ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2024-விருச்சிகம்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

அனைவருக்கும் ASTROSIVA வின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!!

இந்த 2024 ஆம் வருடம் பிறக்கும் நேரமான 31.12.2023 நள்ளிரவு 12 மணிக்கு (மார்கழி மாதம் 15-ம் தேதி )மேஷத்தில் குரு, சிம்மத்தில் சந்திரன், கன்னியில் கேது, விருச்சகத்தில் புதன், சுக்கிரன்; தனுசில் சூரியன், செவ்வாய் ;கும்பத்தில் சனி, மீனத்தில் ராகு என்கின்ற கிரக அமைப்புகளில் புத்தாண்டு பிறக்கிறது.

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2024

எதையும் தாங்கும் இதயம் கொண்ட விருச்சக ராசி அன்பர்களே!!! உங்களுக்கு 10வது ராசியில் இந்த புத்தாண்டு  பிறக்கிறது. வீட்டில் நிம்மதி வெளிச்சம் பரவத் தொடங்கும். வாரிசுகள் வாழ்க்கையில் சுப காரியங்கள் அடுத்தடுத்து வரத் தொடங்கும். வரவை திட்டமிட்டு செலவிட்டால் பழைய கடன்கள் பைசல் ஆகும். தேவையில்லாத கேளிக்கைகளை தவிர்த்தால், சேமிப்பு நிலைக்கும். உறவுகள் வரவு இல்லத்தை பிரகாசிக்க செய்யும். விலை உயர்ந்த பொருட்களை இரவல் தரவோ, பெறவோ வேண்டாம். அசட்டு தைரியம் ஆபத்தானது, உணர்ந்து செயல்படுங்கள். கல்யாணம், குழந்தை பேறு வரங்கள் குலதெய்வம் அருளால் கிட்டும்.

முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றங்கள் வரக்கூடிய ஆண்டாக இந்த ஆண்டு இருக்கும். அலுவலகத்தில் உங்கள் உழைப்புக்கு பரிசாக உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிடைக்கும். திறமைக்குரிய மேன்மைகள் தேடி வரத் தொடங்கும். சின்ன சின்ன விஷயமாக இருந்தாலும் சின்சியராக செய்யுங்கள். உங்கள் பொறுப்புகளை நீங்களே செய்வதுதான் நல்லது. பிறரை நம்பி ஒப்படைக்க வேண்டாம். பணியிடத்தில் பணிவு தான் நல்லது. உடன் இருக்கும் யாரையும் உதாசீனப்படுத்த வேண்டாம்.

பெண்களுக்கு சீரான நன்மைகள் ஏற்படக்கூடிய ஆண்டாக இந்த ஆண்டு இருக்கும். வாழ்க்கைத் துணை வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுங்கள். அனாவசிய செலவையும் வேண்டாத கடனையும் தவிருங்கள். வரவை முறையாக செலவிட்டால் பழைய கடன்கள் படிப்படியாக பைசல் ஆகும். மாதாந்திர உபாதைகளில் கவனமாக இருங்கள்.

குருபகவான் 30.04.2024 வரை உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் மறைந்திருப்பதால் சில நேரங்களில் வீண் டென்ஷன், மன உளைச்சல், வேலை சுமை, வீண் பழி, செரிமான கோளாறு வந்து நீங்கும். மறைமுக எதிரிகளை இனம் கண்டறிவீர்கள். பூர்வீக சொத்து சம்பந்தமான வழக்குகள் வேண்டாமே! எதையும் பேசித் தீர்ப்பது நன்மை தரும்.

குருபகவான் 01.05.2024முதல் 7ம் வீட்டில் அமர்வதால் திடீர் திருப்பங்கள் உண்டாகும்.சோர்ந்து கிடந்த நீங்கள் உற்சாகமாவீர்கள். அரைகுறையாக நின்ற வேலைகள் முழுமை அடையும். வீட்டில் தாமதமான சுப நிகழ்ச்சிகள் இனி கோலாகலமாக நடக்கும்.

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2024

இந்த வருடம் முழுவதும் ராகு 5-ம் வீட்டிலும், கேது 11-ம் வீட்டிலும் தொடர்கிறார்கள். ராகுவால் கனவுத் தொல்லை, பிள்ளைகள் விஷயத்தில் அலைச்சல் வந்து செல்லும். உடல் உஷ்ணம் அதிகரிக்கும். தாய்மாமன் வகையில் மனத்தாங்கல் வரும்.

கேது பகவானின் சஞ்சார நிலையால் உங்களுக்கு திடீர் யோகங்களும், பணவரவும் உண்டாகும். மூத்த சகோதரர்கள் உதவுவார்கள். உங்களை சுற்றி இருப்பவர்களின் சுய ரூபத்தை உணர்ந்து தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள்.

இந்த ஆண்டு முழுவதும் சனிபகவான் உங்கள் சுக ஸ்தானமான 4-ம் வீட்டிலேயே தொடர்கிறார், ஆகவே இரவு நேர பயணங்களை தவிர்ப்பது நல்லது. வாகனம் அடிக்கடி பழுதாகும். தூக்கம் கெடும். பனிச்சுமை அதிகரிக்கும். பதற்றத்தில் அவசர முடிவுகளை எடுத்துவிட்டு பின்னர் தவிக்கும் நிலை ஏற்படலாம். ஆகவே பொறுமையுடன் சிந்தித்து செயல்படவும்.

பலன் தரும் பரிகாரம்

ஒருமுறை வைத்தீஸ்வரன் கோவில் சென்று சுவாமியையும் அம்பாளையும் வழிபட்டு வாருங்கள்.மாற்றம் நிச்சயம்.

Leave a Comment

error: Content is protected !!