திதி சூன்யம்” பற்றிய மிக முக்கியமான தகவல்கள்.

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

திதி சூன்யம்

ஜோதிட உலகத்தில் இதுவரை யாரும் சொல்லப்படாத “திதி சூன்யம்” பற்றிய மிக முக்கியமான தகவல்கள்.

★”திதி சூனியம்” என்பது ஜோதிடத்தில் அனைத்தையும் விட மிக மிக முக்கியமானதாகும்.

★திதி சூனியம் தான் நம்முடைய அடுத்தடுத்த பிறவிகளுக்கு காரணமாக இருக்கக் கூடிய ஒன்றாகும்.

★இந்த ஜென்மத்தில் நாம் செய்யக்கூடிய தவறுகளை சேகரித்து அதற்குத் தகுந்தாற்போல் நம்முடைய கர்மாவை சுமந்து கொண்டு அடுத்த பிறவியில் அதற்குத் தகுந்தவாறு நமக்கு தண்டனை கொடுக்கக் கூடியததே இந்த திதி சூன்ய வீடுகள் தான்.

★அதனால்தான் திதி சூன்யம் என்பது ஜோதிடத்தில் மிக மிக முக்கியமானதாகும்.

★இப்போது ஒவ்வொரு திதிக்கும் 2 திதி சூனியம் வீடுகள் இருக்கின்றன
அவற்றைப் பார்ப்போம்.

திதி சூன்யம்

1.பிரதமை ➡துலாம், மகரம்

2.துவிதியை ➡தனுசு,மீனம்

3.திருதியை ➡சிம்மம் மகரம்

4.சதுர்த்தி➡ரிஷபம்,கும்பம்

5.பஞ்சமி➡மிதுனம்,கன்னி

6.சஷ்டி➡மேஷம், சிம்மம்

7.சப்தமி➡கடகம்,தனுசு

8.அஷ்டமி ➡மிதுனம்,கன்னி

9.நவமி ➡சிம்மம்,விருச்சிகம்

10.தசமி ➡சிம்மம்,விருச்சிகம்

11.ஏகாதசி ➡தனுசு, மீனம்

12.துவாதசி ➡துலாம்,மகரம்

13.திரியோதசி ➡ரிஷபம்,சிம்மம்

14.சதுர்த்தசி ➡மிதுனம், கன்னி
தனுசு, மீனம்

★அம்மாவாசையில் மற்றும் பவுர்ணமி பிறந்தவர்களுக்கு திதி சூன்யம் கிடையாது.திதி சூன்ய வீடுகளும் கிடையாது.

★அமாவாசையில் பிறந்தவர்களுக்கு ராகு பகவானும்,பௌர்ணமியில் பிறந்தவர்களுக்கு கேது பகவானும் திதி சூன்ய அதிபதிகள் ஆகும்.
மேலும் இவர்களைத்தான் இவர்கள் வணங்க வேண்டும்.

★திதி சூனியம் என்பது நாம் பிறந்து திதிக்கு எத்தனை வீடுகள் இருக்கிறதோ. அந்த வீடுகள் சூன்ய வீடுகளாக மாறி விடும்.அதாவது power cut ஆகி விடும்.no signal ஆக மாறிவிடும்.

★அதாவது நமது லக்னத்திலிருந்து திதி சூன்ய வீடுகள் எந்த பாவமாக வருகிறதோ அந்த 2 பாவங்களும் திதி சூனியமாகி விடும்

★அதாவது திதி சூன்ய வீடுகள் எத்தனாவது பாவமாக வருகிறதோ அந்த பாவம் சார்ந்து நாம் என்ன தவறு செய்தாலும்,என்ன பித்தலாட்டம் செய்தாலும்,பொய் சொன்னாலும்,அந்த பாவம் சார்ந்து நாம் என்ன தீய செயல்கள் செய்தாலும்.நாம் செய்த குற்றம் யாராலும் நிரூபிக்கப்பட முடியாது.யாராலும் நாம் செய்த தவறை கண்டுபிடிக்க முடியாது.சாட்சியும் இருக்காது.

