துலாம் ராசி
❤நியாயம், நீதி, நேர்மை தவறாதவரும். நாவன்மை உடையவருமான நீங்கள், எல்லோருமே அப்படித்தான் இருக்கணும்னு நினைப்பீர்கள். யாருடைய மனமும் நோகக்கூடாது என்று நினைக்கிற நீங்கள் சற்று உணர்ச்சி வசப்படுற குணத்தை மட்டும் உதறிவிடுவது நல்லது.
❤சுமையாகவே இருந்தாலும் அதை புலம்பாம ஏற்று செய்யக்கூடிய நீங்கள் அதனாலேயே ஏமாளியாக்கப்படுறதையும் உணர்வது உத்தமம்.
❤சுக்கிரனுடைய ஆதிக்கம் உள்ள ராசியில் பிறந்த உங்களுக்கு இயல்பாகவே அழகு உணர்ச்சி,பிறரிடம் அன்பு செலுத்தும் குணம் இதெல்லாம் இருக்கும்.
❤ஆடை, அலங்காரம், ஆபரண ப்ரியரான நீங்கள் அதையெல்லாம் பத்திரமா வச்சிக்கிறது முக்கியம். வெளுத்ததெல்லாம் பாலுன்னு நம்பி எல்லோரிடமும் குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்வதை தவிர்த்தால் எதிர்காலத்தில் இடைஞ்சல் எதுவும் வராது.
❤எவ்விதமான புதிய முயற்சிகளையும் தொடங்குற சமயத்துல யாராவது ஏழைக்கு தயிர்சாதமும், நீரும் தானம் செய்துவிட்டு தொடங்குங்கள். அல்லது கோயில் அன்னதானத்திற்கு இயன்ற அளவு அரிசி வாங்கி கொடுங்கள். இதை வெள்ளிக்கிழமையில் செய்தால் விசேஷம்.
❤உங்கள் பெயரால் அமையக்கூடிய வீட்டோட தலைவாசல் தெற்கு திசை நோக்கி இருப்பது நல்லது. மேற்கு வாசல் ஆனாலும் பரவாயில்லை.
❤உங்களுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடிய நிறம் இளம் சந்தன நிறம்,வெண்மையும் நன்மையும் தரும் என்றாலும் அது பளீர் வெண்மையாக இல்லாமல் லேசாக பழுப்பு கலந்ததா இருக்கிறது நல்லது. இந்த நிறத்தில் ஆடை அணியனும்னு அவசியம் இல்லை என்றாலும் கர்சீப் ஒன்றையாவது வைத்து கொள்வது நல்லது.
❤வெள்ளிக்கிழமைகளில் பார்வதி தேவியை நெய் தீபம் ஏற்றி வைத்து கும்பிடுவது நல்லது. அன்றைய தினம் அசைவம் தவிருங்கள். முடிந்தால் ஒருவேளை விரதம் இருங்கள். அம்மன் அருளால் உங்கள் வாழ்க்கையில் நிம்மதி நிறையும்.