இல்லத்தில் லட்சுமி கடாட்சம் பெறுக சில குறிப்புகள்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Updated on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

லட்சுமி கடாட்சம்

லட்சுமி கடாட்சம்

  • வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லட்சுமி கடாட்சம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு. லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது. நெல்லி மரம் இருக்கும் வீட்டில் தெய்வ அருள் நிறைந்து இருக்கும் எந்தவித தீய சக்திகளும் அணுக முடியாது.
  •  நாள்தோறும் துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மூன்று முறை வலம் வர வேண்டும்.
  • இல்லம் தோறும் காலை வேலைகளில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேலைகளில் விஷ்ணு சகஸ்ரநாமமும் ஒலிப்பது அவசியம். அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும்.
  • பசுக்களுக்கு ஒரு பழம் வாங்கி கொடுத்தாலே கோடி புண்ணியம் தேடி வரும் எனும் போது அவற்றுக்கு தீவனங்கள் வாங்கித் தந்து பூஜித்தால் பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருக்கின்றான். கோமாதா பூஜை குபேர பூஜைக்கு சமம்
  • சங்கு, நெல்லிக்காய், பசு சாணம் , கோஜலம், தாமரைப் பூக்கள், சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம். காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோயில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படம் இவற்றை பார்க்க வேண்டும்.
  • நாள்தோறும் விளக்கேற்றுவது சிறப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் ஐந்து முகம் கொண்ட விளக்கேற்றுவது இன்னும் சிறப்பு.
  • மாலை 6 மணிக்கே திருவிளக்கு ஏற்றி விட வேண்டும்
  • ஊனமுற்றவர்களுக்கும், ஏழை மாணவர்களுக்கும் முடிந்ததை தர்மத்தை செய்யுங்கள்.
  • எந்த வீட்டில் பெண்கள் கவுரவமாக நடத்தப்படுகிறார்களோ! எந்த வீட்டில் பெண் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்களோ! அங்கு திருமகள் குடியேறுவாள்.
  • வீட்டுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு குங்குமமும் தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோஷமும் பெருகும்.
லட்சுமி கடாட்சம்
  • சர்ச்சை செய்யாத, சண்டையிடாத பெண்கள் வாழும் இல்லங்களில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள்.
  • தயிர், அருகம்புல், பசு முதலியவைகளை தொடுவதும், நேர்மையாக இருப்பதும், அடிக்கடி பெரியோர்களை தரிசிப்பதும், கோயில்களுக்கு சென்ற தெய்வ தரிசனம் செய்வதும் செல்வத்தை கொடுக்கும்.
  • குழந்தைகளிடமும், வயதானவர்களிடமும், நோயாளிகளிடமும் கோபத்தை காட்டக்கூடாது. கேட்பதற்கு இனிமையான நல்ல சொற்களை உபயோகிப்பவர்களுக்கு எல்லா நன்மைகளும் வந்தடையும். இரக்க குணம் உடையவர்களுக்கு தெய்வம் உதவி புரியும். அன்பு உள்ளம் கொண்டவர்களுக்கு உலகம் தலைவணங்கும்.
  • அன்னம், உப்பு, நெய் இவைகளை கையால் பரிமாறக்கூடாது. கரண்டியால் மட்டுமே பரிமாற வேண்டும். கையால் பரிமாறப்பட்ட அன்னம், உப்பு, நெய் இவை கோ மாமிசத்துக்கு சமம். 
  • பெண்கள் வளையல் அணியாமல் எதையும் பரிமாறக்கூடாது.