★உதாரணமாக ஒருவர் தனுசு லக்னத்தில் பிறந்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.அவர் பிறந்த திதி “சஷ்டி” என்று வைத்துக் கொள்வோம்.

★சஷ்டி திதிக்கு” மேஷம்,சிம்மம்” என்ற 2 வீடுகள் திதி சூன்ய வீடுகளாகும்.அதாவது 5 மற்றும் 9ம் பாவங்கள் ஆகும்.

★இந்த தனுசு லக்கின ஜாதகர் 5,9 இந்த இரண்டு பாவம் சார்ந்து என்ன தவறு செய்தாலும் என்ன பித்தலாட்டங்கள் செய்தாலும் என்ன பொய் சொன்னாலும்.அந்தக் குற்றம் வெளி உலகத்தில் யாராலும் நிரூபிக்க பட முடியாது. ஏனென்றால் அந்த இரண்டு பாவங்களும் சூனிய வீடுகள் ஆகிவிட்டது.

★இந்த தனுசு லக்ன ஜாதகர். காதல் சார்ந்த விஷயத்திலும் அல்லது காமம் சார்ந்த விஷயத்திலும் மற்றும் தொலைதூரப் பயணம் சார்ந்த விஷயத்திலும் என்ன தவறு செய்தாலும் என்ன பித்தலாட்டங்கள் செய்தாலும் என்ன பொய் சொன்னாலும் அந்த குற்றம் யாராலும் நிரூபிக்க முடியாது.

திதி சூன்யம்

★இதில் இருக்கும் nagative என்னவென்றால் திதி சூனியம் பாவங்கள் சார்ந்த நாம் என்ன தவறு செய்தாலும் நிரூபிக்க முடியாது என்பது போல.அந்த பாவம் சார்ந்து நமக்கு மற்றவர்கள் என்ன தவறு செய்தாலும் அந்த குற்றத்தையும் நம்மால் நிரூபிக்க முடியாது.

★இப்பொழுது 5ம் பாவம் திதி சூன்யமாக எடுத்துக் கொள்வோம்.5ம் பாவம் என்பது காதல் உறவு இதனை சார்ந்து மற்றவர்கள் நமக்கு துரோகம் செய்தாலும் அந்த குற்றத்தை நம்மால் நிரூபிக்க முடியாது.

★அதாவது திதி சூனியம் வீடுகள் சார்ந்து நாம் என்ன தவறு செய்கிறோமோ அதற்கு தண்டனையாக நமக்கு அந்த பாவம் சார்ந்து மற்றவர்கள் என்ன தவறு செய்தாலும் அதனை நம்மால் நிரூபிக்க முடியாது.இதுதான் திதி சூன்யமாகும்.

★திதி சூனியம் பாவம் சார்ந்து நாம் எந்த தவறையும் செய்யக்கூடாது.மீறி தவறு செய்தால் அது நமது கர்மாவில் கலந்து நம்முடைய அடுத்தடுத்த பிறவிகளுக்கு காரணமாகிவிடும்.
அடுத்த பிறவியில் அதற்கு தகுந்தார்போல் நமக்கு தண்டனையும் கொடுத்துவிடும்.

★நமது லக்னத்திலிருந்து திதி சூனியம் வீடுகளை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
உதாரணமாக சிம்ம லக்னத்தில் பிறந்தவரை எடுத்துக் கொள்வோம்.சப்தமி திதியில் பிறந்திருக்கிறார் என்றால் அவருக்கு கடகம் மற்றும் தனுசு இரண்டு வீடுகள் திதி சூன்ய வீடுகள் ஆகும்.சிம்ம லக்னத்திற்கு கடகம் மற்றும் தனுசு எத்தனாவது பாவமாக வருகிறது என்று பாருங்கள்.

★அந்த இரண்டு பாவங்கள் தான் திதி சூனியமாகும்.அதாவது 5 மற்றும் 12 பாவங்கள் வரும்.இப்படித்தான் எல்லா திதிகளுக்கும் கண்டுபிடிக்க வேண்டும்.

