அற்புத யோகம் தரும் அஷ்டமசனி

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

அற்புத யோகம் தரும் அஷ்டமசனி

வாசகர்களுக்கு இந்தக் கட்டுரையின் தலைப்பு சற்று வித்தியாசமாக தோன்றும் “அஷ்டம சனி”(ashtama sani) என்றாலே கஷ்டம்தான் தரும் அது எப்படி அஷ்டமச் சனியில் அற்புத யோகம் தரும் என்று பலருக்கு யோசிக்க தோன்றும் ஆனாலும் அற்புத யோகம் தரும் எப்படி ?வித்தியாசமான காரணங்களை சற்று விரிவாக பார்ப்போமா ?   அஷ்டம் என்றால் 8என்பதாகும் மனிதன் விரும்பும் வளமான வாழ்க்கைக்கு தேவையான 8அம்சங்களை பார்ப்போம்  

1.துன்பம் நீங்கி இன்பம் பெறுதல்

2.மலடு நீங்கி மகப்பேறு பெறுதல்

3.கடன் நீங்கி செல்வம் பெறுதல் 

4.சத்துருவை வென்றேன் ஜெயம் பெறுதல் 

5.நோய் நீங்கி ஆரோக்கியம் பெறுதல் 

6.அறியாமை நீங்கி ஞானம் பெறுதல் 

7.பாவம் நீங்கி புண்ணியம் பெறுதல் 

8.பிறவி ஒழித்து முக்தி பெறுதல்   

மேலே கூறிய எட்டு அம்சங்களையும் விரும்பாத மனிதர்களே இல்லை எல்லோருக்கும் இந்த எட்டு அம்சங்களும் முழுமையாக கிடைப்பதும் இல்லை.    முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப இப்பிறவியில் மனிதர்கள் மேலே கூறிய எட்டு அம்சங்கள் சிலவற்றை அனுபவிக்கின்றனர். ஒருவர் வாழ்க்கையில் அனுபவக்கின்ற முக்கிய சம்பவங்களை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள அவரின் ஜாதகத்தில் நடைபெறும் திசாபுத்திகளை வைத்து தான் தெரிந்து கொள்ள முடியும்.மேலும் ஒரு சம்பவம் எப்போது நடைபெறும் அது எப்படி நடைபெறும் என்பதை பற்றி தீர்மானிக்க கோட்சாரத்தில் மட்டுமே முடியும்

அஷ்டமசனி

பொதுவாக கோட்சாரம் என்றாலே மக்களின் நினைவுக்கு வருவது குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சி, ஆகிய நான்கு பெயர்ச்சிகள் மட்டுமே நவகிரகங்களில் இந்த நால்வருக்கும் மட்டுமே ஆன்றோர்களும், ஜோதிட சான்றோர்களும், ஆன்மீக அன்பர்களும் பெயர்ச்சி விழாவை பெரும் விருப்பத்துடன் சிறப்பாக நடத்துகின்றனர் என்பது அனைவரும் அறிந்த உண்மையிலும் உண்மை.    

கால புருஷ தத்துவப்படி சனிபகவான் ஜீவனகாரகனாகவும் கர்மாதிபதியாகவும் வருகிறார் ஒருவரின் கர்மாவை நிர்ணயிப்பதில் சனிபகவானுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.    நீதிமானாகிய சனி பகவான் அவரவர் செயல்களுக்கு ஏற்ப கோட்சாரத்தில் தனது தீர்ப்புகளை தயங்காமல் வழங்கி வருகிறார் என்பது திண்ணம்.    கோட்சாரத்தில் சனி பகவான் தரும் பலன்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம்

