Homeதோஷங்களும்-பரிகாரமும்செவ்வாய் தோஷம் கண்டுபிடிக்கும் முறை மற்றும் செவ்வாய் தோஷ அட்டவணை

செவ்வாய் தோஷம் கண்டுபிடிக்கும் முறை மற்றும் செவ்வாய் தோஷ அட்டவணை

செவ்வாய் தோஷம்

செவ்வாய் தோஷம், ஏழரைச் சனி, அஸ்டமச்சனி, சனித் திசை என்ற வார்த்தைகளைக் கேட்டால் பயப்படாதவர்களே கிடையாது. சனியின் வகைகளை முன்னர் பார்த்தோம். தற்போது செவ்வாய் தோஷம் என்றால் என்னவென்று பார்ப்போம்.

ஒருவர் ஜாதகத்தில் லக்னம் என்பது வாழ்வையும், இராசி என்பது தற்கால நிகழ்வு குறிப்பையும் குறிக்கும். சுக்கிரன் களத்திரகாரகன் கணவன், மனைவி நிலைப்பாடுகளைத் தெரிவிக்கும் கிரகம், இது திருமாங்கல்யத்தைப் பற்றி அதன் வலிவு, நெளிவு சுழிவு பற்றித் தெரிவிப்பது. எனவே, ஒருவர் ஜாதகத்தில் லக்னத்தில் இருந்தும், இராசி (சந்திரன் இருக்குமிடம்) யிலிருந்தும், சுக்கிரன் உள்ள கட்டத்திலிருந்தும் செவ்வாய் எங்கே உள்ளது என்று அறிந்து, பெண், ஆண் இருவருக்கும் ஒரே மாதிரி அமைப்பு இருந்தால் திருமணம் செய்ய வேண்டும்.

மற்றொரு விஷயம்: செவ்வாய் எந்தப் பிரிவு இரத்தம் என்பதையும் தெரிவிக்கவல்லது

செவ்வாய் தோஷம்

1.செவ்வாய் ஆட்சியானால் ரியல் எஸ்டேட், இராணுவம், வெங்காயம், தக்காளி, பீட்ரூட் போன்ற பொருட்களால் ஜீவனம் அமையும். இவர்கள் வியாதியற்றவராவார்.

2.செவ்வாய் நீச்சமானால் குறைந்த இரத்த அழுத்த நோய் வரும். உச்சமானால் உயர் இரத்த அழுத்த நோய் வரும். செவ்வாய் புதன் வீடுகளில் இருந்தாலோ மிதுனம், கன்னியில் இருந்தாலோ புதனுடன் நீச்சமாகி இருந்தாலோ (மீனத்தில்) கொலஸ்ட்ரால் அல்லது ஹிமோகுளோபின் குறைவு உண்டாகும்.

3.செவ்வாய் நீச்சமானால் சிவந்த காய்கறிகள். மண்-பூமி விலை குறையும். உச்சமானால் ரியல் எஸ்டேட் சிமெண்ட் விலை கூடும். குரு உச்ச நீச்சமாவதால் தான் தங்கம் பவுன் விலை ஏறி இறங்குகிறது. இதெல்லாம் அறியவே செவ்வாய் தோசம் பார்க்கப்படுகிறது.

செவ்வாய் தோஷமானது(Sevvai thosam) திருமணதடையை ஏற்படுத்தும் தோஷங்களில் ஒன்றாகும்.லக்கினத்திலிருந்து  4, 7, 8, 12, ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் அது செவ்வாய் தோஷமாக(Sevvai Dhosam) கருதப்படுகிறது.

 செவ்வாய் தோஷத்திற்கான விதிவிலக்குகள்

  1. விருச்சிகம், மகரம் ஆகிய வீடுகளில் செவ்வாய் இருந்தால் தோஷம் இல்லை.
  2.  குரு, சூரியன் ,சனி ,சந்திரனுடன் சேர்ந்திருந்தால் தோஷமில்லை
  3. சூரியன், சந்திரன், குரு, சனி ஆகியவற்றால் பார்க்கப்பட்டால் பாவமில்லை.
  4. கடகத்தில் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை.
  5. இரண்டாம் இடம் மிதுனம் அல்லது கன்னி ஆக இருந்தாலும் தோஷமில்லை
  6. எட்டாம் இடம் தனுசு ,மீனம் இருந்தால் தோஷமில்லை

