எண்ணியதை ஈடேற்றும்-பாதரச லிங்க வழிபாடு
‘சிவலிங்கத்தை’ ஆன்மாவுக்குள் நிலைநிறுத்தி வணங்குபவர்களுக்கு பேரானந்த பெருவாழ்வு கிடைக்கும் என்றார் திருமூலர்.
கருங்கல் லிங்கம், வெள்ளி லிங்கம், ஸ்வர்ண லிங்கம், மரகத லிங்கம், சந்திரகாந்தக்கல் லிங்கம், ஸ்டிக லிங்கம், சூரிய காந்தக்கல் லிங்கம் போன்ற திருமேனிகளை எங்கும் காணலாம். இவற்றில் சூரிய காந்தக்கல் லிங்கத்தை வீட்டில் வைத்து விதிப்படி வணங்குவோர் அரசியல் அரச பதவி அனுகூலங்களை பெறுவார்கள். அதுபோல ஒருவர் பாதரச லிங்கத்தை ஆகமவிதிப்படி வழிபட்டு வந்தால் அனைத்து வகை லிங்கங்களையும் பூஜை செய்த பலனை பெறுவார்கள் என்பது அனுபவ உண்மை. பாதரச லிங்கத்தை எவர் வேண்டுமானாலும் வழிபடலாம். அகலாத தன சேர்க்கையும் பெற்றுவிடலாம்.
பாதரச லிங்கத்தின் ஆற்றல் வெளிப்பாடு:
ஓரிடத்தில் கோடிக்கணக்கில் சிவலிங்கங்கள் இருப்பதை தரிசிக்கச் செல்வதை விட, ஒரு பாதரச லிங்கத்தை பூஜையில் வைத்து வணங்கி வந்தால் அதன் ஆற்றல் வெளிப்பட்டால் மாற்றங்களை காண இயலும். இந்த லிங்கத்தை பூஜிப்பவர்கள் இவ்வுலகில் சூரிய-சந்திரர்கள் இருக்கும்வரை ஆரோக்கிய வாழ்வும், அளவில்லாத சுகத்தையும் பெறுவார்கள் என்று பத்மபுராணம் எடுத்து சொல்கிறது.
பாதரச லிங்கம் ஆத்மார்த்த பூஜைக்கு தயாரிக்கும்படி வைக்கப்பட்டிருந்தால் கேட்டதை கொடுத்துவிடும். விரும்பியதை தரும்.சாந்நித்யத்தை அதனுள் புகுத்தி வணங்குவதற்கு ஏற்ற படி தயாரிக்க வேண்டும்.
பாதரசம் என்பது நிலையின்றி அசைந்தாடும் சக்தி வாய்ந்த திரவம். அதனுடன் மூலிகைகளில் சாற்றைக் கலந்து திடப் பொருளாக மாற்றி சிவலிங்கமாக உருவாக்கிட வேண்டும். இந்த அற்புதமான கலையை நன்றாக அறிந்தவர்கள், முக்காலங்களையும் உணர்ந்த மகரிஷிகளும் சித்தர்களும் ஆவர். எல்லாருமே ரசவாதம், ரசகட்டு வித்தைகளை செய்யும்போது பாதரச லிங்கங்களை வைத்து வணங்கிக் காயக்கட்டு என்னும் உடற்கட்டு அங்க சுத்தமும் பெற்றனர்.
தூய்மையான பாதரசத்தை சிவதாது என்று சித்தர்கள் கூறுவர். இது ஆண் இனத்தை குறிப்பது. இதன் சூட்சமத்தை கண்ட சித்தர்கள் அதற்கான பெண் இனத்தை குறைக்கும் மூலிகைச் சாற்றை( சக்தி, கவுரி ,தேவி) கலந்து சக்தியை வெளிப்படுத்தி மனித இனத்திற்கு நலம் புரியும் பாதரச லிங்கத்தை உருவாக்கி வழங்கினர்.
தோஷங்கள் விலகும்:
உலக மக்கள் என்றும் மகிழ்ச்சியோடு இருக்க இறைவனை பாடியவர்களில் குறிப்பிடத்தக்கவர் வள்ளலார் சுவாமிகள். அவர் ஒன்பது வகை பாதரசமணி பலனோடு கூறியுள்ளார்.
பரம்பரை மணி-அண்டத்தையும் அதில் அடங்கிய பொருள்களையும் காட்டுவது.
