கோவை தண்டு மாரியம்மன்
வரலாறு:
கோயம்புத்தூர் அவிநாசி சாலையில் நேரு விளையாட்டு அரங்கத்தில் அருகே கோவை தண்டு மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் மன்னன் திப்பு சுல்தானின் காலத்தில் கட்டப்பட்டது என வரலாறு கூறுகிறது. திப்பு சுல்தானின் கனவில் தோன்றிய அம்மன் ,தான் வேப்ப மரத்தின் அடியில் குடி கொண்டிருப்பதாகவும் தனக்கு ஒரு கோவில் எழுப்புமாறு உத்தரவிட அம்மனின் ஆணைக்கேற்ப அந்த வேப்ப மரத்தின் அருகில் கோவிலை எழுப்பி தண்டுமாரியம்மனை வழிபடத் தொடங்கினார்.
சிறப்பு:
அம்மை நோய் நீங்கவும், மழை வேண்டியும் தண்டு மாரியம்மனை பக்தர்கள் வேண்டிக் கொள்கிறார்கள். ஆலயத்தில் நடைபெறும் திருவிளக்கு வழிபாடு,லட்சார்ச்சனை,நவராத்திரி பூஜை மிகவும் பிரசித்தமாகும்.
பரிகாரம்:
செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி தண்டுமாரியம்மனை நாம் மனமுருகி வேண்டி வர எவ்வாறு ஒரு மரத்தின் தண்டுகள் பெருகி வருகின்றனவோ அதை போல தண்டுமாரியம்மன் நம் வாழ்வில் பல செல்வங்களை அள்ளி கொடுப்பாள்.
வழித்தடம்:
கோயம்புத்தூர் அவிநாசி செல்லும் வழித்தடத்தில் கோயம்புத்தூரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது இவ்வாலயம்.
Google Map :