அற்புத ஆலயங்கள்-திருப்புகலூர்-ஸ்ரீ அக்னீஸ்வரர்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

அற்புத ஆலயங்கள்-திருப்புகலூர்-ஸ்ரீ அக்னீஸ்வரர்
 
நன்னிலம்-நாகப்பட்டினம் சாலையில் நன்னிலத்தில் இருந்து கிழக்கே சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திலும் நாகப்பட்டினத்தில் இருந்து மேற்கே 25 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது திருப்புகலூர் திருத்தலம்!
 
 
ஈசன்  இருக்கும் தளம் ஒவ்வொன்றுக்கும் ஒரு சிறப்பு உண்டு. அவ்வகையில் தன்னகதே அருளும் சிவமூர்த்தி இருவரை சமயக்குரவர்கள் பாடி அருளியதால் சிறப்பு பெற்ற தலம் திருப்புகலூர். நாயன்மார்கள் பலர் வந்து தொழுது அருள் பெற்ற தலம் இது. அக்னி பகவானுக்கு தனி சன்னதி, நளனுக்கு அனுக்கிரகம் செய்த சனிபகவான் சந்நிதி ஆகியன இருக்கும் அற்புத தலம் இது. 
 
புன்னை மரமாகிப் திருமாலே வாசம் செய்வதும்  இங்குதான், திருநாவுக்கரசர் ஒளி வடிவாகி ஈசனோடு கலந்த தலமும் இது தான். இப்படி பல்வேறு சிறப்புகளுடன் தேவரும், முனிவரும், ஈசனைப் புகல் அடையும் ஊர் திருப்புகலூர்.
 ஒருமுறை கார் காலத்தில் காவிரி வெள்ளப்பெருக்கு கொண்டது. ஆற்றின் கரையில் இருந்த கிராமத்தில் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் பிரசவ வலி கண்டு துடித்தார். ஆற்றை கடந்து மருத்துவச்சி வரவோ அல்லது இவர்கள் போகவோ வழியில்லை. அந்தப் பெண் லோக மாதாவான அம்பிகையை நினைத்து கதறினாள்.
 
பிள்ளையின் கதறலை பொறுக்காத அம்பிகை மருத்துவச்சி ஆக வந்தாள். அந்தப் பெண்ணுக்கு பிரசவம் பார்த்து நல்ல மகவைப் பெற்றெடுத்த உதவி செய்து மறைந்தாள்.
 
மறுநாள் வெள்ளம் வடிந்து உண்மையான மருத்துவச்சி வந்து நலம் விசாரிக்க வந்த போதுதான் அம்பிகையை நேரில் வந்து பிரசவம் பார்த்த உண்மை தெரிந்தது. சூல் பார்த்து சுகப்பிரசவம் தந்ததால் இத்தலத்து அம்மனுக்கு ‘சூளிகாம்பாள்’ என்ற திருநாமம் ஏற்பட்டது. இந்த அம்பாளின் அனுக்கிரகத்தால் இன்றும் இப்பகுதியில் யாரும் பிரசவத்தால் உயிரிழந்தது இல்லை என்பது, புகலுரின் மற்றுமொரு மணிமகுடம். 
 
இத்தளத்தின் ஈசன், ஸ்ரீ கருந்தார்குழலி அம்மை சமேத ஸ்ரீ அக்னீஸ்வரர், அக்னி பகவான் தன் சாபம் நீங்குமாறு தவம் செய்து அருள் பெற்ற தலம் இது. ஆகவே இத்தல ஈசனுக்கு ஸ்ரீஅக்னீஸ்வரர் என்று திருப்பெயர். உருவமில்லாத அக்னிக்கு இத்தலத்தில் சிறப்பு திருமேனியோடு தனி சந்நிதி இருப்பதுதான் சிறப்பு.
 
செல்வவளம் தரும் புன்னை மரம் 
 
இங்கு தலவிருட்சம் புன்னை மரமாகும்.  புன்னை தெய்வ மணம் கமழும் மரமாகும். முரன் என்ற அசுரனை கொன்ற பாவம் தீர  இத் தலம் வந்து வழிபட்ட திருமாலுக்கு அருட்காட்சி வழங்கினார் ஈசன் என்கிறது தலபுராணம். இத்தளத்தில் மகிமையை அறிந்த திருமால் அடியேன் இத்தளத்தில் என்றென்றும் புன்னகை மரமாக விளங்க வேண்டும் என் நிழலில் நீங்கள் எழுந்தருளி அடியார்களுக்கு வரம் தர வேண்டுமென்று வேண்டிக் கொண்டதாக புராணம் சொல்கிறது. 
 
