குரு நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திர பலன்கள்
ஒருவர் பிறந்த ஜாதகத்தில் குரு நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திரத்தை லக்கினமோ , சந்திரனோ , லக்கினத்தின் அதிபதியோ பெற்று இருந்தால் அந்த ஜாதகருக்கு குரு மூலம் கிடைக்கக்கூடிய பலன்கள் கிடைக்காது.
அவரவர் ஜாதகத்தில் குரு எந்த பாவத்தில் உள்ளாரோ அந்த பாவத்தின் அதிபதி குருவின் எதிரிடை நட்சத்திரத்தை பெற்றால் அந்த பாவத்திற்கு குருவால் கிடைக்கக்கூடிய பலன்கள் தடைபடும்.
1.இதன் பலன்கள் :
பணப்பற்றாக்குறை அடிக்கடி ஏற்படுதல் , எவ்வளவு பணம் வந்தாலும் கையில் தங்காத சூழ்நிலை , தாங்கிக் கொள்ள முடியாத பிரச்சனைகள் வருவது , பிறர் சூழ்ச்சிகளுக்குள் சிக்குதல் , திருட்டு பயம் . குழந்தைகளால் பிரச்சனை.
2.இதன் பலன்கள் :
பொருள்கள் சேதம் ஏற்படுதல் , கடன்காரர்கள் அரசுவகை பாதிப்புக்களால் சொத்து ஏலம்போதல், வீட்டைவிட்டு வெளியேறுதல் , குடும்பத்தில் . விரக்தி மனக்கசப்பு , நித்தியகண்டம் பூர்ணாயுள் என்ற நிலை
3.இதன் பலன்கள் :
கொடுமையான பாதிப்புக்களுக்கு ஆளாகுதல், தவிர்க்க முடியாத காரியங்களில் தலையிட்டு அதனால் வரும் தொல்லைகள் அனுபவித்தல். கௌரவக் குறைவு , புத்திர புத்திரிகளால் வரும் பாதிப்பு சோகம் , பதவி இழப்பு.
1 முதல் 3 வரையில் சொல்லப்பட்ட பலன்கள் குரு தசா புக்தி அந்திர காலங்களிலும் புனர்பூசம் விசாகம் – பூரட்டாதி – போன்ற நட்சத்திரங்கள் வரும் நாளிலும் வியாழக்கிழமைகளிலும் , குரு ஓரை வரும் நேரங்களிலும் மேலே சொல்லப்பட்ட பலன்கள் நடக்கும்.
குரு நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திர அட்டவணையை பெற கீழே சொடுக்கவும்.