ஆடி அமாவாசை -2023(17.07.2023)

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

ஆடி அமாவாசை

இன்று ஆடி மாதப்பிறப்பு. தட்சிணாயன புண்யகாலம். அதோடு சோம வார அமாவாசை. இந்த மாதம் இரண்டு அமாவாசை வருகிறது. ஆடி1-ஆம் தேதி அதாவது ஜூலை 17, ஆடி 31 – ஆகஸ்ட் 16-ஆம் தேதியன்று அமாவாசை வருகிறது. ஆடி 1-ஆம் தேதி வரும் அமாவாசை கடக ராசி புனர்பூச நட்சத்திரத்திலும், ஆடி 31-ஆம் தேதி ஆயில்யம் நட்சத்திரத்திலும் வருகிறது.

எனவே இரண்டு அமாவாசை நாட்களிலும் பித்ரு தர்ப்பணம் தரலாம். தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவாசையன்று முன்னோர்க்கு பித்ரு கடன் கொடுத்தால் அது அவர்களை நேரடியாகச் சென்றடையும். ஒரே மாதத்தில் 2 அமாவாசை திதி வருகின்ற மாதத்தை ‘மலமாதம்’ என ஜோதிட சாஸ்திரம் கூறுகின்றது.

இத்தகைய மலமாதத்தில் புதுமனை புகுவிழா, நிச்சயதார்த்தம், திருமணம்,நிலைவாசல் படிஸ்தாபித்தல், புது கிணறு வெட்டுதல் போன்ற எத்தகைய சுப காரியங்களையும் செய்ய மாட்டார்கள். ஆடி மாதம் என்பதால் திருமணம், கிரகப்பிரவேசம் செய்ய மாட்டார்கள். எனவே இந்த மாதத்தில் சுபகாரியம் செய்ய முடியாமல் போகுமே என்று கவலைப்படத் தேவையில்லை.

ஆடி முதல் மார்கழி முடிய உள்ள காலத்தில் நம்முடைய முன்னோர்களான பித்ருக்கள் நம்மைப் பார்ப்பதற்காக இந்த உலகத்துக்கு வருகின்றனர். அவர்கள் பித்ரு லோகத்தில் இருந்து புறப்படும் நாள் ஆடி அமாவாசை எனவே. அவர்களை நாம் நினைவில் வைத்திருக்கிறோம் என்பதைத் தெரிவிப்பது போலவும், அவர்களை பூமிக்கு வரும்படி அழைப்பு விடுப்பதுபோலவும் ஆடி அமாவாசையன்று அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவேண்டும். என்கிறது சாஸ்திரம்.

ஆடி அமாவாசை

தம்முடைய முன்னோர்கள் பூமிக்கு வந்து சேரும் நாள் புரட்டாசி மகாளாய் அமாவாசை நாளாகும். அன்றைய தினமும் நாம் அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

பித்ருலோகத்தில் இருந்து வந்த நம் முன்னோர்கள் திரும்பவும் பிதருலோகத்துக்குச் செல்லும் நாள் தை அமாவாசை நம்முடன் வந்து ஆறு மாத காலம் தங்கியிருந்த முன்னோர்களை வழியனுப்பும் விதமாக தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

ஆடி அமாவாசை நாளில் தன்னுடைய சொந்த வீடான கடக ராசியில் தாய்காரகள் சத்திரன், தந்தைகாரகன் சூரியனுடன் இணைகிறார். சத்திரன் தேய்பிறை நிலையில் இருந்து விடுபட்டு வளர்பிறை நிலைக்கு செல்லும் நாள்.

முன்னோர்களுக்கு நாம் செய்யக்கூடி யதான இந்த தர்ப்பண காரியங்களை நாம் சிரத்தையாகச் செய்தால், நமக்கு அனைத்து வளங்களும் கிடைக்கும்.

ஆடி அமாவாசை

மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். அன்று நம்மைக் காண வரும் முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொடுத்து வரவேற்பதன் மூலம் அவர்கள் மனம் மகிழ்ந்து ஆசி வழங்குவார்கள்.

அமாவாசை நாளில் தானம் தர வேண்டும். எள் என்பதை வட மொழியில் திலம் என்று கூறுவார்கள். ‘திலம் என்றால் விஷ்ணோர் அம்ச சமுத்பவ:’ என்று பொருள். விஷ்ணுவிலிருந்து விஷ்ணு பகவானின் அம்சமாக தோன்றியது எள். திலம் என்று சொல்லப்படும் எள்ளை தானமாகக் கொடுத்தாலே சகல பாவங்களும் நீங்கிவிடும். அமாவாசை நாளில் ஆடை தானம் செய்வதால் வாழ்வில் செல்வங்கள் உண்டாகும்.

புதிய ஆடைகளை தானம் செய்வதால் ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறு வயதில் இறந்து விடுவது தடுக்கப்படும். கண்டாதி தோஷம் விலகும். பணியில் வரும் தடைகள் அனைத்தும் நீங்கும். பசு தானத்தாலும் கோ பூஜை வழி பாட்டாலும் பித்ருசாப தோஷங்கள் விலகும்.

சந்திரனின் ஆதிக்கம் மிகுந்த அமாவாசையும், சந்திரனுக்கு உகந்த திங்கட்கிழமையும் இணைந்த நாள் அமாசோம வாரம். இந்த நாளில் அதிகாலையில் அரச மரத்தை வழிபட்டு, அதை ஸ்ரீமன் நாராயணனாக பாவித்து 108 முறை வலம் வரவேண்டும். வேண்டிய வரம் கிடைக்கும்.

Leave a Comment

error: Content is protected !!