  • அமாவாசை அன்று எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது.
  •  வெள்ளிக்கிழமை உப்பு வாங்கினால் நன்மை உண்டாகும்.
  • வீட்டில் தூசி ஒட்டடை சேர விடாது அரசர்கள் இன்றி சுத்தமாக இருப்பது அவசியம்
  • பகலில் குப்பைகளை வீட்டில் எந்த மூலையிலும் குவித்து வைக்க கூடாது
  • விளக்கு ஏற்றிய பிறகு பால், தயிர், உப்பு, ஊசி இவற்றை பிறருக்கு கொடுக்கக் கூடாது.
  • கோலமிட்ட வீட்டில் திருமகள் தங்குவாள். வீட்டு வாசலில் கோலமிடுவது அவசியம்.
  • ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டும் என்றால் வாசல் படியில் நின்று கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும் வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து வாங்க வேண்டும் அல்லது கீழே இறங்கி வாங்க வேண்டும்.
லட்சுமி கடாட்சம்
  • உப்பை தரையில் சிந்தக்கூடாது. அரிசியை கழுவும் போது தரையில் சிந்தக்கூடாது.
  • வாசல் படி, உரல், ஆட்டுக்கல், அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.
  • வெற்றிலை, வாழை இலை இவைகளை வாடவிடக் கூடாது. வெற்றிலையை தரையில் வைக்க கூடாது.
  •  அக்கினியை வாயால் ஊதி எழுப்பவோ அணைக்கவும் கூடாது.
  •  நகத்தை கிள்ளி வீட்டில் போட்டால் தரித்திரம் உண்டாகும்.
  •  பெண்கள் தலைவிரி கோலத்துடன் காட்சியளிப்பது கூடாது.
  • சாம்பிராணி உள்ளிட்ட நறுமணப் பொருட்களை அடிக்கடி வீட்டில் உபயோகிக்க வேண்டும்.
  •  ஈரத்துணி அணிந்து பூஜை செய்யக்கூடாது.
  • தங்கம் எனப்படும் சொர்ணம் மகாலட்சுமி வம்சம் என்பதால் அதை இடுப்புக்கு கீழே பெண்கள் அணியக்கூடாது
  • தைரியமாக ஒருவன் தர்மம் செய்தால் துணிவாக லட்சுமியும் அருளை அவன் மீது சொரிந்துவிடுவாள்.
  • அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை பிரம்ம முகூர்த்தம் என்று பெயர். அப்போது விழித்துக் கொண்டு படுக்கையை விட்டு எழுந்திருக்க வேண்டும். முதலில் சிரமமாக இருந்தாலும் இப்படி பழகிவிட்டால் பிறகு பழக்கமாகிவிடும். இப்படி செய்வது ஆரோக்கியம், நீண்ட ஆயுள் முதலிய பலனை கொடுக்கும். அந்த நேரத்தில் தேவர்களும், முன்னோர்களும் நம் வீட்டை நோக்கி வருகிறார்கள். அப்போது விழித்திருந்து மனதால் அவர்களை வழிபட்டால் அவர்களை கௌரவித்து வரவேற்பதாகும், அவர்கள் சந்தோஷப்பட்டு நமக்கு நன்மை செய்வார்கள்.
  • ஒவ்வொரு பௌர்ணமி அன்றே மாலை குளித்து சத்திய நாராயணனை, துளசி செண்பக மலர், இவைகளால் அர்ச்சித்து பால் பாயசம், கல்கண்டு, கனி வகைகளை வைத்து வணங்கிய பின்னரே இரவு உணவு உண்ண வேண்டும்.
  • நெருப்பும், தண்ணீரும் சிக்கனமாக உபயோகபர்களுக்கு எப்போதும் லட்சி கடாட்சம் உண்டு.
  • அன்றாடம் ஒரு வேலைக்கு உறுப்பினர் அரிசியை ஒரு பெரிய பாத்திரத்தில் கடவுளுக்கு என்று போட்டால் தான் லட்சுமி கடாட்சம் உண்டாகும் லட்சுமி வீட்டில் வாசம் செய்வாள்
  • நம் பெரியோர்கள் எப்போதும் வீட்டில் சிரிப்பு ஆனந்தமும் பெருக வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்கள் குழந்தைகள் விளையாடும் சந்தோஷ ஒளி பறவைகள் எழுப்பும் இனிய கீதங்கள் வீணை மிருதங்கம் போன்ற வாத்தியங்களின் இனிய இசை நம் இல்லங்களில் நிறைந்திருந்தால் லட்சுமி கடாட்சம் பெருகும் 

Leave a Comment

error: Content is protected !!