செவ்வாய் தோஷம் வர காரணம்

 செவ்வாய் என்பவர் சகோதர, சகோதரி மற்றும் மனைகளை குறிக்கக்கூடிய கிரகம் ஆகும். நாம் செய்யும் வினைகள் இவர்களைப் பாதிக்கும் வகையில் இருக்கும் பட்சத்தில் நாம் எடுக்கும் அடுத்த பிறவிகளில் அவை செவ்வாய்தோஷங்களாக  மாறுகின்றன.

 அதாவது நம்முடன் பிறக்கும் சகோதர, சகோதரிகளை ஆபத்தான சமயத்தில் அவர்களுக்கு உதவி செய்யாமல் நிற்கதியாய் விடுவது  அல்லது அவர்களுக்கு கொடுக்க வேண்டிய சொத்து தொடர்பான பாகங்களை கொடுக்காமல் அவர்களை ஏமாற்றுவது  மற்றும் மனை தொடர்பான செயல்பாடுகளில் மனையை கலங்கப்படுத்தும் விதமான செயல்களில் ஈடுபடுவதால் ஏற்படும் தோஷம் ஆகும்.

 செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் பிரச்சனைகள்

திருமணத்தடை, திருப்தி இல்லாமல் வாழ்க்கை, குழந்தையின்மை ,சகோதர உறவுடன் ஒற்றுமை குறைவு, பூர்வீக சொத்துக்களான நிலம், வீடு, சம்பந்தப்பட்ட வழக்குகளில் இழுபறி, விபத்துகள் போன்ற பிரச்சனைகள் செவ்வாய் தோஷத்தால் ஏற்படுகிறது.

செவ்வாய் தோஷம்

செவ்வாய் தோஷ முக்கிய விதிவிலக்கு:

1. செவ்வாய் உச்சமானாலோ, நீச்சமானாலோ, வர்கோத்தமமானாலோ ஜாதகருக்குச் செவ்வாய் தோசம் இல்லை எனலாம். இவை லக்கினம், இராசி, சுக்கிரனுக்கு 1, 2, 4, 7, 8, 12 வீடுகளிலிருந்தும் பார்க்க வேண்டும்.

2. செவ்வாய், சுக்கிரன் பரிவர்த்தனையானாலும் ஆட்சியானாலும் லக்கினாதிபதியானாலும் தோஷ நிவர்த்தி, மேஷம், ரிஷபம் பரிவர்த்தனை அல்லது விருச்சிகம். துலாம் பரிவர்த்தனை தோஷ நிவர்த்தி

3. செவ்வாய் லக்னத்திலோ, லக்னம், இராசி, சுக்கிரனுக்கு 1, 2, 4, 7, 8, 12 இல் இருக்க, இதைச் சனி 3 ஆம் பார்வையால் பார்த்தாலோ, செவ்வாய் சனி பரஸ்பர பார்வை பார்த்தாலோ தோஷம் இல்லை.

4. குரு பார்த்தால் செவ்வாய் தோஷம் நிவர்த்தி ஆகாது. குரு எதைப் பார்க்கிறதோ அது மேலும் மிளிர ஆரம்பிக்கும். அதுபோல் குரு பார்க்க செவ்வாய் தோஷம் அதிகரிக்குமே தவிர குறையாது. எனவே, குரு பார்க்க செவ்வாய் தோஷம் நிவர்த்தி என்ற தவறான கருத்தை நீக்கவும்.

5. என்னதான் செவ்வாய் ஆட்சி, நீட்சி, உச்சம், வர்கோத்தமம் பெற்று தோஷம் உற்று இருந்தால் அது தங்கத் தட்டில் உள்ள விஷம் போன்றதே. அதற்குரிய பலனைக் காட்டியே தீரும். ஆண் பெண் இருபாலருக்கும் ஒரே மாதிரியான அமைப்பு இருந்தால் தான் பொருத்தமாகும்.

6.குருமங்கள யோகம் இருந்தாலும், குரு செவ்வாய் பரிவர்த்தனை ஆனாலும், குரு செவ்வாய் சூரியன் சேர்ந்தாலும், உச்சம், நீச்சமானாலும் தோஷம் உண்டு.

7. மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கும் செவ்வாய்க்கிழமையில் பிறந்தவர்களுக்கும் செவ்வாய் தோஷம் விதிவிலக்கு.

செவ்வாய் தோஷ அட்டவணை

செவ்வாய் தோஷம்

 செவ்வாய் தோஷம் உள்ளவர்களின் திருமணம்

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் ஆனோ ,பெண்ணோ இருவரும் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் மட்டுமே திருமணம் செய்ய வேண்டும்.

இவர்கள் செவ்வாய் தோஷம் இல்லாதவர்களை திருமணம் செய்து கொண்டால் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் தம்பதியர்கள் சிறு சிறு விஷயங்களுக்கும் வாக்குவாதம் தோன்றி மறையும்.

தோஷம் இல்லாதவர்களுக்கு தோஷம் உள்ளவரை திருமணம் செய்து வைத்தால் சிறு சிறு விஷயங்களுக்கும் விட்டுக்கொடுக்காமல் மனக் கசப்புகளை ஏற்படுத்திக் கொண்டே இருப்பார். இந்த மன கசப்புகள் சில நேரங்களில் தம்பதிகளை விவாகரத்துக்கு அழைத்துச்செல்லும்.

செவ்வாய் தோஷத்தின் விளைவுகள்

1.லக்னத்தில் செவ்வாய் தனித்திருந்தாலோ, செவ்வாய், சூரியன் இணைந்து ஒரு பெண் ஜாதகத்திலோ ஆண் ஜாதகத்திலோ லக்கினத்தில் இருந்தால் திருமணமாகி 3 ஆண்டுகளுக்குள் மனைவி / கணவளை இழந்து விதவை ஆவார்.

2. மேற்கண்ட அதே அமைப்பில் லக்கினம், இராசி, சுக்கிரனுக்கு 2 இல் செவ்வாய் இருந்தால் சூரியனோடு சேர்ந்திருந்தால் திருமணமாகி ஓரிரு ஆண்டில் விவாகரத்து ஆகாமல் கணவர், மனைவியை ஒருவருக்கு ஒருவர் பிரிந்து இருப்பர்.

3. மேற்கண்ட அமைப்பு 4 இல் இருந்தால் தாயார் சொல் கேட்டு பிரிவு உண்டாகும், அல்லது வாகன விபத்தில் உயிர் பிரியும் (செவ்வாய் அல்லது சூரியன் நீச்சமானால்)

4. 7-ல் மேற்கண்ட அமைப்பு (லக்னம், இராசி, சுக்கிரனுக்கு இருந்தால் விவாக ரத்தாகும். குரு + செவ்வாய் கடகத்தில் உச்சம், நீச்சமானாலோ, பரிவர்த்தனையானாலோ இரட்டைக் குழந்தைகள் பிறந்து தொல்லை தரும்

5.8-ல் மேற்கண்ட அமைப்பு இருந்தால் இளம் விதவை, மனைவியை இழந்தவராவார்.

6. 12 -ல் இவ்வமைப்பு உள்ளவர்கள் மனைவி, கணவர் பிரிந்து தொழில் ரீதியாய் அயல்தேசத்தில் இருப்பர். 4 அல்லது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சந்திப்பர்.

7.லக்னத்துக்கு, இராசி,சுக்கிரனுக்கு 10-ல் செவ்வாய் தனித்தோ இருந்தால் அறுவை சிகிச்சையில் (சிசேரியனில் ஆண் குழந்தை பிறக்கும்.10-ல் செவ்வாய் உள்ளவருக்கு ஒவ்வொரு தெசையிலும் செவ்வாய் புத்தியில் பேரிடர் உண்டாகும்.

ஆண் பெண் இருவருக்கும் ஒரே மாதிரியான அமைப்பு இருந்தாலே திருமணம் செய்ய வேண்டும்.

8கேது திசையில் பிறந்தவர்களை எமகண்டம் ஒன்றும் செய்யாது என்பதால் அசுபதி, மகம், மூலம் இவர்களுக்குக் கேதுவின் சம பலமுள்ள செவ்வாய் இரண்டாவது வீடு என்றால் மற்றவருக்கு 4, 8- ல் செவ்வாய் அல்லது கேது இருந்தால் திருமணம் செய்யலாம்.

