அட்சய திருதியை -2024

அட்சய திருதியை -2024

2024 ஆம் வருடம், சித்திரை 27ஆம் தேதி, மே 10ஆம் தேதி வருகிறது ‘அட்சய திருதியை’. இது வெள்ளிக்கிழமை. ரோகிணி நட்சத்திரத்தில் அமைகிறது. ரோகிணியில் சந்திரன் உச்சம் அடைவார். அன்று ரோகிணி நட்சத்திரம் மதியம் 01.09 மணி வரை உள்ளது. ஆனால் அன்றைக்கு திதி தான் முக்கியம். ‘அட்சய திருதியை’ அன்று காலையில் ஆரம்பித்து இரவு வரை நீள்கிறது. எனவே வெள்ளிக்கிழமை 10:30 முதல் 12.00 மணி வரை ராகு காலம் தவிர்த்து தங்கம் போன்ற பொருள்களை வாங்கலாம்.

அட்சய திருதியை

தங்க மட்டுமல்ல நீங்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்கான எச்செயலையும் இன்று ஆரம்பித்து ஒரு பிள்ளையார் சுழி போட்டு விடுங்கள். வீடு, மனை, வாகனம் வாங்க பெரு விருப்பம் உள்ளவர்கள் அது சம்பந்தமான நிறுவனத்திடம் ஃபோன் போட்டு விலை விசாரிக்கவாவது முயற்சி செய்யுங்கள்.

இன்னாளில் எதைச் செய்தாலும் அது பன்மடங்காக பெருகும். வளம் பெரும் முன்னேற்றம் கிட்டும். எனவே உங்கள் வாழ்வில் எந்த விஷயங்கள் பல்கிப் பெருக வேண்டும் என்று நினைக்கிறீர்களோ? அவர்கள் இந்த அட்சய திருதியை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!