Homeஜோதிட குறிப்புகள்12 வீடுகளில் செவ்வாய் நின்ற பலன்கள்:விரிவான விளக்கம்

12 வீடுகளில் செவ்வாய் நின்ற பலன்கள்:விரிவான விளக்கம்

செவ்வாய்

லக்னத்தில் செவ்வாய் இருந்தால்

ஒரு ஜாதகனின் லக்கினம் எனும் முதல் பாவத்தில் செவ்வாய் இருந்தால்பிற பெண்களுடன் தொடர்பு ஏற்படலாம்.அற்பத்தனமான செயல்களை தவிர்ப்பது நல்லது.செவ்வரி படர்ந்து, உடல் வலிமை பெற்று இருக்கும்.சொத்துகள் சேர வாய்ப்பு உண்டாகும்.மற்ற கிரகங்கள் வலுப்பெற்று இருந்தால் சொத்துக்கள் வரும்.முதல் பாவம் கடகம், மிதுனமானால் பலன்கள் ஏறுக்குமாறாக இருக்கும்

2ல் செவ்வாய் இருந்தால்

இரண்டாம் பாவத்தில் செவ்வாய் இருந்தால்,அவர் முன்கோபம் மிகுந்தவராக இருப்பார்.இளமையில் திருமணம் நடக்கும்.மனைவியிடம் அடிக்கடி சண்டை விடுவார்.கோபத்தில் சொற்கள் திக்கும்.நிலபுலன்கள் வாய்க்கும்.

3ல் செவ்வாய் இருந்தால்

மூன்றாம் பாவத்தில் செவ்வாய் இருந்தால்,சகோதர ,சகோதரிகள் உடன் சண்டை சச்சரவு ஏற்படும்.வாகனங்களால் விபத்து நேரலாம்.பிடிவாதம், குறுகிய நோக்கம், அவசரம் ஆகிய குணங்களால் பொருள் இழப்பும், அவமானமும் ஏற்படும்.நடிகை, நாட்டியக்காரி ஆகியவர்களின் நட்பினால் இழப்பு ஏற்படும்.

செவ்வாய்

4ல் செவ்வாய் இருந்தால்

நான்காம் பாவத்தில் செவ்வாய் அமைந்தவர்,இளைய சகோதரனை இழக்கக்கூடும்.செங்கல் அடுக்கிய வீட்டில் குடியிருக்க நேரும்.அடிக்கடி அக்கம்பக்கத்தில் சண்டை சச்சரவு ஏற்படும்.துணிச்சல் கொண்ட இவர் முதுமையில் பல தொல்லைகளை அனுபவிக்க நேரும்.

5ல் செவ்வாய் இருந்தால்

ஐந்தாம் பாவத்தில் செவ்வாய் அமைந்தால்,குறுகிய புத்தி,நலம்  கெட்ட உடல், தாயாருக்கு நோய், சூதாட்டத்தில் பொருள் இழப்பு ஏற்படும்.பரிகாரத்தாலும் முருக பக்தியாலும் இந்த பலனை மாற்றலாம்.

6ல் செவ்வாய் இருந்தால்

ஆறாம் பாவத்தில் செவ்வாய் அமையப் பெற்றவர்,வாழ்க்கையை உற்சாகமாக இருக்கும்.பகைவர் தொல்லை தருவார்.பேச்சு அதிகார தோரணையில் அமைந்திருக்கும்.வேலையாட்கள் துரோகம் செய்வர்.உடலில் படைகள், புண்கள்,சிறுநீர் வியாதிகள், காய்ச்சல், இதய நோய்கள் நுரையீரல் கோளாறுகள், ஏற்படலாம்.

7ல் செவ்வாய் இருந்தால்

ஏழாம் பாவத்தில் செவ்வாய் அமையப் பெற்றவர்,பல சகோதரர்களை பெற்றவர்.சயரோக நோய் ஏற்படாமல் விழிப்பாய் இருக்க வேண்டும்.மனைவிகளால் தொல்லை ஏற்படலாம்.செரிமானக் கோளாறு ஏற்படலாம்.சண்டை, சச்சரவுகள் உண்டாகும்.அடிக்கடி உணவு உறவினர்களுடன் வம்பு வழக்குகள் ஏற்படும்.

8ல் செவ்வாய் இருந்தால்

எட்டாம் பாவத்தில் செவ்வாய் அமையப் பெற்றவர் பலருக்கு ஆயுள் குறைவு,ஆயுதங்களால் தாக்கப்பட நேரிடலாம்.பிறரின் துரோகம், ஒழுக்கமின்மை ஆகிய கோளாறுகளால் ரத்த அழுத்தம் மிகுதியாகலாம்.மன நிம்மதியற்ற வாழ்க்கை அமையக்கூடும்.

செவ்வாய்

9ல் செவ்வாய் இருந்தால்

ஒன்பதாம் பாவத்தில் செவ்வாய்  இருக்கப்பெற்றவர்,பொய் சொல்வார்.நாத்திக வாதம் புரிவார்.மகிழ்ச்சியாயும்  உடல்நலத்தோடு இருந்தாலும் தந்தையின் உடல்நலக் குறைவினால் பிரச்சனைகள் ஏற்படும்.பொருள் இழப்பு ஏற்படும்.

10ல் செவ்வாய் இருந்தால்

பத்தாம் பாவத்தில் செவ்வாய் அமையப் பெற்றவர்,முருக பக்தராய் இருப்பார்.தைரியமுள்ள இவர் எதையும் விரைந்து செயல்பட வைப்பார்.பொது செயல்களில் ஈடுபடுவோர்.தலைவர் பதவி பெற்று புகழ் பெறுவார்.சபல புத்தி மிகுதியாய் இருக்கும் ஆனால் சாமர்த்தியமாக நடந்து கொள்வார்.

11ல் செவ்வாய் இருந்தால்

பதினோராம் பாவத்தில் செவ்வாய் இருக்கப் பெற்றவர்,எதிரிகள் பலரை ஏற்படுத்திக் கொள்வார்.மோசமான நண்பர்கள் சேருவார்.நிலபுலங்கள் வாங்குவார்.தைரியசாலியாக செயல்படுவார்.ஆயுதத்தால் காயம் ஏற்பட்டாலும் அதன் மூலம் லாபத்தை அடைவார்கள்.செவ்வாய் பற்றிய விவரங்களில் மிகுந்த அளவு தோஷ பரிகார பூஜைகள் செய்தால் நலம் பெறலாம்.

12ல் செவ்வாய் இருந்தால்

பனிரெண்டாம் பாவத்தில் செவ்வாய் இருந்தால்,திருடர்களால் பொருள் நஷ்டம்,காதில் நோய்கள்,புறங்கூறும்  பழக்கத்தால் சண்டை சச்சரவு ,ரகசிய எதிரிகளால் கோர்ட், போலீஸ் ஸ்டேஷன் செல்ல நேரிடலாம்.இளமையிலேயே ஆண்மை குறைந்து விடும் வாய்ப்பு உண்டு.

இதுவரை 12 பாவங்களில் செவ்வாய் இருந்தால் ஏற்படும் நன்மை தீமைகளை அறிந்தோம் .தீமையான செயல்களை செய்வதால் ஏற்படும் பாவத்தை விலக்கி பாதையை சரிபடுத்த தோஷ பரிகார பூஜைகள் செய்வது நல்லது.

இதையும் கொஞ்சம் படிங்க : 12 வீடுகளில் சனி நின்ற பலன்கள்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!