இத்தளத்தில் பெருமாளே புன்னை மரமானார் என்பதால் திருமகளும் உடனுறைகிறாள் . அதனால் இங்குள்ள புன்னை மரத்தின் இலை, தளிர், அரும்பு முதலியவற்றை கில்லினாளோ அல்லது மரத்தை துன்புறுத்தினால் திருமகள் நீங்குவாள் என்பது ஐதீகம். அதேவேளை இவ் விருச்சத்தை வழிபட்டு பாதுகாப்பவர்களை திருமகள் பிரியத்திருப்பாள்.
 
ஒரு மண்டல காலம் தினமும் காலை மாலை இரு வேளையும் மரத்தடியில் அமர்ந்து முக்தி பஞ்சாட்சரத்தை தினமும் 1008 முறை ஜபித்து உருவேற்றி, அக்னீஸ்வரர் வழிபட்டால் மகேஸ்வர பூஜை செய்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. 
 
புன்னை மரத்தடியில் ஒரு தானம் செய்தாலும் கோடி தானம் செய்ததற்கு ஒப்பாகும். 
 
இத்தலத்தில் மூலவருக்கு கோணபிரான்என்ற திருநாமமும் உண்டு. அக்னி கோட்டையை பாணாசுரன் என்ற அசுர வம்சத்தை சேர்ந்த அரசன் ஆண்டு வந்தான். அவனால் தேவர்களுக்கு பெரும் துன்பம் ஏற்பட்டது. அவர்கள் கண்ணபிரானை சரணடைய கண்ணபிரான் அவன்மீது போர் தொடுத்தார். 
 
அகந்தையோடு போரிட்ட காரணத்தால் பாணாசுரன் தோற்றான். அவன் இழந்த வலிமையையும் அரசையும் மீண்டும் பெறும் பொருட்டு அவனின் தாய் மாதிணி சிவபூஜை செய்ய தொடங்கினால் அந்த பூஜைக்கு தினமும் ஒரு சுயம்பு லிங்கத்தைக் கொண்டு வந்து சேர்ப்பது தான் பாணாசுரனின் பணி. 
 
ஒருநாள் பூஜைக்கு திருப்புகலூர் ஈசனை பெயர்த்தெடுக்க முயன்றான் ஆனால் எவ்வளவு முயன்றும் அவனால் முடியவில்லை தன்னால் தாயின் சிவபூஜை தடை படுவதை விட தான் உயிர் விடுவதே மேல் என்று முடிவு செய்தவுடன் தன் தலையை தன் தலையை தானே கொய்து கொள்ள முடிவெடுத்தான் அப்போது ஈசன் தோன்றி அவனை தடுத்து ஆட்கொண்டார் .பின்பு தான் இருக்கும் இடத்திலிருந்து அவன் தாயாரின் பூஜைகளை ஏற்றுக் கொள்வதாகச் சொன்னார் அதன்படி இந்த இடத்திலிருந்து சற்று கோணலாக சாய்ந்து பூஜையை ஏற்றதனால் அவருக்கு கோணபிரான் என்ற திருநாமம் !
 
 இத்தலத்து ஈசன் கேட்ட வரம் தரும் தயாளன் இத்தளத்தில்  சயாரட்சை காலத்தில் அம்பிகை ராஜராஜேஸ்வரி கோலத்தில் அருளுகிறாள், எனவே இத்தல அம்பாளுக்கு வெள்ளை நிற புடவை அணிவிப்பது வழக்கமாக உள்ளது.
 
திருமணமாகாத பெண்கள் அம்பாளை மனதார வேண்டிக்கொண்டு வெள்ளை புடவை சாத்தி வழிபட்டால் தடைகள் அனைத்தும் நீங்கி விரைவில் திருமணம் கைகூடும். 
 
நீங்களும் ஒருமுறை திருப்புகலுர் சென்று வாருங்கள் தலைசாய்த்து பரமன் உங்கள் வேண்டுதலுக்கு செவி சாய்த்து அருள்வான்…
 
ஆலயம் இருக்கும் இடத்தை தெரிந்து கொள்ள கீழ உள்ள லிங்கை தொடவும்  :
 

Leave a Comment

error: Content is protected !!