இதையும் கொஞ்சம் படிங்க : செவ்வாய் திசை பலன்கள் மற்றும் பரிகாரம்

 செவ்வாய் தோஷம்  பரிகாரங்கள்

  • செவ்வாய்க்கிழமைகளில் முருகன்  மற்றும் முருகனின் அம்சம் கொண்ட அங்ககாரனையும் வழிபட்டு வந்தால் செவ்வாயின் தாக்கம் குறையும்.
  • விநாயகருக்கு செவ்வாயன்று வரும் சதுர்த்தி நாளில் அபிஷேக ஆராதனை செய்து விரதம் இருந்தால் நல்லது நடைபெறும். இவ்வாறு 41 செவ்வாய்க் கிழமைகள் விரதம் இருக்க வேண்டும்.
  • செவ்வாய்கிழமைகளில் வரும் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் துவரை தானம் செய்தால் செவ்வாயின் தாக்கம் குறையும்.
  • செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய் காயத்ரி மந்திரம் தியானமந்திரம், சூரிய கவசம் போன்றவற்றை சொல்லி கடவுளை மனமுருகி வழிபட்டு வந்தால் தோஷம் விலகும்.
  • செவ்வாய் தோஷகாரர்கள் ரத்தக் கல் பதித்த தங்க மோதிரத்தை மோதிர விரலில் வலது கரத்தில் அணியலாம்.
  • முருகனுக்கு சிவப்பு மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டால் தோஷம் விரைவில் நீங்கிவிடும்.
  • நவகிரகத்தில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு 27 செவ்வாய்க்கிழமைகள் நெய்விளக்கு ஏற்றி வந்தால் செவ்வாய் தோஷம் விலகும்.
  • நவகிரக செவ்வாய்க்கு பிறந்ததேதி அல்லது கிழமையில் அர்ச்சனை செய்வதால் நன்மை உண்டாகும்.

இதுபோன்ற பரிகாரங்களை செய்வதன் மூலம் செவ்வாய் தோஷம் விலகி வாழ்க்கை செழிப்பாகும்.

 செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செல்ல வேண்டிய கோவில்கள்.

  • செவ்வாய் தோஷமுள்ளவர்கள் சீர்காழி வைத்தீஸ்வரன் கோவில் சிறப்பு வாய்ந்த பரிகார ஸ்தலமாக அமைகிறது.
  • சுப்பிரமணியசுவாமி திருக்கோவில், சென்னிமலை ,ஈரோடு
  • சங்கமேஸ்வரர் திருக்கோயில், பவானி ,ஈரோடு.
  • கந்தசாமி திருக்கோவில் ,திருப்போரூர் ,காஞ்சிபுரம்
  • மலையாளதேவி துர்காபகவதிஅம்மன், திருக்கோவில், நவகரை, கோயம்புத்தூர்
  • அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், மேலக்கடம்பூர், கடலூர்
  • அருணஜடேசுவரர் திருக்கோயில், திருப்பனந்தாள், தஞ்சாவூர்
  • கைலாசநாதர் திருக்கோவில் கோடகநல்லூர், திருநெல்வேலி
  • வீரபத்திரர் திருக்கோவில் அனுமந்தபுரம், காஞ்சிபுரம்
  • கல்யாண கந்தசாமி திருக்கோவில் மடிப்பாக்கம் ,சென்னை
  • அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிவாக்கம் ,சென்னை
  • தேனுபுரீஸ்வரர் திருக்கோயில் திருப்பட்டீஸ்வரம் , தஞ்சாவூர்
  • அகோர வீரபத்திரர் திருக்கோயில் வீரவாடி, திருவாரூர்
  • பிரணவநாத சுவாமி திருக்கோயில் சோழவந்தான் ,மதுரை
  • விருத்தபுரீஸ்வரர் திருக்கோயில் திருப்புனவாசல், புதுக்கோட்டை
  • சுப்பிரமணியர் காங்கேயன் திருக்கோவில் காங்கேயநல்லூர், வேலூர் போன்ற கோவிலுக்கு சென்று வழிபட்டு நலம் பெறலாம்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!