1.ஏழரைச்சனி 

2.கண்டச்சனி 

3.அர்த்தாஷ்டமச் சனி

4.அஷ்டமச்சனி   

இவை நான்கில் நாம் தற்போது அஷ்டமச்சனியை(ashtama sani)பற்றி சற்று ஆராய்வோம்  

  • ராசிக்கு எட்டாம் வீட்டில் சனி பகவான் சஞ்சரிக்கும் இரண்டரை ஆண்டுகாலம் அஷ்டமச் சனி என்று அழைக்கப்படுகிறது மனோகாரகன் சந்திரனுக்கு 8ல் சனி பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் வக்கிரம் அடைந்தால் ஜாதகரின் மனம், சிந்தனை ,செயல், வாக்கு இவை நான்கும் தடுமாறும் அதனால் வாழ்க்கையில் தடம் மாறும் இந்த காலகட்டத்தில் எதிலும் எப்போதும் விழிப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும்.
  •  ஒருவருக்கு நடைபெறும் திசா புத்திப் பலன்களை ஏற்ப தான் அவருக்கு வரும் அஷ்டமச் சனியும்(ashtama sani) செயல்படும் பலன் தரும் குறிப்பாக அஷ்டமச்சனியிலும்(ashtama sani) கிடைக்கும் அற்புத யோகம் சம்மந்தமான கிரக அமைப்புகளை பார்ப்போம்
  • ஒருவரின் ஜாதகத்தில் சனிபகவான் சந்திரனுக்கு கேந்திரத்தில் அல்லது லக்கினத்துக்கு கேந்திரத்தில் ஆட்சியோ ,உச்சமோ பெற்று லக்கின யோகராகி அவர் திசை நடைபெறும் பொழுது அஷ்டமச்சனி(ashtama sani) வந்தாலும் பூமியாளும் ,மனையாளும், வாகனங்களாலும் அற்புதமான யோகத்தை அடைவார்கள்
  • ஒருவரின் ஜாதகத்தில் சனி பகவான் லக்னாதிபதி அல்லது ராசி அதிபதி அல்லது தனாதிபதி அல்லது கேந்திர கோணத்தில் பலம் பெற்று அவர் திசை நடைபெறும் பொழுது அஷ்டம சனி(ashtama sani) வந்தாலும் அடிமையாலும் ,இயந்திரங்களாலும் ,லேவா தேவியாலும், ரியல் எஸ்டேட் தொழிலும், அற்புதமான யோகத்தை அடைவார்கள்.
  • ஜாதகத்தில் தனாதிபதி அல்லது லாபாதிபதி திசை நடந்து ஆட்சி, உச்சம் ,பெற்று நல்ல இடங்களில் அமர்ந்து சனி பகவானுக்கு நண்பராகவும் இருந்து அவரின் திசை நடைபெறும் பொழுது அஷ்டம சனி(ashtama sani) வந்தாலும்  அரசியலாலும் ,பதவிகளின் வாயிலாகவும், வெளிநாட்டுத் தொடர்பாலும்,அற்புதமான யோகத்தை அடைவார்.
  • ஒருவரின் ஜாதகத்தில் தர்மகர்மாதிபதிகள் இணைந்து பலம் பெற்று நல்ல இடங்களில் அமர்ந்து சனிபகவான் நண்பராகவும் அமைந்து அவர்களின் திசை நடைபெறும் பொழுது அஷ்டம சனி(ashtama sani) வந்தாலும் தொழில் மூலம் பெரும் புகழையும் செல்வத்தையும் சன்மானம்களையும் பெற்று அற்புதமான யோகத்தை அடைவார்கள்.
  •  ஜாதகத்தில் ஆறாம் அதிபதி எட்டாம் அதிபதி பன்னிரெண்டாம் அதிபதி இவர்களில் ஒருவரின் திசை நடைபெறும் காலத்தில் சனிபகவானுக்கு இவர்கள் பகைவராகவும் இருந்து  அஷ்டமச் சனியும்(ashtama sani) வந்துவிட்டால் ஜாதகன் பலவிதமான இன்னல்களை அனுபவிப்பான் அதை சற்று விரிவாகப் பார்ப்போம்
  • ஒருவரின் ஜாதகத்தில் ஆறாம் அதிபதி திசை நடைபெறும் காலத்தில் அஷ்டமச் சனி(ashtama sani) வந்தால் விபரீத நோய்க்கு ஆளாதல், பெரும் கடனுக்கு ஆளாகுதல், வித்தியாசமான வழக்குகளை சந்தித்தல்,விஷ ஜந்துக்களால் துன்பப்படுதல், வெடிமருந்தால் பாதிப்பு அடைதல் போன்ற துயர சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறும்.

