குபேர பண வரவு உண்டாக- தாந்த்ரீக பரிகாரங்கள்
🔹பச்சை கற்பூரம் , சோம்பு , ஏலக்காய் இவை மூன்றையும் ஒரு மஞ்சள் துணியில் முடிச்சாக கட்டி குபேர மூலையில் வைத்து தூபம் காண்பித்து வரவும்.
🔹(All Spice)என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சர்வசுகந்தியை வீடு மற்றும் வியாபார ஸ்தலங்களில் நான்கு மூளையிலும் போட்டு வைக்க பண வரவு உண்டாகும். அடிக்கடி மாற்றி வரவும்.
🔹இலவங்கப் பட்டை குச்சியில் பத்து ரூபாய் தாளை குத்தி நம் பண பெட்டியில் வைத்து வர பண வரவு மிகும்.
🔹புதினா இலைகளை பர்ஸில் வைத்து வர பண வளர்ச்சி நிச்சயம். ஒவ்வொரு முறை பணத்தை வெளியே எடுக்கும் போதும் இலையை பார்த்து வர வேண்டும். மேலும் மூன்று நாட்களுக்கொரு முறை மாற்றி விட வேண்டும்.
🔹Alfalfa எனப்படும் குதிரை மசால் பணத்தை ஈர்க்கும் தன்மை உடையது கடன் கேட்க போகும் போதோ அல்லது கொடுத்த கடனை வசூலிக்க செல்லும் போதோ
கூடவே சிறிது எடுத்து செல்லலாம்.
🔹வெந்தயம் சிறுது கிண்ணத்தில் போட்டு திறந்த நிலையில் வீடு அடுக்களையில் வைத்து வர என்றும் உணவு பொருட்களுக்கு குறைவிருக்காது . வாரம் ஒரு முறை பழையதை ஓடும் நீரில் போட்டு விட்டு புதியதாய் மாற்றி விடவும்.