பராபர மணி-பிண்டமும் பொருளும் காட்டுவது
அரும்பெறல் மணி-நினைத்ததை நினைத்தபடி அருள்வது
ககன மணி-விண்ணுலக பொருள்களை ஆட்டி வைப்பது
சரவொளி மணி -மண்ணுலக பொருள்களை ஆட்டி வைப்பது
வித்தக மணி-கண்ணில் தெரியும் பொருள்களை ஆட்டுவது
கலைநிறை மணி-எல்லாம் உலகத்திற்கும் உலவவைப்பது.
சித்து செய் மணி-மகா சக்திகளை அருள வல்லது
வளரொளி மணி-அழியாத வாழ்வளிப்பது.
சிவலிங்கத் திருமேனியை விதிப்படி செய்துவிட்டால் சுவாமிகள் கூறிய ஒன்பது வகை மணிகளும் அருளும் பணியை ஒரே பாதரச லிங்கம் செய்து விடும் என்று தெளிதல் வேண்டும்..
வழிபாட்டு முறை மற்றும் துதிகள்:
தண்ணீர், மஞ்சள் பொடி, பால் விட்டு அபிஷேகம் செய்து, சந்தனம் ,குங்குமம் மஞ்சள்,மலர் இட்டு 18 வகை கலைகள் விளங்கும்படி ‘தபிநீ தாபிணீ, கலா, தொடங்கி காமதாயிணீ கலா, வரை பெயர் சொல்லி மலர்கள் அர்ச்சனை செய்து ஆவாகன பூஜை செய்ய வேண்டும். தினமும் சிவலிங்க தியானம் ஐந்து முறை சொல்லிய பிறகு பஞ்சாட்சர மூல மந்திரத்தை (ஓம் நமச்சிவாய) 108 முறை ஜெபித்து வர வேண்டும்.
எல்லோரும் சிவபூஜை செய்ய தீட்சை எடுத்துக் கொண்டு தினமும் கட்டுப்பாடுகளுடன் நடந்து கொள்ள முடியாது. ஈசனை அனைத்து உபசாரங்களோடு பூஜை செய்த் பயன் தரும் சிவமானச பூஜை துதியை காலையில் சொல்லிவிட்டு சிவ தியானம் செய்யலாம்.
‘ஓம் ரத்னன : கல்பித மானஸம்
ஹிமா ஜலை ஸ்நானம் ச திவ்யாம்பரம்
நானாரத்ன விபூஷிகம் ம்ருகமதா
மோதாங்கிதம் சந்தனம்
ஜாதீ சம்பக பில்வபத்ர ரசிதம்
புஷ்பஞ்ச தூபம் ததா
தீபம் தேவ தயாநிதே பசுபதே
ஹ்ருத கவ்பிதம் க்ருஹ்யதாம்
பாதரச லிங்கத்தினுலள் சிவன் கோவில் கொண்டிருப்பதாக எண்ணியபடி ஈஸ்வரன் ரூப தியானித்து துதி கூறும் வடிவத்தை எண்ணி பிரார்த்தனை செய்வது சிறப்பான மூர்த்திகரத்தை கொடுக்கும்.
ஜாதகத்தில் ரசவாத சித்தி
வாழும் பொழுது பொன்னும், பொருளும் ஆளடிமையும், மின்னும் மேனியும் கிடைக்குமென்று சிவலிங்கத்தை வைத்து வழிபடுகின்றனர். ஐந்தில் அல்லது ஒன்பதில் சனி இருந்தால் பாதரச லிங்க பூஜையில் மேன்மை உண்டாகும். 5ம் அதிபதி குரு வாகி ஒன்பதில் இருக்க தங்கம் சேரும் யோகம் வரும்.சந்திரன் 5ம் அதிபதியாகி 9ம் அமர்ந்திருந்தால் ஒளஷசித்தி ;ரசமணிகள், பாதரச லிங்கத்தின் மூலம் பொருள் சேர்க்கை உண்டாகும். பொதுவாக 5,9 ,வீட்டின் அதிபதிகள் விரயமோ, மறைவோ, பெற்று தோஷம் அடைந்தால் கிரக சாந்திகள் செய்து ரசவாத சித்தியால் பயன்பெறலாம். ஏழாமிடத்தில் செவ்வாய், பூர்வ புண்ணியத்தில் குரு, ஜீவன ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்ந்தால் பாதரச லிங்க வழிபாட்டின் மூலம் பல சாதனைகள் செய்வார்கள் என்று அகத்தியர் பாடல் கூறுகிறது…
தேவைப்படும் அன்பர்கள் Telegram வழியே தொடர்புகொள்ளவும் …