சூரியனும் -பூர்வ ஜென்மமும்
- சூரியன் சூரியன் சுபத் தன்மையுடன் 5 – ஆமிட சம்பந்தம் பெற்றால் ஜாதகர் முற்பிறவியில் தந்தையை நன்கு கவனித்திருப்பார்.
- அரசு சார்ந்த செயல்கள் , அரசியல் போன்றவற்றில் மிக நியாயமாக நடந்து அனைவருக்கும் ஒளி பொருந்திய வாழ்வைக் கொடுத்திருப்பார்.
- மலை , காடுகள் சார்ந்த இடங்களில் வெகு நன்மை செய்திருப்பார்.
- அந்தணர்களுக்கு உதவியும் , மருத்துவ சேவையும் புரிந்திருப்பார்.
- இதே சூரியன் அசுபத் தன்மையுடன் இருப்பின் , ஜாதகர் கடந்த ஜென்மத்தில் தந்தைக்கு துரோகம் செய்திருப்பார்.
- அரசுநிலம் , அரசு கஜானாவை அபகரித்திருப்பார்.
- காடுகளில் அநியாயமாக வேட்டை நடத்தி விலங்கினங்களை அழித்திருப்பார். அந்தணர்களை கலங்கவைத்திருப்பார்.
- கோவில்களில் விளக்கெரியாமல் வினை புரிந்திருப்பார்.