சுபகிருது வருட பலன்கள்-மேஷம்
பூமிகாரனாகிய செவ்வாயை அதிபதியாகக் கொண்ட மேஷராசி அன்பர்களே!!!
வருடம் முழுவதும் குருபகவான் உங்கள் ராசிக்கு 12-ஆம் இடம் சஞ்சாரம் செய்கிறார். சனிபகவான் அதிசாரமாக சித்திரை மாதம் 17ஆம் தேதி முதல் ஆனி மாதம் 28ஆம் தேதி வரை உங்கள் ராசிக்கு பதினோராம் இடம் சஞ்சாரம் செய்கிறார். பிறகு மீண்டும் வக்கிரகதியில் தை மாதம் 3 ஆம் தேதி வரை உங்கள் ராசிக்கு 10-ஆம் இடம் சஞ்சாரம் செய்கிறார். மீண்டும் தை மாதம் 3ம் தேதி சனி பகவான் நேர்கதியில் உங்கள் ராசிக்கு 11ம் இடம் வருகிறார். வருடம் முழுவதும் ராகு பகவான் உங்கள் ஜென்ம ராசியிலும் கேது பகவான் 7ம் இடத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள்.
- வருட ஆரம்பம் முதல் ஆனி மாதம் வரை வீட்டில் சுப செலவுகள் நடக்கும்.
- தொழில் துறையில் நல்ல லாபம் கிடைக்கும்.
- தாராள பணப்புழக்கம் ஏற்படும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறையும்.
- உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
- வீடு மனை வாங்கும் யோகம் உண்டு.
- மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள்.
- ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தொழில்துறையின் அலைச்சல் மிக அதிகமாக இருக்கும். சிலருக்கு தொழில் துறையில் இடமாற்றம் ஏற்படும். தூக்கம் குறையும்.
- மனைவியின் ஆரோக்கியத்தில் குறைபாடு ஏற்படும்.
- கூட்டு வியாபாரத்தில் குழப்பம் ஏற்பட்டு பிறகு சரியாகும்.
- சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் ஏற்படும்.
- தை மாதம் முதல் பங்குனி மாதம் வரை உள்ள காலத்தில் புதிதாக தங்கம், வெள்ளி நகைகளை வாங்கி அணிவீர்கள்.
- பழைய பாக்கிகள் வசூலாகும்.
- தொழில் துறையில் நல்ல வளர்ச்சியும் உத்தியோக உயர்வு காரணமாக இடமாற்றமும் ஏற்படும்.
- புதிதாக வீடு மனை வாங்கி கிரகப்பிரவேசம் செய்யும் யோகம் உண்டு.
- கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் ஏற்படும். ஆரோக்கியம் சீராக இருக்கும். வேலை வாய்ப்பு உண்டு.
பரிகாரம்:
பிரதி சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு நெய் தீபம் ஏற்றி வர நல்ல பலன்கள் மேலும் அதிகமாக கிடைக்கும்.