திரிக்கிரக யோகம்
மூன்று கிரகங்கள் ஒரு ஜாதக கட்டத்தில் சேர்ந்து இருப்பதற்கு திரிக்கிரக யோகம் என்று பெயராகும். திரி என்றால் மூன்று என்பது பொருள். இது பெரும்பாலான ஜாதகத்தில் காணப்படும் யோகம் தான் இந்த யோகம்.
இந்த யோகத்தால் யாருக்கெல்லாம் நன்மை
ஒரு ஜாதகத்தில் 2,5,9,10,11 ஆகிய அதிபதிகள் யாரேனும் மூவர் சேர்ந்து ஒரே இடத்தில் சுப கிரக பார்வை பெற்று காணப்பட்டால், இந்த திரிக்கிரக யோகம் நன்மை செய்யும்.
அதிலும் இவர்களில் யாரேனும் ஒருவர் உச்சம் பெற்று அல்லது ஆட்சி பெற்று விட்டால் இன்னும் அபார நன்மைகளை இந்த யோகம் செய்யும்.
ஆனால் அதே சமயத்தில் மேல் சொன்ன 2,5,9,10,11 ஆகிய அதிபதிகள் 3, 6, 8, 12 ஆகிய வீடுகளுக்கும் அதிபதிகளாக இருத்தல் கூடாது. அப்படி ஒரு வேலை இருந்தால் இந்த திரிக்கிரக யோகம் நன்மையை செய்யாது.
திரிக்கிரக யோகத்தின் பலன்கள்
ஜாதகத்தில் 3, 6, 8, 12 ஆகிய அதிபதிகளில் யாரேனும் மூவர் கூடி ஒரு கட்டத்தில் இருந்தால் இந்த திரிக்கிரக யோகம் பெரும் தீமையை செய்துவிடலாம்.
- இந்த மூவரும் சேர்ந்து லக்னத்தில் இருந்தால் ஜாதகரின் உடல்நிலை பாதிக்கப்படும்.
- 2-ம் இடத்தில் இருந்தால் செல்வம் சேராது. அதைவிட கடன் அதிகரிக்கும்.
- 3-ம் இடத்தில் இருந்தால் உடன் பிறந்த உறவுகளுடன் நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
- 4-ம் இடத்தில் இருந்தால் சொத்துக்களில் வில்லங்கம் ஏற்படும். அல்லது சரியான வீடு அல்லது வாகனம் அமையாது. வாழ்க்கையில் தன்னிறைவு அடைய காலதாமதம் ஆகலாம்.
- 5-ம் இடத்தில் இருந்தால் ஞாபக சக்தி குறையும். வெளிநாடு யோகம், கல்வி, புகழ் தடைப்படும். அவர்களுக்கு பூர்வ ஜென்ம புண்ணியம் இருக்காது. அதனால் இந்த ஜென்மத்தில் பல கஷ்டங்களை அனுபவிக்க நேரிடும்.
- 6-ம் இடத்தில் இருந்தால் கடன் பெருகும். ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
- 7-ம் இடத்தில் இருந்தால் நல்ல வாழ்க்கைத் துணை அமையாமல் போகலாம்.
- 8-ம் இடத்தில் இருந்தால் தான் போன போக்கில் போவார்கள். நன்மை தீமைகள் அறியாது எண்ணிய மாத்திரத்தில் எதையும் செய்து விட்டு வருந்துவார்கள்.
- 9-ம் இடத்தில் இருந்தால் தந்தைக்கு நன்மை செய்யாது. தந்தை வழியில் கூட வீண் விரோதங்கள் ஏற்படும்.
- 10-மிடத்தில் இருந்தால் தொழில் சரியாக அமையாது.
- 11-ம் இடத்தில் இருந்தால் மூத்த உடன் பிறந்தவர்களுக்கு கண்டதை கூட தரும். தேவையில்லாத முதலீடுகள் பண இழப்பை ஏற்படுத்தும்.
- 12-ம் இடத்தில் இருந்தால் வரவுக்கு மேல் செலவு ஏற்படும். பணம் கையில் தாங்காது.
இந்த நிலையில் இவற்றுக்கெல்லாம் ஒரே பரிகாரம்
கோளறு பதிகம் தினமும் குறைந்தது 9 முறை படிப்பது ஆகும்