ஜாதகமும் -உறவு முறைகளும்
தந்தைவழி உறவுகளை அறிதல்:
- ஜனன ஜாதகத்தில் லக்னத்திற்கு ஏழாவது பாவம் அந்த ஜாதகரின் தாத்தாவின் சகோதரரை குறிக்கும் (தாத்தாவின் இளைய சகோதரரை குறிக்கும்) 5வது பாவத்திற்கு 3வது பாவமாகும்.
- ஜனன ஜாதகத்தில் முதல் பாவம் இந்த ஜாதகரின் தந்தையின் தாத்தாவை குறிக்கும்.( தந்தை 9வது ராசி அதற்கு 5வது ராசி முதல் பாவம்)
- ஜனன ஜாதகத்தில் லக்னத்திற்கு பதினோராவது பாவம் அந்த ஜாதகரின் சித்தப்பாவை குறிக்கும். (9வது ராசிக்கு 3வது ராசியாகும்)
- ஜனன ஜாதகத்தில் லக்னத்திற்கு ஐந்தாவது பாவம் அந்த ஜாதகரின் சித்தப்பாவின் மனைவியைக் குறிக்கும்( 11வது ராசிக்கு 7வது ராசியாகும்)
- ஜனன ஜாதகத்தில் மூன்றாவது பாவம் அந்த ஜாதகரின் சித்தப்பாவின் குழந்தைகளை குறிக்கும்(11வது ராசிக்கு 3வது ராசியாகும்)
இரண்டாம் வீட்டில் நிற்கும் கிரகங்களின் பொது பலன்கள்
- ஜனன ஜாதகத்தில் மூன்றாவது பாவம் அவரது மைத்துனரின் மனைவியைக் குறிக்கும் (9வது ராசிக்கு 7வது ராசியாகும்)
- ஜனன ஜாதகத்தில் ஒன்பதாவது பாவம் அவரது மனைவியின் இளைய சகோதரியை குறிக்கும். அதாவது மைத்துனியை குறிக்கும். (7வது ராசிக்கு 3வது ராசியாகும்)
- ஜனன ஜாதகத்தில் மூன்றாவது பாவம் அவரது மைத்துனியின் கணவனை குறிக்கும். (9வது ராசிக்கு 7வது ராசியாகும்)
- ஜனன ஜாதகத்தில் ஒன்பதாவது பாவம் அவரது இரண்டாவது மனைவியை குறிக்கும். (7வது ராசிக்கு 3வது ராசியாகும்)
- ஜனன ஜாதகத்தில் பதினோராவது பாவம் அவரது மூன்றாவது மனைவியை குறிக்கும். (9வது ராசிக்கு 3-வது ராசியாகும்)
மகன் மற்றும் மகள் வழி உறவுகள்:
- ஜனன ஜாதகத்தில் ஐந்தாவது பாவம் அவரது மகன் அல்லது மகளை குறிக்கும்
- ஜனன ஜாதகத்தில் பதினொன்றாவது பாவம் அவரது மருமகளை குறிக்கும். அதாவது மகனின் மனைவியை குறிக்கும். (5வது ராசிக்கு 7வது ராசியாகும்)
- ஜனன ஜாதகத்தில் பதினோராவது பாவம் அவரது மருமகனை குறிக்கும். அதாவது மகளின் கணவனை குறிக்கும். (5வது ராசிக்கு 7வது ராசியாகும்)
- ஜனன ஜாதகத்தில் ஒன்பதாவது பாவம் அவரது பேரன் மற்றும் பேத்தியை குறிக்கும். (5வது ராசிக்கு 5வது ராசியாகும்)
மகன் வழி மற்றும் மகள் வழி வாரிசுகள் இரண்டையும் குறிக்கும். - ஜனன ஜாதகத்தில் ஏழாவது பாவம் அவரது சம்பந்தியை குறிக்கும் அதாவது மகனின் மாமனார் மற்றும் மகளின் மாமனார் ஆகும் (11வது ராசிக்கு 9-ஆவது ராசியாகும்.)
- ஜனன ஜாதகத்தில் இரண்டாவது பாவம் அவரது சம்பந்தி அம்மாளை குறிக்கும். அதாவது மகன் மற்றும் மகளின் மாமியாரை குறிக்கும் (11வது ராசிக்கு 4வது ராசியாகும்)பெண்ணின் கணவனின் வழி உறவுகள்:
- பெண்ணின் ஜனன ஜாதகத்தில் ஐந்தாவது பாவம் கணவனின் மூத்த சகோதரரை குறிக்கும்.
