சுக்கிர தசா பலன்கள்
சுக்கிர தசா (Sukra Dasa) மொத்தம் 20 வருடங்கள் நடைபெறும். சுக்கிரதிசை வந்தாலே செல்வங்கள் கொழிக்கும் என்பது மக்களின் பொதுவான கருத்தாக உள்ளது. ஆனால் அது தவறாகும். சுக்கிரன் ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில் பலம் பெற்று அமைந்திருந்தால் மட்டும சுக்கிர தசாவில் நற்பலன்களை பெற முடியும்.
சுக்கிரன் ஆட்சி, உச்சம் பெற்றிருந்தாலும் நட்பு கிரகங்களான புதன், சனி போன்ற கிரகங்களின் வீட்டில் அமர்ந்தாலும், சேர்க்கை பெற்றிருந்தாலும் குடும்பத்தில் சுபிட்சம், திருமண சுப காரியங்கள் கைகூடும் அமைப்பு, தாம்பத்திய வாழ்வில் மகிழ்ச்சி, புத்திர பாக்கியம் உண்டாக கூடிய யோகம், செல்வம் செல்வாக்கு சேர்க்கை, வண்டி வாகனம் பூமி மனை வாங்கும் யோகம், ஆபரணங்கள் மற்றும் நவீன பொருள்கள் சேரும் வாய்ப்பு போன்ற யாவும் அமையும்.
பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது, கடன்கள் யாவும் நிவர்த்தியாகும். பொதுவாக சுக்கிரன் கிரக சேர்க்கை இன்றித் தனித்து அமைவதே சிறப்பு.
சுக்கிரன் தனித்து அமையாமல் பாவ கிரக சேர்க்கைகளுடன் இருந்தால் களத்திர தோஷம் உண்டாகி மன வாழ்வில் பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும். சூரியனுக்கு மிக அருகில் இருந்து அஸ்தங்கம் பெற்றிருந்தாலும் மணவாழ்க்கை ரீதியான பிரச்சனைகளை உண்டாக்கும். பொருளாதார நிலையிலும் நெருக்கடிகள் ஏற்படும். கண்களில் நோய், தவறான பெண்களின் சேர்க்கை, ரகசிய நோய்களுக்கு ஆளாக கூடிய நிலை, மர்ம உறுப்புகளில் நோய்கள், சர்க்கரை வியாதி போன்றவை ஏற்படும்.
கன்னியில் சுக்கிரன் நீசம் பெறுவது நல்லதல்ல என்றாலும் சுக்கிரனுடன் புதன் சேர்க்கை பெற்றிருந்தாலும், துலாத்தில் புதன் அமைந்திருந்து சுக்கிரனும் புதனும் பரிவர்த்தனை பெற்று நீசபங்க ராஜயோகம் உண்டாகிஇருந்தாலும் ஓரளவுக்கு சாதகப் பலன் ஏற்படும்.
பரணி, பூரம், பூராடம் போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு சுக்கிர தசா முதல் திசையாக வரும். சுக்கிரன் பலம் பெற்று அமைந்து குழந்தை பருவத்தில் சுக்கிர தசா நடைபெற்றால் நல்ல ஆரோக்கியம், சுகவாழ்வு, சத்தான உணவுகளை சாப்பிடும் வாய்ப்பு,
இளமை பருவத்தில் சுக்கிர தசா (Sukra Dasa) நடைபெற்றால் கல்வியில் மேன்மை, நல்ல அறிவாற்றல், பரந்த மனப்பான்மை, அழகான உடலமைப்பு, மற்றவர்களை கவர்ந்திழுக்கும் வசீகரம், சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாக அமையும்.
மத்திம வயதில் சுக்கிர தசா (Sukra Dasa) நடைபெற்றால் சுகவாழ்வு, சொகுசு வாழ்வு, பெண்களால் அனுகூலம், வசதி வாய்ப்புகளுடன் வாழும் யோகம் உண்டாகும். பொருளாதார நிலையும் உயரும். மணவாழ்வில் மகிழ்ச்சி, கணவன் மனைவியிடையே ஒற்றுமை உண்டாகும்.
முதுமை பருவத்தில் சுக்கிர தசா (Sukra Dasa) நடைபெற்றால் அனுகூலமான பயணங்கள், தாராள தன சேர்க்கை, குடும்பத்தில் மகிழ்ச்சி போன்ற யாவும் அமையும்.
சுக்கிரன் பலமிழந்து குழந்தை பருவத்தில் சுக்கிர தசா (Sukra Dasa) நடைபெற்றால் அடிக்கடி உடல் நிலை பாதிப்பு, பெற்றோருக்கு அனுகூலமற்ற நிலை உண்டாகும்.
இளமை பருவத்தில் நடைபெற்றால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு, தேவையற்ற பழக்க வழக்கங்களால் அவப்பெயர், குடும்பத்தில் பொருளாதார இடையூறுகள் உண்டாகும்.
மத்திம பருவத்தில் நடைபெற்றால் குடும்ப வாழ்வில் கருத்து வேறுபாடு, சுகவாழ்வு, சொகுசு வாழ்வு பாதிப்பு, பெண்களால் அவப்பெயர், வம்பு வழக்குகளை சந்திக்கும் சூழ்நிலை ஏற்படும்.
முதுமை பருவத்தில் நடைபெற்றால் உடல் நிலையில் பாதிப்பு, பொருளாதாரத்தடை, சர்க்கரை நோய்கள், ரகசிய நோய்கள், குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை ஏற்படும்.
