சூரியன் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திரங்கள்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

சூரியன் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திரங்கள்

நவக்கிரகங்கள் ஒவ்வொருவரும் தான் எந்த நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார்களோ அந்த நட்சத்திரத்திற்கு எதிராக செயல்படும் நட்சத்திரம் ஒன்று வரும் .

அந்த எதிர்ப்பாக செயல்படும் நட்சத்திரத்தில் எந்த கிரகம் நிற்கிறதோ அந்தக் கிரகமானது சஞ்சாரம் செய்யும் எந்த கிரகத்திற்கு எதிரியாக அமைந்ததோ அந்த கிரகத்தின் காரக ஆதிபத்தியபலன் எதிர்ப்பாக அமைந்த நட்சத்திரத்தை பெற்ற கிரகத்திற்கு கிடைக்காது.

இப்படி எதிர்ப்பாக அமையும் நட்சத்திரத்தைத் தான் எதிரிடை நட்சத்திரம் என சொல்வது இவ்வகை எதிரிடை நட்சத்திரங்கள் சூரியன் முதல் கேது வரை உள்ள நவக் கிரகங்கள் சஞ்சாரம் செய்யும் அசுவனி முதல் ரேவதி வரையிலான நட்சத்திரங்களின் எதிரிடை நட்சத்திரத்தை உடன் எளிதாக எல்லோரும் அறியும் பொருட்டு நவக்கிரகங்களுக் கும் தனித்தனியாக அட்டவனையாகத் தரப்பட்டு உள்ளது .

சூரியனின் எதிரிடையில் எந்த கிரகம் செல்கிறதோ அக்கிரகத்திற்கு சூரியன்மூலம் கிடைக்கக்கூடிய பலன்கள் கிடைக்காது .

(உதாரணமாக சூரியன் 10 – க்குரியவர் என்றால் இவர் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திரத்தின் லக்கினாதிபதியான செவ்வாய் செல்லும்போது லக்கினாதிபதியான ( ஜாதகர் ) செவ்வாய் 10 – க்குரிய சூரியன் மூலம் கிடைக்க கூடிய தொழில் வகை பாதிப்புகள் ஏற்படும்.)

சூரியன் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்தரத்தில் ஒன்றில் ஜாதகரின் ஜென்ம நட்சத்திரம் அல்லது ஜென்ம லக்கினம் நின்ற நட்சத்திரம் அல்லது லக்கினத்தின் அதிபதியோ ராசியின் அதிபதியோ அடைந்தால் ஜாதகருக்கு சூரியன் மூலம் கிடைக்கக் கூடிய பலன்கள் தடைபடும் .

சூரியன் அவரவர் ஜாதகத்தில் எந்த பாவத்தில் உள்ளாரோ அந்த பாவாதிபதி சூரியனின் எதிரிடையான நட்சத்திரத்தில் இருந்தால் சூரியன் மூலம் கிடைக்கக் கூடிய பலன்கள் அப்பாவாதிபதிக்கு கிடைக்காது.

சூரியன் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திரங்கள்

பிரம்மம் : இதன் பலன்கள் பேதலித்த அதிர்ச்சி தரக்கூடியது ஆச்சரியப்படக்கூடிய பயப்படக்கூடிய சூழ் நிலைகளை தரும்

பூகம்பம் : இதன் பலன்கள் எதிர்பாராத திருப்பங்களையும் பலவகை இழப்பு சேதங்களையும் ” திடீர் பயத்தையும் தரும் ,

சூலம் : இதன் பலன்கள் கலவரம் , அடிதடி சண்டை சச்சரவுகள் ஆயுதபயம் குடும்பத்தில் ஒருவருக்கொரு வர் அடித்துக் கொள்வது.

சூன்யம் : இதன் பலன்கள் தொழில் பாதிப்பு சூன்ய தன்மை , பகைவர்கள் மறைமுக எதிரிகளால் ஏற்படும் துர் காரிய மாந்திரீக செயல்கள் பீதி மனைவிக்கு.