★அம்மாவாசை மற்றும் பௌர்ணமியில் பிறந்தவர்களுக்கு இந்த சூட்சமம் பொருந்தாது.

★மேலும் திதி சூன்ய அதிபதியை அசுப கிரகங்களாகிய ராகு, கேது, சனி,செவ்வாய், சூரியன், போன்ற ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்களின் சேர்க்கையோ, பார்வையோ, தொடர்போ இருந்தால் நம்முடைய உறவுநிலைகள் கெட்டுவிடும்.
உறவுகள் மூலமாக நமக்கு கஷ்டங்களும் பிரச்சினைகளும் ஏற்படும்.

★உதாரணமாக பகவான்
ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி பிறந்த திதி நவமி திதி ஆகும்.நவமித் திதிக்கு அதிபதி சூரியனாகும்.

★அவருடைய ஜாதகத்தில் சூரியனை அசுப கிரகங்களாகிய சனியும் செவ்வாயும் உச்சமாக தொடர்பு கொண்டிருப்பார்கள்.

★இதனால்தான் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி தனது வாழ்க்கையில் உறவுகள் மூலமாக அனைத்து கஷ்டத்தையும் அனுபவித்தார்.

★ஸ்ரீராமருக்கு அனைத்து கஷ்டங்களும், பிரச்சினைகளும் மற்றும் வேதனைகளும் உறவுகள் மூலமாக தான் ஏற்பட்டது.

★மேலும் அவரவர் பிறந்த திதிக்கு அதிபதியை ஒன்றுக்கு மேற்பட்ட அசுப கிரகங்களின் சேர்க்கையோ பார்வையோ தொடர்போ இருக்கிறதா என்று பாருங்கள்.அப்படி இருந்தால் உறவுகள் சார்ந்த விஷயத்தில் மிக மிக கவனமாக இருந்து கொள்ளுங்கள்.

★இல்லை என்றால் பிரச்சினைகளும், வேதனைகளும், கஷ்டங்களும், நமக்கு உறவுகள் மூலம் வந்து விடும்.

★இதனை முன்கூட்டியே தெரிந்து கொண்டு நாம் கவனமாக இருந்து கொண்டால் ஓரளவுக்கு சமாளித்து விடலாம்.

★பரிகாரத்திற்கு நாம் பிறந்த திதி வேலை செய்யாது.இந்த பூமியில் நம்முடைய ஆத்மா முதன்முதலில் ஜனனம் எடுத்த கரு உருவான திதி தான் வேலை செய்யும்.

★எந்த திதியில் நம்முடைய முதல் கரு உருவானது என்பதை கண்டுபிடிக்க நாம் பிறந்த திதியில் இருந்து 9 திதிகளை கழித்தால் வரும் திதி தான் நம்முடைய தாயின் கர்ப்பப்பையில் நாம் உருவான திதியாகும்.

★உதாரணமாக தசமி திதியில் ஒருவர் பிறந்து இருக்கிறார் என்று எடுத்துக் கொள்வோம். அதிலிருந்து 9 திதிகளை கழித்துக் கொண்டால் பிரதமை திதி வரும்.இந்த திதியில் தான் இவருடைய கரு முதன்முதலில் உருவானதாகும்.

★திரியோதசி திதியில் பிறந்தவர்கள் எடுத்துக் கொள்வோம்.இவர்களின் கரு உருவான திதி சதுர்த்தி திதி ஆகும்.

★நம்முடைய ஆத்மா உருவான திதிக்கு எந்த கிரகம் அதிபதியோ அந்த கிரகத்திற்கு தான் நாம் பரிகாரம் செய்ய வேண்டும்.
அப்போதுதான் பரிகாரம் வேலை செய்யும்.இல்லையென்றால் பரிகாரம் வேலை செய்யாது.

★நாம் பிறந்த திதியும் கணக்கில் எடுத்துக் கொண்டு அதில் இருந்து ஒன்பது திதிகளை கழிக்க வேண்டும்.

Leave a Comment

error: Content is protected !!