இன்றைய ராசி பலன்
மேஷம்
எதையும் சமாளிக்கும் பக்குவம் பிறக்கும்.சிந்தனைகளை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும்.பழைய பாக்கிகள் வசூலாகும்.
ரிஷபம்
கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும், வியாபாரத்தில் மாற்றமான சூழல் உண்டாகும். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். வாகன பழுது களை சீர் செய்வீர்கள். அலுவலகத்தில் எதிர்பாராத புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
மிதுனம்
வரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். தேவையற்ற அலைச்சல்களால் ஒருவிதமான சோர்வு உண்டாகும். செய்தொழிலில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.
கடகம்
விலை உயர்ந்த பொருட்களில் ஆர்வம் உண்டாகும். வியாபாரப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளின் எண்ணங்களை புரிந்து செயல்படவும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். பிற மொழி பேசும் மக்களின் அறிமுகம் ஏற்படும்.
சிம்மம்
உத்தியோகப் பணிகளில் எண்ணிய பணிகள் நிறைவேறும். வியாபாரப் பணிகளில் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும்.
நெருக்கமானவர்களுடன் நேரங்களை செலவு செய்து மனமகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கன்னி
இறை பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். தந்தை வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். புதிய முயற்சிகளில் நுட்பங்களை பயன்படுத்தி சாதகமான வாய்ப்புகளை உருவாக்குவீர்கள்.
துலாம்
புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். மக்கள் பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை ஏற்படும். முக்கிய பிரமுகர்களின்
அறிமுகமும், ஆதாயமும் கிடைக்கும். தாய் வழி உறவுகளால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும்.
விருச்சிகம்
உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். வெளியூர் பயணங்களில் புதிய அனுபவம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.வியாபாரத்தில் சிந்தித்துச் செயல்பட்டால்புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் மேம்படும்.
தனுசு
வாழ்க்கை துணையின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். அரசு அதிகாரிகளால் நன்மை உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். வருமான வாய்ப்புகளை மேம்படுத்துவீர்கள்.
மகரம்
நிர்வாக பொறுப்புகளில் கவனத்துடன் செயல்படவும், உறவினர்களால் மனதில் சில நெருடல்கள் ஏற்படும். விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் மனதில் அமைதி நிலவும். கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கவனம் வேண்டும்.
கும்பம்
கொடுக்கல், வாங்கலில் இழுபறியான நிலை உண்டாகும். பணவரவுகள் தேவைக்கு சாதகமாக அமையும், சிக்கனமாக செயல்பட்டால் கடன்கள் குறையும், தாய்மாமனின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள்.
மீனம்
குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் லாபம் அடைவீர்கள். எதிர்பார்த்தஉதவிகள் கிடைக்கும். போட்டி, பொறாமைகள் மறையும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள்.