கன்னி ராசி திருமண வாழ்க்கை

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

கன்னி லக்னம் அல்லது கன்னி ராசி

💚இவர்களுக்கு 7 – ஆம் வீடு மீனம் ஆகும் . இதன் அதிபதி குரு.இந்த ராசியில் குரு , சனி,புதன் சாரம் வாங்கிய பூரட்டாதி , உத்திரட்டாதி , ரேவதி நட்சத்திரங்கள் உள்ளன.

💚மீனம் குருவின் ஆட்சி வீடு ஆதலால் எதிலும் நேர்மையாகச் செயல்படுவார்கள். உடன் இருக்கும் சனி யுக்தியைத் தருவார்.

💚ராசியில் புதன் உச்சமடைதலும் , சுக்கிரன் நீசமடைதலும் உண்டு. எனவே , இந்த ராசிக்காரர்கள் பொதுவாக லட்சணமாக- அழகாக இருப்பர்.எனினும் இவர்களுக்கு சற்று மந்த புத்தியும் உண்டு.

💚கன்னி லக்ன 7 – ஆம் அதிபதி உச்சமானால் திருமணம் ஆனவுடன் நினைத்தது எல்லாம் நடக்கும்.

💚இவர்கள் வியாபாரம் செய்து வந்தால் லாபம் செழித்தோங்கும் . திருமணத்தின் மூலமோ , அதற்குப் பிறகோ வீடு , மனை , வாசல் , பூமி , வாகனப் பிராப்தி அமோகமாக இருக்கும். நல்ல சுக வாழ்க்கை இருக்கும்.

💚இதே களத்திரக்குரிய 7 – ஆம் அதிபதி நீசமானால் , கல்யாணம் ஆனவுடன் ஆரோக்கியக் குறைவு ஏற்படும் ; சுகம் கெடும்.

கன்னி ராசி

💚கன்னி லக்ன , ராசிக்காரர்களின் மாமனார் வீட்டினருகில் விளையாட்டு மைதானம் , சிறுவர் பள்ளி அல்லது கல்லூரிகள் இருக்க வாய்ப்புண்டு.

💚சிலர் வீடு கடல் சார்ந்த பகுதியில் இருக்கும் . மாமியார் சற்று வெகுளியாகவும் சிலர் மிகவும் புத்திசாலியாகவும் இருக்கக்கூடும். மாமனார் வெகு கோபக்காரராக இருப்பார்.

💚மாமனார் வீடு வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் அமையும்.

💚இவர்களின் களத்திர வீடு , காலபுருஷ தத்துவப்படி 12 – ஆம் வீடு ஆதலால் , இவர்களின் வாழ்க்கைத் துணைக்கு எப்போதும் பயணம் செய்யும் ஆவல் , நன்றாக செலவழிக்க ஆசை அல்லது நன்றாகத் தூங்குவதற்கு விருப்பம் என்று இருப்பார்.

💚தீ ,து , ந , ச , ஸ்ரீ , தே , தோ , ச , சி(T,N,S,Y,R,L,V) மற்றும் ய , ர , ல , வ ஆகிய எழுத்துகளில் பெயர் ஆரம்பிக்கும்.

Leave a Comment

error: Content is protected !!