பூசல் : இதன் பலன்கள் குடும்ப சண்டை அக்கம் பக்கத்தாரின் வாக்குவாதம் இனபந்து பகைமன பிணக்கு வேதனைதரும் செயல்கள் ,

பொய் : இதன் பலன்கள் வாக்குவாதம் ஒருவருக் கொருவர் பழிசுமத்திக் கொள்ளுதல் பொய் புரட்டு வீண்பழி அபவாதம் ,

கேடு : இதன் பலன்கள் விபத்து நோய் தொல்லை அடுத்தவரால் வரும் இடையூறு கேடு விளைவிக்கும் செயல்களை செய்வது ” அலர்ஜி ” ஏற்படும் பாதிப்பு ,

அனல் : இதன் பலன்கள் நெருப்பு பயம் விஷவாயு களால் ஆபத்து காய்ச்சல் விஷசுரங்களால் வரும் பாதிப்பு . கோப ஆவேசத்தால் வரும் விளைவு ,

தண்டம் : இதன் பலன்கள் விண் செலவுகள் அவசியமற்ற செயல்கள் அபராதங்களை செலுத்துதல் . ஆடம் பர செலவீனங்கள் , முயற்சிகள் வெற்றி பெறாமை பொருள்கள் கெட்டுவிடுதல் .

படை : இதன் பலன்கள் கோஷ்டி தகராறு வம்பு சண்டை வலிய வருதல் இனபந்து வரவால் தொல்லை நண்பர்களின் வரவால் ஆபத்து . எதிர்பாராத வழக்கு பகை வருவது .

தோஷம் : இதன் பலன்கள் எதிரியால் விபத்து ஆபத்துக்கள் உயிர் பலம் மனகலக்கம் புத்தி பேத லித்தல் முன்னோர்கள் செய்த குற்றம் நம்மை வதைப்பது.

உதைப்பு : இதன் பலன்கள் எதிர் மறையான பலன்கள் ஒன்றுக்கொன்று முரண்பாடாக நடத்தல் செயல்படுதல் பலமான முயற்சிகள் எடுபடாதநிலை நம்பிக்கை மோசம் நினைத்ததற்கு எதிர்ப்பாக நடப்பது.

சூரியன் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திரங்களின் அட்டவணையை பெற இங்கே சொடுக்கவும்

மேலே உள்ள அட்டவணையில் சூரியன் நின்ற நட்சத்திரத்தையும் அதன் எதிரிடை நட்சத்திரத்தையும் அசுவனி முதல் ரேவதி வரை தந்துள்ளது.

உதாரணமாக மகம் நட்சத்திரத்தில் சூரியன் இருப்பின் அதன் நேர் வரிசையில் உள்ள சித்திரை-விசாகம்-அனுசம்-மூலம் – அவிட்டம் – சதையம் – ரேவதி- கிருத்திகை – ரோகிணி-மிருகசீரம் -ஆயில்யம் – உத்திராடம் போன்ற நட்சத்திரங்கள் எதிரிடையாக வரும் இந்த நட்சத் திரங்கள் ஒன்றில் லக்கினம் – லக்கினாதிபதி – சந்திரன் சந்திரன் நின்ற ராசியாதிபதி சூரியன் நின்ற பாவாதிபதி இருந்தால் சூரியன் மூலம் கிடைக்கும் பலன்கள் கிடைக்காது.

அத்தோடு எதிரிடை நட்சத்திரமானது எந்த தலைப்பின் கீழ்வருகிறதோ அப்பலனே பெறும் . சூரியன் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடைப் பலன்கள் சூரியனின் தசா புத்தி அந்தர காலங்களில் , கிருத்திகை உத்திரம் – உத்திராடம் நட்சத்திரம் வரும்நாளில் , ஞாயிற்றுக் கிழமைகளில் சூரிய ஓரைகளில் நடப்பதை காணலாம்.

Leave a Comment

error: Content is protected !!