குட்டிச் சாத்தான் உபாஸன மந்திரம்
செய்யவேண்டிய விதி
வெள்ளிக்கிழமை இராத்திரி மூன்று மணிக்கு எழுந்து , குளம் அல்லது நதியில் ஸ்நானஞ் செய்து , சிகப்பு நார்மடிகட்டி விபூதி தரித்து , அனுஷ்டானம் முடித்து இடுப்பளவு தண்ணீரில் நின்று நாற்பத்தெட்டு தினம் கீழ் சொல்லும் மந்திரத்தைச் செபிக்கவும்.செய்பவர் தானே சமையல் செய்து ஒருவேளை சாப்பிட வேண்டும். தென்னையோலை பச்சையாய் கிடுகுமுடைந்து அதில் படுத்துக் கொள்ளவேண்டும். சிகப்பு வஸ்திரம் கட்டிக் கொள்ள வேண்டும்.
மேற்படி மந்திரம் ஓம் குட்டிச் சாத்தா , பஹவதிஸேவியா , ஸ்ரீம் , றீம் , வயநமசி , சாத்தா , வாவா , நின்னாணை , என்னாணை , நின்னையும் , என்னையும் , படச்ச பிர்மாவினாணை , சக்தியாணை , சங்கரனாணை , வா , வும் , படு , சுவாஹா , என 108 உரு தினம் ஒன்றுக்கு செய்யச் சித்தியாம்.
இப்படிச் செய்து வர , நாற்பதாம் நாள் மேற்படி தேவதை ஒரு சிறிய மனுஷரூபத்துடன் விபூதிப்பையும் , பிரம்புங்கொண்டு வரும். வந்து பூசை செய்யும் குளத்தில் ஓரமாய் வைத்து விட்டு முழங்கால் ஆழ ஜலத்தில் இறங்கி ஸ்நானம் செய்வது போல் இறங்கும். அது சமயம் பயப்படாமல் சீக்கிரம் மேற்படி பையும் பிரம்புமெடுத்துக் கொண்டு இடுப்பு ஜலத்தில் போய் நின்று கொண்டால் மேற்படி தேவதை அவ்வளவு ஜலத்தில் இறங்காமல் விபூதிப்பையையும் , பிரம்பையும் கொடுவென்று கேட்கும். அப்போது நான் நினைக்கும் போதெல்லாம் நீஎன்னிடம் வந்து நான் வேண்டும் காரியங்களைத் தடையின்றிச் செய்வதாக சிவன் மீது ஆணையிட்டுக் கொடுக்கவென்று சொல்ல வேண்டியது . அது ஆணையிட்டுக் கொடுத்த பின் கொடுத்து விடவும்.
பின் உருச்செபித்து சித்தி பெற்றவர்கள் எந்தப் பதார்த்தம் சாப்பிட்ட போதும் , அந்தப் பதார்த்தத்தில் முதலிலெடுத்துத் தனக்கு பின்புறம் மேற்படி தேவதைக்குக் காட்டிவிட்டுச் சாப்பிடவும்.அப்படிச் செய்யாதவரை கெடுதி செய்யும்.
இதன் நன்மை
எந்தத் தேசத்திலிருக்கும் பதார்த்தம் வேண்டுமென்றாலும் கொண்டுவந்து கொடுக்கும் . அதைப் பிறருக்குக் கொடுக்கலாம் . தான் அனுபவிக்கக்கூடாது .
இன்னுமனேக வேலை செய்யலாம் .