சுக்கிரன் 12 வீடுகளில் இருந்து தசா நடக்கும் போது ஏற்படும் பலன்கள்.
- சுக்கிரன் லக்னத்தில் இருந்து தசா நடைபெற்றால் உடல்நலம் சிறப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். நல்ல புகழ், மேன்மைகளும் உண்டாகும். குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் நடைபெறும். உயர் வகையான ஆடை ஆபரணச் சேர்க்கைகள், பெண்களால் அனுகூலம், இல்லற வாழ்வில் இனிமை போன்ற யாவும் உண்டாகும்.
- சுக்கிரன் 2-ல் இருந்து தசா நடைபெற்றால் செல்வ சேர்க்கை, நல்ல பதவிகளை பெறும் யோகம், தனலாபம் பெருகும் வாய்ப்பு, வித்தை, கல்வி, கலை துறைகளில் வளர்ச்சி, உற்றார் உறவினர்களுடன் மகிழ்ச்சியாக வாழும் அமைப்பு, குடும்பத்தை சிறப்பாக நடத்தி செல்லும் ஆற்றல், சொன்ன சொல்லைக் காப்பாற்றும் அமைப்பு, மனநிலையில் உற்சாகம் உண்டாகும்.
- சுக்கிரன் 3ல் இருந்து தசா நடைபெற்றால் வீரம், விவேகம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி மேல் வெற்றி, ஆடை ஆபரண சேர்க்கை, சங்கீதம், இசை, கலை போன்ற துறைகளில் மேன்மைகள் உண்டாகும்.
- சுக்கிரன் 4-ல் இருந்து தசா நடைபெற்றால் உற்றார் உறவினர்களின் உதவியையும் அன்பையும் பெற முடியும். வண்டி வாகனம் சொந்த வீடு வாங்கும் யோகம் உண்டாகும். நல்ல தூக்கம், சுகபோக வாழ்க்கை, அதிநவீன பொருட்களை அனுபவிக்கும் அமைப்பு உண்டாகும்.
- சுக்கிரன் 5-ல் இருந்து தசா நடைபெற்றால் சிறப்பான தனலாபம், அரசாங்கத்தால் அனுகூலம், ஆடை அணிகலன்கள் சேரும் அமைப்பு, பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும் வாய்ப்பு, உத்தியோக நிலையில் அனுகூலம், சிறப்பான புத்திர பாக்கியம் பெறும் அமைப்பு உண்டாகும்.
- சுக்கிரன் 6-ல் இருந்து தசா நடைபெற்றால் பகைவரால் தொல்லை, மனைவி பிள்ளைகளுக்கு ஆரோக்கிய பாதிப்பு, பணவிரயம், கஷ்டம், உறவினர்களால் மனக்கவலை, வண்டி வாகனங்களால் வீண் செலவு, பெண்களால் அவமானம், தவறான தொடர்புகள் உண்டாகும்.
- சுக்கிரன் 7-ல் இருந்து தசா நடைபெற்றால் அழகான மனைவி அமைவாள். மனைவியால் மேன்மை இருக்கும். உயர்ந்த ஆடை ஆபரண சேர்க்கை வண்டி வாகன சேர்க்கை நவீனகரமான அலங்கார பொருள்களின் சேர்க்கை, திருமண சுபகாரியம் நிறைவேறும் அமைப்பு உண்டாகும்.
- சுக்கிரன் 8-ல் இருந்து தசா நடைபெற்றால் உடல்நலத்தில் பாதிப்பு, சர்க்கரை வியாதி, இல்லற வாழ்வில் பிரச்சனை, மனைவிக்கு ஆரோக்கிய பாதிப்பு, சொத்துக்களால் பிரச்சனை,தன விரயம், வண்டி வாகனங்களால் வீண் செலவு, குடும்பத்தில் வறுமை உண்டாகும்.
- சுக்கிரன் 9-ல் அமர்ந்து தசா நடைபெற்றால் புகழ் உயரும் அமைப்பு, எதிர்பாராத அதிர்ஷ்டங்கள், பூர்வீக சொத்துக்களால் அனுகூலம், கல்வி, கலைத்துறையில் நாட்டம் உயர்வு, பகைவரை வெற்றி கொள்ளும் அமைப்பு,தந்தைவழியில் மேன்மைகள் உண்டாகும்.
- சுக்கிரன் 10-ல் அமர்ந்து தசா நடைபெற்றால் பெரிய மனிதர்கள் தொடர்பு, புகழ், பெயர் உயர்வு நிலை, உற்றார் உறவினர்களால் அனுகூலம், வண்டி வாகனம் ஆடை ஆபரண சேர்க்கை, தொழில் வியாபாரத்தில் லாபமும் அரசாங்கம் மூலம் அனுகூலம், உயர்பதவிகள் கிடைக்கும் வாய்ப்பும் உண்டாகும்.
- சுக்கிரன் 11-ல் அமர்ந்து தசா நடைபெற்றால் விரும்பியவற்றை அடையும் யோகம், நல்ல அறிவாற்றல், சங்கீதம், நாட்டியம், கலைத்துறையில் உயர்வு, தனவரவுகள், தொழில் வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.
- சுக்கிரன் 12-ல் இருந்து தசா நடைபெற்றால் மனைவிக்கு பாதிப்பு, கண்களில் பிரச்சனை, வீண்விரயம், கலகம், தூக்கமின்மை, உறவினர்களால் நஷ்டம் விரோதம் உண்டாகும்.
ஜாதகம் தொடர்பான தங்களின் கேள்விகளை கீழ்காணும் Telegarm குழுவில் இணைந்து தெரிவிக்கலாம் …