சங்கரநாராயணர் கோவில்:
Sankaranaarayanar Temple
ஆடி மாதத்தின் உத்திராட நாளில் சங்கரநாராயணர்(Sankaranaarayanar) கோமதி அம்மனுக்கும், சங்கன், பதுமன் ஆகியோருக்கும் காட்சியளித்த நாளை நினைவு கூறும் வகையில் “ஆடி தவசு”(aadi thavasu) கொண்டாடப்படுகிறது.
இங்கு அமைந்துள்ள ஸ்ரீசக்ர பீடத்தில் நோயாளிகள், தீய சக்திகளால்ஆட்கொள்ளப்பட்டவர்ள், மனநலமற்றவர்கள் ஆகியோர்களை அமரவைத்தால் நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
அம்மனுக்கு வழங்கப்படும் நெய்வைத்தியங்களில் மாவிளக்கு முக்கியத்துவம் பெறுகிறது.
கோவிலுக்கு வருவோர் பாம்பு ,தேள்ஆகியவற்றின் சிறு படங்களை உண்டியலில் செலுத்துவதன் மூலம் நலம்பெறுவர்என்பதுநம்பப்படுகிது.
கோவிலின் உள்ளே அம்மன் சன்னதியை சுற்றி அமைந்துள்ள பிரகாரத்தில் உள்ள பாம்பு புற்று ‘வன்மீகம்’என்றுஅழைக்கப்படுகிது.
இப்புற்றிலிருந்து எடுக்கப்படும் மணலை உடலில் தடவிக் கொண்டால் நோய்கள் நீங்கும் என்று நம்பப்படுகிறது.
பாம்பாட்டி சித்தர் இவ்வூரிலேயே வாழ்ந்து தேவியின் மகிமைகளை உலகறியச் செய்தார். அவரது சமாதியும் கோவிலுக்கு அருகே அமைந்துள்ளது.
இத்தலம் தென்பாண்டி நாட்டின் பஞ்ச பூத தலங்களில் மண்தலம் (ப்ரித்திவி) ஆகும்.
உக்கிரப்பாண்டியன் என்னும் மன்னனால் கட்டப்பட்ட இக்கோயிலின் தொன்மை கி.பி. 1022.
இறைவனின் முழு வடிவத்தை உலக மக்கள் உணர வேண்டும் என அம்மன்சிவனிடம்வேண்டஅம்மன்வேண்டுகோளுக்கிணங்க சிவன் சங்கர நாராயணனாக (சங்கரன் -சிவன்; நாராயணன்- திருமால்)
காட்சி அளித்தார்கள் .
கடவுளர் இருவருமே சமம் என்றும் அன்பினாலும் தியாகத்தினாலும் மட்டுமே இவர்களை அடைய முடியும் என்றும் சிவனும் திருமாலும் இணைந்து சங்கரநாராயணர் தோற்றத்தால் உணர்த்தப்பட்டது.