Homeராசிபலன்ஆங்கில புத்தாண்டு பலன்கள்-2024ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2024-கடகம்

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2024-கடகம்

அனைவருக்கும் ASTROSIVA வின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!!

இந்த 2024 ஆம் வருடம் பிறக்கும் நேரமான 31.12.2023 நள்ளிரவு 12 மணிக்கு (மார்கழி மாதம் 15-ம் தேதி )மேஷத்தில் குரு, சிம்மத்தில் சந்திரன், கன்னியில் கேது, விருச்சகத்தில் புதன், சுக்கிரன்; தனுசில் சூரியன், செவ்வாய் ;கும்பத்தில் சனி, மீனத்தில் ராகு என்கின்ற கிரக அமைப்புகளில் புத்தாண்டு பிறக்கிறது.

தாய் மண்ணின் மீதும், தாய் மொழியின் மீதும் தீராத பற்று கொண்ட கடக ராசி அன்பர்களே!!! உங்கள் ராசிக்கு இரண்டாவது ராசியான சிம்ம ராசியில் இந்த புத்தாண்டு பிறக்கிறது.

குடும்பத்தில் இனிய சூழல் நிலவும். உறவுகளுக்கு மத்தியில் தலைநிமிர்ந்து நடக்கலாம். அப்படி நடக்கும்போது தலைகனம் என்கிற தலைப்பாகை மற்றும் கழட்டி வைத்து விடுங்கள். வாழ்க்கைத் துணையுடன் அன்னியோன்யம் அதிகரிக்கும். வாரிசுகள் வாழ்க்கையில் தடைபட்டிருந்த கல்வி, பணி, திருமண வாய்ப்புகள் கைகூடி வரத் தொடங்கும். அவர்கள் பெறக்கூடிய பெருமைகள் உங்களுக்கும் சேரும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை ஏற்படும். பழைய கடன்கள் சுலபமாக பைசல் ஆகும். பூர்வீக சொத்து சம்பந்தமான வழக்குகள் சாதகமாக தீர்வாகும்.

நாவடக்கம் உள்ள பெண்களுக்கு நடப்பவை எல்லாம் நல்லவையாகவே இருக்கக்கூடிய வருஷம். வாழ்க்கைத்துணையுடன் மனம் விட்டு பேசினால் உங்கள் மதிப்புக்கூடும். அக்கம் பக்கத்தில் விவகாரங்களில் தலையிட வேண்டாம், தள்ளியே நில்லுங்கள். கொடுக்கல் வாங்கலை உடனுக்குடன் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். விலை உயர்ந்த நகைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.

முன்னேற்றம் சீராக இருக்கக்கூடிய ஆண்டு இந்த ஆண்டு. வேலை பார்க்கும் இடத்தில் பல காலம் தடைபட்ட உயர்வுகள் அடுத்தடுத்து வந்து ஆனந்தப்படுத்தும். அதே சமயம் எதிலும் நிதானமும் நேரடி கவனமும் அவசியம். பிறரால் நீங்கள் சுமந்து இருந்த பழி மாறும். உங்கள் திறமைகள் உரியவர்களால் உணரப்படும். உடன் இருக்கும் யாரையும் உதாசீனப்படுத்த வேண்டாம். பணிக்காக காத்திருந்தவர்களுக்கு இந்த வருடம் நிச்சயம் வேலைவாய்ப்பு கிட்டும். மேலிடத்தின் அனுமதியில்லாமல் எந்த திட்டத்தையும் நீங்களாக செயல்படுத்த வேண்டாம். தன்னம்பிக்கையும், முயற்சியும் இருந்தால் ஏற்றமும் மாற்றமும் எதிர்காலத்தில் தொடரும்.

 எந்தத் தொழில் செய்தாலும் அதில் மூன்றாம் நபரை நம்பி முதலீடு எதுவும் செய்ய வேண்டாம். நேரடி கவனமும் நேர்மையும் இருந்தால் லாபத்தின் அளவு அதிகரிக்கும். அயல் நாட்டு வர்த்தகத்தில் அந்தந்த நாட்டு சட்ட திட்டங்களை மதித்து நடப்பது நல்லது. பரம்பரை தொழில் புதிய மாற்றங்களை செய்வது நன்மை தரும். வர்த்தக கடன்களை உரிய முறையில் முதலீடு செய்தால் உயர்வுகள் நிச்சயம் வரும்.

01.05.2024 முதல் வருடம் முடியும் வரை குரு பகவான் லாப வீட்டில் அமர்வதால் எதிர்பாராத திடீர் பணவரவு உண்டு. மனதில் உற்சாகம் பிறக்கும். தீவிரமாக வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மூத்த சகோதரர் பகை மறந்து வலிய வந்து பேசுவார். அடையில் இருந்த நகையை மீட்பீர்கள். சித்தர்கள், மகான்களின் ஆசி கிட்டும். குழந்தை பாக்கியம் எதிர்பார்த்த அன்பர்களுக்கு இந்த வருடம் வாரிசு உருவாகும். மகனின் திருமணத்தை விமர்சையாக நடத்துவீர்கள். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள்.

ராகு இந்த வருடம் முழுவதும் ஒன்பதாம் வீட்டில் அமர்வதால் வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். தந்தையாரின் உடல்நிலை பாதிக்கும். தந்தை வழி உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம்.

கேது பகவான் மூன்றாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். தாயாரின் உடல்நிலை சீராகும். விலை உயர்ந்த ஆபரணங்கள், ரத்தினங்கள் வாங்குவீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள், தொழிலதிபர்கள் உதவுவார்கள். வாகன, வீடு பராமரிப்பு செலவுகள் குறையும். பழைய வீட்டை நல்ல விலைக்கு விற்று புது இடம் வாங்குவீர்கள்.

வருடம் முழுவதும் அஷ்டம சனி தொடர்வதால் முன்கோபம், பதற்றம், சிறுசிறு ஏமாற்றம் ,வீண் பழி வந்து செல்லும். மனதில் இனம் புரியாத பயம் வந்து போகும். கடன் விஷயங்களை கவனமாக கையாள வேண்டும். புதிதாக கடன் வாங்குவதை அவசியம் தவிர்க்கவும். சிலர் குடும்பத்தில் அமைதியில்லையே என புலம்புவீர்கள். முன் யோசனை இல்லாமல் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திட வேண்டாம். அரசு காரியங்கள் இழுபறியாகும்.

பலன் தரும் பரிகாரம்

பஞ்சவடி திருத்தலம் சென்று ஆஞ்சநேயரை வழிபாட்டு வாருங்கள்.இந்த ஆண்டு இனிமையான ஆண்டாக அமையும். 

மொத்தபலன்:காரிய வெற்றி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!