செவ்வாய் ஹோரை-புதன் ஹோரை-குரு ஹோரை-பலன்கள்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

ஹோரை பலன்கள்

செவ்வாய் ஹோரை ( ரோகம் தரும் ஹோரை ) :

கடன் வாங்குதல் கூடாது.கடனைத் திருப்பிக் கொடுக்கலாம்.எந்தவொரு காரியமும் செய்யக்கூடாது.தடை , தாமதம் , விபத்து , ரணகாயங்கள் உண்டாக்கும் ஹோரையாகும்.இதுவொரு காரசாரமான சண்டை , கலகமூட்டும் கிரக ஹோரையாகும். அனைவரும் அனைத்திலும் உஷார் ! செவ்வாய் போர் கிரகம்.
புதிய முயற்சிகளைக் கட்டாயம் தவிர்க்கவும்.

ஹோரை அட்டவணை

செவ்வாய் ஹோரை-புதன் ஹோரை-குரு ஹோரை-பலன்கள்

புதன் ஹோரை ( லாபம் தரும் ஹோரை )

எழுத்து , பேச்சு , வித்தை ஆரம்பம் , படிப்பு , கல்வி தொடர்பான அனைத்து காரியங்களும் இந்த ஹோரையில் செய்யலாம்.கதை , கட்டுரை , காவியம் , கவி இயற்றுதல் , நூலாராய்ச்சி போன்றயாவும் புதன் ஹோரையில் வெற்றிகரமாக செய்யலாம்.வியாபாரம் தொழில் , உத்தியோகம் தொடர்பான காரியங்களில் ஈடுபடலாம்.திருமணம் சம்பந்தமான காரியத்தில் துணிந்து செயல்படலாம்.
எல்லா சுயகாரியங்களையும் புதன் ஹோரையில் புஷ்டியாக வெற்றியாகச் செய்யலாம்.பழம் நழுவி பாலில் விழுந்தது போல் வெற்றி தரும் ஹோரை இது.

குரு ஹோரை ( தன ஹோரை ) :

இது 100 சதவிகித சுப ஹோரையாகும்.குரு ஹோரையில் எல்லாவகையான சுப காரியங்களையும் செய்யலாம்.கல்வி , வித்யாரம்பம் , ஆலயம் வழிபடுதல் , திருமணம் செய்தல் , ஆடையா பரணம் வாங்குதல் , அணிய சிறந்த ஹோரை.
எல்லாவிதங்களிலும் சுபத்தையும் லாபத் தையும் அளிப்பது குரு ஹோரையாகும் !

Leave a Comment

error: Content is protected !!