- பெண்ணின் ஜனன ஜாதகத்தில் பதினோராவது பாவம் அந்தப் பெண்ணின் கணவனின் மூத்த சகோதரன் மனைவியை குறிக்கும்.
- பெண்ணின் ஜனன ஜாதகத்தில் ஒன்பதாவது பாவம் அந்தப் பெண்ணின் கணவனின் இளைய சகோதரரை குறிக்கும்.
திருமண வரம் அருளும் திருமணஞ்சேரி திருத்தலம்
- பெண்ணின் ஜனன ஜாதகத்தில் மூன்றாவது பாவம் அந்தப் பெண்ணின் கணவனின் இளைய சகோதரனின் மனைவியை குறிக்கும்
- பெண்ணின் ஜனன ஜாதகத்தில் ஒன்பதாவது பாவம் அவரது இளைய சகோதரனின் மனைவியை குறிக்கும்
- பெண்ணின் ஜனன ஜாதகத்தில் ஒன்பதாவது பாவம் அவரது இளைய சகோதரியின் கணவனை குறிக்கும்
- பெண்ணின் ஜனன ஜாதகத்தில் ஏழாவது பாவம் அவரது இளைய சகோதரரின் குழந்தைகளை குறிக்கும்
- கணவன் அல்லது மனைவி வழி உறவுகள்
- ஜனன ஜாதகத்தில் ஏழாவது பாவம் அவரது மனைவி அல்லது கணவனை குறிக்கும்
- ஜனன ஜாதகத்தில் பத்தாவது பாவம் அவரது மாமியாரை குறிக்கும்
- ஜனன ஜாதகத்தில் மூன்றாவது பாவம் அவரது மாமனாரை குறிக்கும்
- ஜனன ஜாதகத்தில் ஐந்தாவது பாவம் அவரது மாமனாரின் இளைய சகோதரரை குறிக்கும் அதாவது சின்ன மாமனார்
- ஜனன ஜாதகத்தில் ஒன்பதாவது பாவம் அவரது மாமனாரின் சகோதரனைக் குறிக்கும்
- ஜனன ஜாதகத்தில் ஒன்பதாவது பாவம் அவரது மனைவியின் இளைய சகோதரரை குறிக்கும் அதாவது மைத்துனரை குறிக்கும்
தாய் வழி உறவுகள்:
- ஜனன ஜாதகத்தில் இரண்டாவது பாவம் அவரது தாய்வழி தந்தையின் இளைய சகோதரரை குறிக்கும்
- ஜெனன ஜாதகத்தில் ஆறாவது பாவம் அவரது தாய்மாமனை குறிக்கும்
- ஜனன ஜாதகத்தில் 12வது பாவம் அவரது தாய்மாமனின் மனைவியை குறிக்கும்
- ஜெனன ஜாதகத்தில் பத்தாவது பாவம் அவரது தாய்மாமனின் குழந்தைகளை குறிக்கும்
- ஜனன ஜாதகத்தில் ஆறாவது பாவம் அவரது தாயின் சகோதரியை குறிக்கும் அதாவது சித்தி அல்லது சின்னம்மாவை குறிக்கும்
12ராசிகளுக்கும்27 நட்சத்திரங்களுக்கும் உரிய பரிகார ஸ்தலங்கள்
- ஜனன ஜாதகத்தில் 12வது பாவம் அவரது தாயின் தங்கையின் கணவனை குறிக்கும் அதாவது சின்னம்மாவின் கணவர் சித்தப்பாவை குறிக்கும்
- ஜனன ஜாதகத்தில் ஆறாவது பாவம் அவரது தந்தையின் மற்றொரு மனைவியை குறிக்கும் அதாவது மாற்றான் தாயைக் குறிக்கும்.
- ஜனன ஜாதகத்தில் பத்தாவது பாதம் அவரது தந்தையின் மற்றொரு மனைவியின் குழந்தையை குறிக்கும் அதாவது மாற்றான் தாயின் குழந்தைகளை குறிக்கும்சகோதர வழி உறவுகள்:
- ஜனன ஜாதகத்தில் பதினொன்றாவது பாவம் அவரது மூத்த சகோதரர் அல்லது மூத்த சகோதரியை குறிக்கும்
- ஜனன ஜாதகத்தில் ஐந்தாவது பாவம் அவரது மூத்த சகோதரரின் மனைவியை அதாவது அண்ணியை குறிக்கும்
- ஜனன ஜாதகத்தில் மூன்றாவது பாவம் அவரது மூத்த சகோதரரின் குழந்தைகளை குறிக்கும் (ஆண் மற்றும் பெண் இருவரையும்)
- ஜனன ஜாதகத்தில் மூன்றாவது பாவம் அவரது இளைய சகோதரரை குறிக்கும்.