ரிஷபம் –வேலை மாற்றம்
(கிருத்திகை 2,3,4ம் பாதம்,ரோகிணி ,மிருகசீரிடம் 1,2 )
சுக்கிர பகவானின் அருள் பெற்ற ரிஷப ராசி அன்பர்களே !!! இதுவரை உங்கள் ராசிக்கு 9 ஆம் வீட்டில் அமர்ந்து உங்கள் கையில் காசு தாங்காமல் கடன் பிரச்சனைகளாலும், மன கவலைகளாலும் கலங்கடித்த சனி பகவான் இப்போது உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டுக்கு வருகிறார். இனி எல்லாம் நல்லதே நடக்கும். தொட்டது துலங்கும். பிதுர்வழி சொத்து பிரச்சனை முடிவுக்கு வரும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். குழந்தை பாக்கியம் உண்டாகும். கோயில் கும்பாபிஷேகத்தில் முதல் மரியாதை கிடைக்கும். புது வண்டி வாகன யோகம் உண்டாகும். புது செல்போன் மற்றும் வீட்டுக்கு தேவையானவற்றையெல்லாம் வாங்குவீர்கள்.
வீடு கட்ட எதிர்பார்த்த லோன் அனுமதி கிடைக்கும். சிலருக்கு வேலை மாற்றம் ஏற்படும். திடீர் யோகம் உண்டாகும். திருமணம், கிரகப்பிரவேசம் என வீடு களைகட்டும். அயல்நாடு சென்று வருவீர்கள். திடீர் செல்வாக்கும், பணப்புழக்கமும் தங்க நகையும் வாங்குவீர்கள். அரசாங்கத்தால் ஆதாயம் அடைவீர்கள்.
இதுவரை உற்சாகம் இல்லாமல் சோர்வாகவும், சலிப்பாகவும் இருந்த இல்லத்தரசிகள் இனி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். அலுவலகம் செல்லும் பெண்களுக்கு நல்ல ஆதாயம் ஏற்படும். உங்கள் நிர்வாக திறமையால் திடீர் பதவி உயர்வு கிடைக்கும். சம்பளமும் அதிகரிக்கும். காய்கறி கடை, தோல் ஏற்றுமதி இறக்குமதி, புத்தகக் கடை, ஆன்மீக அருட் சாதனங்கள், இன்டீரியர் டெகரேட்டர்ஸ், கான்ட்ராக்டர்ஸ், ஆடை தங்கை நகைக்கடைகள் மற்றும் பேன்சி ஸ்டோர் வைத்திருப்பவர்கள் நல்ல லாபம் அடைவீர்கள்.
உத்தியோகஸ்தர்களை பொறுத்தவரை ராசிக்கு பத்தாம் வீட்டில் சனி வந்து அமர்வதால் வேலையில் பிரச்சனைகள் ஏற்படலாம். தேவையில்லாமல் EMIல் கடன் வாங்க வேண்டாம். அலுவலகத்தில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரலாம். அதனால் அனாவசிய விடுப்புகளை தவிர்க்கவும். வேண்டுமெனவே முக்கிய பொறுப்புகளில் அமர்த்தப்படுவீர்கள். அதனால் பணிச்சுமை அதிகமாகும். ஒரு சில பணிகளை போராடி முடிக்க வேண்டி வரலாம். சூழ்நிலைகளை கவனமாக கையாளுங்கள். சிலருக்கு திடீர் இடமாற்றம் உண்டு. சனியால் வேலை சம்பந்தமான பிரச்சனைகள் தீர சனிக்கிழமை தோறும் சுதர்சன பெருமாளை துளசி மாலை சாற்றி ஐந்து நல்லெண்ண தீபம் ஏற்றி வழிபடவும்.
சனி பகவான் பார்வை பலன்
சனிபகவான் உங்கள் ராசிக்கு 4, 7 ,12 ஆம் இடங்களை பார்வை செய்வதால் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சனிபகவான் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டை பார்ப்பதால் தாயாரின் உடல்நலத்தில் எச்சரிக்கை தேவை. வீடு வாகனம் சம்பந்தமான சுப விரயங்கள் ஏற்படலாம். தாய் வழி சொத்து பிரச்சனை வரலாம். மனதில் தேவையில்லாத கவலைகள் ஏற்பட்டு விலகும்.
சனிபகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டை பார்ப்பதால் திருமணத்தில் தாமதம் ஏற்படலாம். கணவன் மனைவிக்கு சிறு சிறு வாக்குவாதங்கள் வந்து போகும். கூட்டுத்தொழில் செய்வோர் கடன் வாங்கி தொழிலை விருத்தி செய்ய வேண்டாம்.
இதையும் கொஞ்சம் படிங்க : சனிதோஷம் நீக்கும்-வானமுட்டிப் பெருமாள்
சனிபகவான் உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டை பார்ப்பதால் தூக்கமின்மை சுப விரயங்கள் ஏற்படலாம். வேலை நிமித்தமாக கணவன் மனைவி பிரிந்து வாழ நேரலாம். ஆன்மீக சுற்றுலா சென்று வருவீர்கள். சிலர் வெளிநாட்டு வேலையை விட்டு தாய்நாடு திரும்புவீர்கள்.
பலன் தரும் பரிகாரம்
சனிக்கிழமை சனி ஓரையில் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் தனி சன்னதியில் இருக்கும் சனி பகவானுக்கு வஸ்திரம் சாற்றி வழிபடுங்கள். கோசாலையில் இருக்கும் காராம் பசுவிற்கு அகத்திக்கீரை வாங்கி கொடுங்கள்.