்படாது.
- சூரியன் நின்ற நட்சத்திரத்தின் சாதக நட்சத்திரத்தில் லக்னம் சந்திரன் , தசா புக்தி அந்தர நாதன் இருப்பின் சுப பலன் கள் பலப்பட்டு சிறப்பு தரும். தீய பலன்கள் பலப்படும். சொல்லப்பட்ட பலன்கள் சூரிய தசா புக்தி அந்தர காலங்களில் நடைமுறைக்கு வரும்.