ஏழரைச் சனி என்றால் என்ன? அதில் என்ன செய்யவேண்டும்? என்ன செய்யக் கூடாது?

  • ஒருவரின் ஜாதகத்தில் அஷ்டமாதிபதி திசை நடைபெறும் காலத்தில் அஷ்டமச்(ashtama sani) சனி வந்தால் அரசாங்கத்தை அவமானப்படுதல், விபத்தில்சிக்குதல், மேலிருந்து கீழே விழுதல், ஊர் பகை, நிர்பந்தமான மனை மாற்றம் ஏற்படுதல், வாகனம் பாதிப்படைதல், கால்நடை சேதமாகுதல், கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு உண்டாகுதல் ,கூட்டு பிரிதல், தொழில் நின்று போகுதல், உத்தியோகத்தில் இடம் மாறுதல், போன்ற வேதனை தரும் சம்பவங்களை சந்தித்தே ஆக வேண்டி வரும்.
  • ஒருவரின் ஜாதகத்தில் 12ம் அதிபதி திசை நடைபெறும் காலத்தில் அஷ்டமச்சனி வந்தால்(ashtama sani)  ஊர் மாற்றம் ஏற்படுதல் ,அரசுக்கு சமுதாயத்துக்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டு தண்டனைக்கு பயந்து தலைமறைவு ஆகுதல், வெளிநாடு முயற்சி எடுத்து தோல்வி அடைந்தல், பிறருக்கு உதவி செய்ய முன் வந்து உபத்திரம் முற்றி உயிரை விட முயற்சி எடுத்தல், போன்ற கவலை தரும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறும்.
அஷ்டமசனி
  •  மேலும் மாணவர்களுக்கு அஷ்டமச்சனி(ashtama sani) நடந்தால் கல்வி நிலையம் மாறுதல், நெருங்கிய உறவினர் வீட்டிலிருந்து கல்வி நிலையம் சென்று வருதல்,கல்வி முறை மாறுதல், மாணவர் விடுதியில் தங்குதல் போன்ற பலன்களை சந்திப்பார்கள்.
  • பெண்களுக்கு அஷ்டமசனி(ashtama sani) நடந்தால் புதுமனை கட்டுதல், மனை பழுது பார்த்தல் ,அல்லது வாடகை வீடு மாறுதல், நகை அடகு வைத்தல், திருடுப் போகுதல் போன்ற பலன்களை சந்திப்பார்கள்.
  •  முக்கியமாக குடும்பத்தில் ஒருவருக்கு மேல் அஷ்டமச்சனி(ashtama sani) நடந்தால் காதணி விழா, குலதெய்வ வழிபாடு அல்லது நேர்த்திக் கடனுக்காக கிடா வெட்டுதல் என்கிற கறி விருந்து வைக்கிறேன் என்று உறவையும் நட்பையும் அழைத்து செய்தால் கலகம், அரசு பகை, திடீர் விபத்து துக்கச் செய்தி எதிர்பாராமல் ஏற்படும் என்பது அனுபவ கருத்தாக விளங்கி வருகிறது.
  •  குறிப்பாக ஒருவரின் பிறப்பு ஜாதகத்தில் சனி பகவான் நல்ல ஆதிபத்தியம் பெற்று நல்ல இடங்களில் அமர்ந்து சுபர்களின் தொடர்பும் இருந்துவிட்டால் அவருக்கு வரும் ஏழரைச் சனி கண்டகச் சனி ,அர்த்தாஷ்டமச் சனி(ashtama sani) மற்றும் அஷ்டம சனி நடைபெறும் காலம் பெரும் பாதிப்புகள் தருவதில்லை இது நடைமுறை உண்மை.
  • அஷ்டமச் சனியில்(ashtama sani)பொதுவாக தீய பலன்களை மட்டுமே சொல்லாமல் ஒருவருக்கு நடைபெறும் திசா புத்திகள் அனுசரித்து பலன்களை உழைத்தால் வாசகர்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பாக இருக்கும் என்கிற எனது அனுபவ கருத்தை கூறிக்கொண்டு கட்டுரையை நிறைவு செய்கிறேன்

Leave a Comment

error: Content is protected !!